தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், சௌந்தரராஜா, கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த படம் ‘பத்து தல’.
ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய 2 வெற்றி படங்களுக்குப் பிறகு சிம்புவின் நடிப்பில் ‘பத்து தல’ வெளியானதால் ரசிகர்கள் அதனை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
படமும் முதல் நாளில் உலகளவில் ரூ 12 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இன்று ஏப்ரல் 7 தேதி 300-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக பட குழுவின் அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
2வது வாரத்திலும் பத்து தல வெற்றி நடை போடுவதால் சிம்பு ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Pathu Thala Marching into 2nd week with 300 screens