தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இதன் பின்னர் சில படங்களில் நடித்தாலும் பெரிய வரவேற்பை பெறவில்லை. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் யாஷிகா.
2021ல் கடந்தாண்டு கார் விபத்தில் தனது தோழியை பறிக்கொடுத்தவர்.
யாஷிகாவுக்கு காலில் பலத்த அடிபட்டு நடக்கவே முடியாமல் பல மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது குணமாகி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார் யாஷிகா.
பல போட்டோஷூட்களில் கலந்துக் கொண்டு தன் வழக்கமான கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று ஏப்ரல் 1ல் தான் திருமணம் செய்ய போவதாக கூறி.. “என் பெற்றோர் சம்மதித்துவிட்டனர். இது செட்டிலாகும் நேரம்.
சினிமாவை விட்டு விலக மாட்டேன். எப்போதும் உங்களை மகிழ்விப்பேன். காதல் செட் ஆகாது, இது நிச்சயிக்கப்பட்ட திருமணம். அனைவரின் ஆசீர்வாதம் தேவை” என பதிவிட்டார் யாஷிகா
எனவே ரசிகர்கள் பலரும் அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் சில மணிநேரங்களில் ‛‛எனக்கு திருமண வாழ்த்து சொன்ன அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துக்கள். இன்னும் 10 ஆண்டுகளுக்கு திருமணம் செய்ய போவதில்லை” என்றார் யாஷிகா.
ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்பதால் அனைவரையும் ஏப்ரல் ஃபூல் செய்துள்ளார் யாஷிகா.
ஆனால் யாஷிகாவின் இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.
அட… வாழ்த்து சொன்னது குத்தமா.?
Yashika Anand announces wedding on April Fools Day