ஒற்றைக்கால் பிரபுதேவாவை இயக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ இயக்குனர்..; டைட்டில் என்ன தெரியுமா.?

ஒற்றைக்கால் பிரபுதேவாவை இயக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ இயக்குனர்..; டைட்டில் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரும், ‘இரண்டாம் குத்து’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானவர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இவரது இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’.

இந்தப் படத்தில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக, ஒற்றைக்காலுடன் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் ‘பிக்பாஸ்’ பிரபலம் ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

பல்லூ ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, டி. இமான் இசையமைக்கிறார்.

ஆக்சன் எண்டர்டெய்ன்மெண்ட் ஜானரில் தயாராகும் இந்த படத்தை மினி ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் வினோத்குமார், டார்க் ரூம் பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

The first look poster of Prabhu Deva’s next film is out now

சோடா கம்பெனிக்கு முதலாளியானார் ‘கமலி’ ஆனந்தி

சோடா கம்பெனிக்கு முதலாளியானார் ‘கமலி’ ஆனந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதாநாயகியாக இல்லாமல் கதையின் நாயகியாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ‘கயல்’ ஆனந்தி.

விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, கமலி FROM நடுக்காவேரி ஆகிய படங்கள் இவரது பெயர் சொல்லும்.

இந்த நிலையில் தெலுங்கில் ‘ஸ்ரீதேவி சோடா சென்டர்’ என்ற படத்தில் சூரி பாபுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஆனந்தி. இதில் சோடா கம்பெனி முதலாளியாக நடித்துள்ளார்.

சுதீர் பாபு இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சினிமாவில் நடிக்க மாட்டார் வாய்ப்புகள் இருக்காது என சிலர் எதிர்பார்த்த நிலையில் திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

தற்போது ஆனந்தி கைவசம் ‘ஏஞ்சல்’, டைட்டானிக், அலாவுதினின் அற்புத கேமரா ஆகிய படங்கள் உள்ளன.

Kamali Anandhi’s new film is titled Sridevi Soda center

‘பொன்னியின் செல்வன்’ அப்டேட் : ஐஸ்வர்யாராய் முதல் விக்ரம் பிரபு வரை யாருக்கு என்ன கேரக்டர்.? முழு தகவல்கள்

‘பொன்னியின் செல்வன்’ அப்டேட் : ஐஸ்வர்யாராய் முதல் விக்ரம் பிரபு வரை யாருக்கு என்ன கேரக்டர்.? முழு தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதை அதே பெயரில் படமாக உருவாகி வருகிறது.

இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம்.

இதனை PS 1 என்றும் அழைக்கின்றனர். இதனை தமிழ் ஆர்வலர்கள் எதிர்த்து வருகின்றனர்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என்கின்றனர படக்குழுவினர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் யார் யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி…

ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, வானதியாக ஷோபிதா.

பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், கடம்பூர் சம்புவரையராக நிழல்கள் ரவி, மலையமானாக லால், ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், அநிருத்த பிரம்மராயராக பிரபு, சோமன் சாம்பவனாக ரியாஸ் கான், ரவிதாசனாக கிஷோர்.

சேந்தனாக அமுதன் – அஸ்வின், கந்தன் மாறனாக விக்ரம் பிரபு, மதுராந்தகனாக அர்ஜுன் சிதம்பரம், பார்த்திபேந்திர பல்லவனாக ரஹ்மான், குடந்தை ஜோதிடராக மோகன்ராம் நடிப்பதாக வெளியானது.

இந்த பட்டியலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

Ponniyin Selvan Character introduction out

‘அண்ணாத்த’ அல்டிமேட்..; படத்தை பார்த்துவிட்டு ரஜினிக்கே ஷாக் கொடுத்த டீம்

‘அண்ணாத்த’ அல்டிமேட்..; படத்தை பார்த்துவிட்டு ரஜினிக்கே ஷாக் கொடுத்த டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் திரைப்படம் ’அண்ணாத்த’.

இமான் இசையில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முத்து, வீரா படங்களுக்கு பிறகு நீண்ட வருட இடைவெளிக்கு பிறகு ரஜினியுடன் மீனா நடித்து வருவதால் அவர்களது ரசிகர்கள் இந்த சூப்பர் ஜோடியை திரையில் காண ஆர்வமாக உள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை வடபழனியிலுள்ள ஃபோரம் மாலில் நடந்து முடிந்தது.

இதனையடுத்து தன் டப்பிங் பணியை ரஜினிகாந்த் முடித்து கொடுத்தார்.

இந்த நிலையில் தற்போது மீனா தன்னுடைய டப்பிங் பணியை செய்து முடித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார்.

இவர்களைத் தொடர்ந்து நடிகை குஷ்பூவும் தன் டப்பிங் பணிகளை மேற்கொள்கிறார்.

ரஜினியை திரையில் காண ஆவலாக இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார் குஷ்பூ.

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ தயாரிப்பு நிறுவனம் சிலருக்கு படத்தை போட்டுக் காட்டியதாம்.

அவர்கள்.. அல்டிமேட் அண்ணாத்த  என படத்தை பாராட்டி ரஜினிக்கும் போன் செய்தார்களாம்.

Latest big update on Super Star Rajinikanth’s Annaatthe is here – check out!

ஒரு படத்தை தயாரிப்பதுதான் கடினம்.; ‘பார்கவி’ மூலம் இயக்குனராக மாறிய தயாரிப்பாளர் வீ ராஜா

ஒரு படத்தை தயாரிப்பதுதான் கடினம்.; ‘பார்கவி’ மூலம் இயக்குனராக மாறிய தயாரிப்பாளர் வீ ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுமுகங்களை வைத்து ‘பார்கவி’ என்ற படத்தை தயாரித்து, இயக்க இருக்கிறார் ‘அருவா சண்ட’ படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான வீ. ராஜா.

கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி இயக்குனரின் பிறந்த நாளான அன்று படத்தின் தலைப்பை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

சினிமா கலைஞர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியிலும் படத்தின் தலைப்பும் அதன் தோற்றமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தை பற்றி இயக்குனரும், தயாரிப்பாளருமான V.ராஜா கூறியதாவது…

ஒரு படத்தை இயக்குவது பெரிய வேலை இல்லை. படத்தை தயாரிப்பது தான் கலைத்துறையில் கடினமான விஷயம் எனவே தயாரிப்பை விட சுலபமானது தான் இந்த இயக்குனர் வேலை.

இயக்குனர் மட்டும் அல்லாமல் பல கலைஞர்களை உருவாக்கி அவர்களுக்கு வசதியான வாழ்வியலை உருவாக்கி கொடுத்த பல தயாரிப்பாளர்கள் நிலமை இன்று கேள்விக்குறியாக உள்ளது.

எனவே எனது படைப்பான ” பார்கவி ” படத்தின் கதை, திரைக்கதையை நானே எழுதி இயக்குகிறேன்.

‘பார்கவி’ படம் வரலாற்று படமாகும், பிரமாண்டமான படத்தை எனது அனுபவத்தையும் எனக்கு உறுதுணையாக மிக அனுபவம் வாய்ந்த இயக்குனர் பாண்டி செல்வா மற்றும் ராஜி கோபி இருவரையும் இணை இயக்குனர்களாகவும், படத்தின் பலமாக அருவா சண்ட படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பாண்டியும் உடன் இருக்க குறைந்த பட்ஜெட்டில் பிரமாண்டமான படத்தை என்னால் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதுமட்டும் அல்லாது தேசிய விருது பெற்ற எடிட்டர் V J சாபு ஜோசப் இருக்கிறார்.

இந்த படத்தில் அனைத்து டெக்னீசியன்களும் மிகவும் அனுபவம் மட்டும் அல்ல நுனுக்கமான தொழில் நுட்பமும் தெறிந்தவர்கள், எனவே படம் வெற்றி படமாக அமைவது உறுதி.

படத்தின் கதாநாயகன் முகேஷ் பட்டதாரி இளைஞன், கதாநாயகி ஸ்ரேயா மாடலிங் துறையில் நல்ல அனுபவம் உள்ளவர் இருவரும் நடிப்பு பயிற்சிகள் பெற்று வருகிறார்கள்.

விரைவில் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிப்புடன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

கதை, திரைக்கதை, இயக்கம் – v ராஜா
கதாநாயகன் – முகேஷ்
கதாநாயகி – ஸ்ரேயா
ஒளிப்பதிவு – சந்தோஷ் பாண்டி
இணை இயக்குனர்கள் – பாண்டி செல்வா & ராஜி கோபி
எடிட்டர் – V J சாபு ஜோசப்
நடனம் – ராதிகா
உடைகள் – அமல்ராஜ்
புகைப்படம் – stills விஜய் மணி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
டிசைன்ஸ் – சிந்து கிராபிக்ஸ்
இணை தயாரிப்பு – முகேஷ் குமார்
தயாரிப்பு – v ராஜா
தயாரிப்பு நிறுவனம் – ஒயிட் ஸ்கிரீன் புரொடக்‌ஷன்.

Producer V Raja turns director for his new film Bargavi

வெப்சீரிஸில் ஹ்ருத்திக் ரோஷனுக்கு ஜோடியாகும் நபா நடேஷ்

வெப்சீரிஸில் ஹ்ருத்திக் ரோஷனுக்கு ஜோடியாகும் நபா நடேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகைகளான பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, ராகுல் பிரீத் சிங் ஆகியோர் வரிசையில் தற்போது தெலுங்கில் இளம் நடிகையாக வலம் வரும் நபா நடேஷ் முக்கிய இடத்தை பிடிக்க இருக்கிறார்.

ஆம்.. அவர்களை போலவே தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார் நபா நடேஷ்..

கன்னடத்தில் கடந்த 2015ல் வஜ்ரகயா என்கிற படம் மூலம் அறிமுகமான நபா நடேஷ். அதை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்.

புகழ்பெற்ற நடிகர் பிரகாஷ் பெலவாடியின் தியேட்டர் குரூப் வழியாக முறைப்படி நடிப்பு கற்றுக்கொண்டு நடிக்க வந்ததால் தெலுங்கு படவுலகில் சிறந்த பெர்பார்மர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.

கடந்த இரண்டரை வருடங்களில் தெலுங்கில் அவர் நடித்த படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் மட்டுமே 275 கோடி.

மேலும் இந்தியில் ஹிட்டான அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இளம் முன்னணி நடிகர் நிதினுடன் நபா நடேஷ் இணைந்து நடித்துள்ள மேஸ்ட்ரோ திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது முதன்முதலாக பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார் நபா நடேஷ். ஆனால் திரைப்படத்தில் அல்ல.

திரைப்படங்களுக்கு இணையாக முக்கியத்துவம் பெற்று வரும் வெப்சீரிஸில்.. ஆம்.. பாலிவுட் முன்னணி நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் இந்தியில் உருவாகும் வெப்சீரிஸ் ஒன்றில் தான் அவருக்கு ஜோடியாக தனி நாயகியாக நடிக்க ஆடிஷனில் சிறப்பாக நடித்து தேர்வாக இருக்கிறார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிக்கும் முதல் வெப்சீரிஸும் இதுதான்.

இந்தியிலும் தனது சாதனை தடத்தை நபா நடேஷ் பதிப்பார் என நம்புவோம்.

Bollywood debut on the cards for the Telugu star actress Nabha Natesh

More Articles
Follows