தனது அடுத்த படத்திற்கும் விவகாரமான தலைப்பு வைத்து ஹீரோவாகும் ‘இரண்டாம் குத்து’ டைரக்டர்

ஹர ஹர மஹாதேவகி பட மூலம் தமிழ் இயக்குநராக அறிமுகமானவர் சந்தோஷ்.பி ஜெயக்குமார்.

கடந்த 2018-ம் ஆண்டில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தை இயக்கி பலான பட இயக்குனர் என பெயர் பெற்றார்.

இந்த படத்தில் ஆபாச காட்சி வசனங்கள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.

ஆனால் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இதனால் அப படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்திருந்தார் இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார்.

‘இரண்டாம் குத்து’ என்று பெயரிடப்பட்ட இந்த படம் தீபாவளியை முன்னிட்டு தியேட்டரில் வெளியானது.

இந்த படமும் பல சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.

இந்த நிலையில் தனது அடுத்த பட தலைப்பை அறிவித்துள்ளார்.

Mr VIRGIN என்று பெயரிட்டுள்ளார்.

இதிலும் ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளார்.

அடுத்து என்ன கொடுமையோ..??

Irandam Kuthu director’s next film is titled Mr Virgin

Overall Rating : Not available

Latest Post