கௌதம் – சரத்குமார் இணைந்த ‘கிரிமினல்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

கௌதம் – சரத்குமார் இணைந்த ‘கிரிமினல்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கிரிமினல்’ படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்குகிறார் தக்ஷிணா மூர்த்தி. படத்தை பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் தக்ஷிணா மூர்த்தி கூறுகையில்…

“எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பாராட்டுகள் கிடைத்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இயக்குநராக முயற்சி செய்து கொண்டிருந்த போது, ஒன்றிரண்டு கதைகளை எழுதியிருந்தேன்.

அவற்றை நிறைவேற்றுவதற்கு நிறைய தடைகளை கடக்க வேண்டியிருந்தது. இந்த நேரத்தில், ஒரு டீக்கடையில் எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

அதுதான் ‘கிரிமினல்’ ஆரம்பித்த புள்ளி. தயாரிப்பாளர்களான பர்சா பிக்சர்ஸ் மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் ஆகியோர் இந்தக் கதையைக் கேட்டபோது அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

கதைக்குள் கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் வர படம் இன்னும் பெரிதாகியது. படத்தில் எந்த விதத்திலும் தலையிடாமல் எனக்கு தேவையான சுதந்திரத்தைத் தயாரிப்பாளர்கள் கொடுத்தனர். மிகப் பெரிய பொருட்ச்செலவில் படம் சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

அவர் தொடர்ந்து கூறும்போது…

“மதுரையை களமாகக் கொண்ட பல காதல் திரைப்படங்கள் வந்துள்ளது. ஆனால் இதில் இருந்து ‘கிரிமினல்’ திரைப்படம் விதிவிலக்காக இருக்கும்.

நகரத்தில் நடக்கும் க்ரைம்-த்ரில்லரையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. படக்குழுவினர் அனைவரும் கொடுத்த ஆதரவும் படத்தில் பணியாற்றிய அனுபவமும் எனக்கு மறக்க முடியாத நினைவாக இருக்கும். இந்தப் படத்துக்காக மதுரையைச் சேர்ந்த பல உள்ளூர்வாசிகளை சொந்தக் குரலில் நடிக்கவும், டப்பிங் செய்யவும் வைத்துள்ளோம்.

ஒரு வயதான பெண்மணி டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது ஆச்சரியமடைந்து…

’உண்மையிலேயே மதுரையில் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா?’ என்று கேட்டார். படப்பிடிப்பின் போது எனக்கு இருந்த மன அழுத்தம் முழுவதும் அவரது பாராட்டு வார்த்தைகளால் காற்றில் மறைந்தது. திரையரங்குகளில் வெளியாகும் முன்பே படம் நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பார்வையாளர்களுக்கும் சீக்கிரம் படத்தைக் காட்ட ஆர்வமாக உள்ளோம்” என்றார்.

படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து இருக்கிறார். பாடல்களை சினேகன் எழுதியிருக்க, ஒளிப்பதிவை பிரசன்னா எஸ் குமார் கையாண்டுள்ளார். படத்தொகுப்பை மணிகண்ட பாலாஜி கவனிக்கிறார்.

இப்படத்தின் ஆடியோ, டிரைலர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

கிரிமினல்

Gautham karthik and sarathkumar’s ‘Criminal’ movie first look release

JUST IN கேப்டனை இப்படி பார்க்க முடியல.; விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் ‘படைத்தலைவன்’ டைட்டில் ரிலீஸ்

JUST IN கேப்டனை இப்படி பார்க்க முடியல.; விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் ‘படைத்தலைவன்’ டைட்டில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் கேப்டன் என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் விஜயகாந்த். இவர் சினிமாவில் நடிக்க தொடங்கிய முதல் படத்திலேயே நாயகனாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பல சமூக கருத்துள்ள படங்களில் நடித்து வந்த இவரை தொண்டர்கள் ஒரு தலைவனாகவே பார்த்தனர்.

இவரது படங்களில் ஏழை எளிய மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். அதன் பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட்டு அதிமுகவுக்கு அடுத்த கட்சியான திமுகவை வீழ்த்தி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆக உருவெடுத்தார் விஜயகாந்த்.

படைத்தலைவன்

அதன் பின்னர் இவரது உடல்நிலை பாதிக்கப்படவே தற்போது சினிமாவிலும் அரசியலிலும் ஈடுபடாமல் ஓய்வெடுத்து வருகிறார்.

இன்று ஆகஸ்ட் 25ஆம் தேதி தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

விஜயகாந்தின் 71வது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிகவினர் கொண்டாடி வருகின்றனர்.

விஜயகாந்த்

உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வீல் சேரில் அமர்ந்தவாறு ரசிகர்களையும் தேமுதிக தொண்டர்களையும் பார்த்து கை அசைத்தார் விஜயகாந்த். இதனால் அவரது தொண்டர்கள்.. “எங்கள் கேப்டனை இந்த நிலைமையில் பார்க்க முடியவில்லை. என கதறி அழுதனர்.

மேலும் தன் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘படைத்தலைவன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார் விஜயகாந்த்.

இளையராஜா இசையில் உருவாகும் இந்த படத்தை அன்பு என்பவர் இயக்குகிறார்.

இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு.

படைத்தலைவன்

Padai Thalaivan title release on Vijayakanth birthday party

ஆஸ்கார் வின்னர் கீரவாணி இசையமைத்த ‘சந்திரமுகி 2’ பட பிரம்மாண்ட இசை வெளியீடு

ஆஸ்கார் வின்னர் கீரவாணி இசையமைத்த ‘சந்திரமுகி 2’ பட பிரம்மாண்ட இசை வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சந்திரமுகி 2’.

இப்படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.

‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘சந்திரமுகி- 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு சென்னை ஜேப்பியர் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்து உள்ளது.

இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்தது.

raghava Lawrence’s ‘Chandramukhi 2’ audio launch to happen today

‘கடைசி விவசாயி’ படத்திற்கு 2 தேசிய விருதுகள்.; மகிழ்ச்சியில் மணிகண்டன் நெகிழ்ச்சி கடிதம்

‘கடைசி விவசாயி’ படத்திற்கு 2 தேசிய விருதுகள்.; மகிழ்ச்சியில் மணிகண்டன் நெகிழ்ச்சி கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனைவருக்கும் அன்பான வணக்கம்.
மக்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட கடைசி விவசாயி திரைப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரமாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரைபல் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “கடைசி விவசாயி” படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைக்க காரணமாக இருந்த விருது தேர்வு குழுவினருக்கும், இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும், மூத்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், இணையதள ஊடகங்களுக்கும் இந்நேரத்தில் என் சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடைசி விவசாயி

கடைசி விவசாயி படத்தினில், முதிய வயதிலும் சோர்வின்றி நடித்து, அக்கா கதாப்பாத்திரத்தை உயிர்ப்பித்து, கொண்டாட வைத்த மறைந்த அய்யா நல்லாண்டி அவர்களுக்கும், இப்படத்தினை உருவாக்க மிகபெரும் ஒத்துழைப்பை தந்த ஊர்மக்களுக்கும், இப்படத்தினை உலகம் முழுதும் கொண்டு சேர்த்த Vijaysethupathi Production மற்றும் 7cs Entertaiments நிறுவனங்களுக்கும், இந்தப் படத்தினை உருவாக்க உறுதுணையாகவும் இருந்து, சிறப்பாக நடித்தும் கொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுக்கும், சக தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேசிய விருதுக்காக மனதார பாராட்டிய மக்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 69 வது தேசிய விருதுகளில், தமிழ் மொழிக்கு, கடைசி விவசாயி படம் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது மிகப்பெரும் மகிழ்ச்சியை தருகிறது.

இது போல படைப்புகளை உருவாக்க, இந்த விருது மிகப்பெரிய ஊக்கம் தந்துள்ளது. மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
ம.மணிகண்டன்

கடைசி விவசாயி

Thank you note from director M. Manikandan

அன்றே கணித்த அஜித்..; பாலிவுட்டில் நுழைந்தார் ‘சார்பட்டா பரம்பரை’ வேம்புலி

அன்றே கணித்த அஜித்..; பாலிவுட்டில் நுழைந்தார் ‘சார்பட்டா பரம்பரை’ வேம்புலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஜான் கொக்கேன்.

இப்படத்தை தொடர்ந்து அஜித் நடித்த ’துணிவு’ படத்தில் வில்லனாக நடித்தார். மேலும் தமிழில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜான் கொக்கேன், தற்போது பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.

ப்ரைடே ஸ்டோரி டெல்லர்ஸ் (Friday story tellers) தயாரிப்பில் இயக்குனர் பாவ் துலியா இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய வெப் சீரியஸ் ‘தி ப்ரிலான்சர்’. (The Freelancer). கிரியேட்டிவ் ஹெட்டாக நீரஜ் பாண்டே பணியாற்றும் இந்த வெப் தொடர், ஒரு புனைக்கதை மற்றும் “எ டிக்கெட் டு சிரியா” புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது.

இதில் ஜான் கொக்கேன் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார். விடாமுயற்சியுடன், உண்மையைக் கண்டறியவும், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கண்டறியும் அதிகாரியாக இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

தி ப்ரிலான்சர்

இந்த வெப் தொடரில் தென்னிந்திய நடிகர்களில் ஜான் கொக்கேன் மட்டுமே தேர்வாகி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

*இது குறித்து ஜான் கொக்கேன் கூறுகையில்….

‘துணிவு’ படப்பிடிப்பில் நான் பாலிவுட்டில் நடிப்பேன் என்று அஜித்குமார் கணித்திருந்தார். அவர் சொன்னது போலவே இந்த இந்தி வெப் சீரிஸில் துணிவு முடிந்த உடனேயே கையெழுத்திட்டேன். அவர் கூறியது போல நடந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

அனுபம் கெர் போன்ற மூத்த பாலிவுட் நடிகர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் காம்பினேஷன் காட்சிகளும் இருக்கு. இது ஒரு நேர்மறையான பாத்திரம் மற்றும் வெப் சீரியஸ்யில் ஒரு முக்கிய பாத்திரம்” என்று கூறினார் ஜான் கொக்கேன்.

ஜான் கொக்கேன்

Sarpatta and Thunivu fame John kokken enters Bollywood

Link ▶️https://youtu.be/KvorFo2pivI?si=FHdeUpuDQV9cm4d0

விஜயகாந்த் பிறந்தநாளில் அவரது மகன் நடிக்கும் பட அறிவிப்பு

விஜயகாந்த் பிறந்தநாளில் அவரது மகன் நடிக்கும் பட அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இளைய மகன் சண்முகபாண்டியன்.

‘மதுரை வீரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.

“வால்டர்”, “ரேக்ளா” படத்தை இயக்கிய u.அன்பு இயக்கத்தில் உருவாகிறது.

இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

டிரைக்கடர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதில், விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை (ஆகஸ்ட் 25) விஜயகாந்தின் பிறந்த நாளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்து விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது இளைய மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர், நாளை (25/08/2023) வறுமை ஒழிப்பு தினமான எனது பிறந்த நாளில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Vijayakanth spills beans on his son Shanmuga Pandian’s new movie

More Articles
Follows