சிம்பு ரசிகர்களை சந்திக்க ‘பத்து தல’ வெற்றி விழா.; தனஞ்செயன் வாக்குறுதி

சிம்பு ரசிகர்களை சந்திக்க ‘பத்து தல’ வெற்றி விழா.; தனஞ்செயன் வாக்குறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் கௌதம் மேனன் ரெடின் கிங்ஸிலி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

அடுத்த வாரம் மார்ச் 30ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று மார்ச் 24ஆம் தேதி பத்திரிக்கையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இதற்கான விழா சென்னை கமலா திரையரங்கில் இன்று காலை நடைபெற்றது.

அப்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக தனஞ்செயன் பேசும்போது..

“இந்த பத்து தல படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அதற்கு முன்பு பத்திரிக்கையாளர்களை நீங்கள் சந்திக்க வேண்டும் என்று சிம்புவிடம் கேட்டேன். அவர் உடனே ஓகே சொன்னார்.

இந்த விழா நடப்பதை அறிந்த சிம்பு ரசிகர்கள் பல பேர் டிக்கெட் கேட்டனர். கிட்டத்தட்ட 1000 பேர் இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தனர்.

ஏற்கனவே பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. சிம்புவை அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.. அரங்கமே அதிர்ந்தது.

எனவேதான் பத்திரிக்கையாளர்களை சிம்பு தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்தோம். எனவே தான் ரசிகர்களை இங்கு அனுமதிக்கவில்லை.

அதற்காக நான் சிம்புவிடமும் அவரது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

‘பத்து தல’ படத்தின் வெற்றி விழாவை கண்டிப்பாக மிக பிரம்மாண்டமாக நடத்துவோம்.்அப்போது சிம்பு ரசிகர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள்கலந்து கொள்ளலாம்” என பேசினார் தனஞ்செயன்.

Dhananjayan apologize to Simbu fans

VNRTtrio : நிதின் – ராஷ்மிகா – வெங்கி படத்தை தொடங்கி வைத்த சிரஞ்சீவி

VNRTtrio : நிதின் – ராஷ்மிகா – வெங்கி படத்தை தொடங்கி வைத்த சிரஞ்சீவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவி பிரகாஷ் இசையில், #VNRTrio திரைப்படம் பிரமாண்டமாகத் துவங்கியது.

VNRTtrio- வெங்கி குடுமுலா, நிதின் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய மூவரும் தங்கள் முந்தைய மெஹாஹிட் படமான பீஷ்மாவை விட, அதிரடியான ஒரு பெரிய படைப்பை வழங்க மீண்டும் இணைந்துள்ளனர்.

மேலும்,இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மிகப்பிரமாண்டமாகத் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படம் குறித்த அறிவிப்பை, கலக்கலான நகைச்சுவையுடன், வேடிக்கை மிகுந்த சுவாரஸ்யமான வீடியோ ஒன்றின் மூலம் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ மூலம் இந்த படம் பொழுதுபோக்கு மற்றும் சாகசமாக நிறைந்ததாக இருக்கும் என்று படக்குழுவினர் உறுதியளித்திருக்கின்றனர்.

இந்த பிரமாண்ட வெற்றிக் கூட்டணி இணையும் இப்படத்தின் துவக்க விழாவில், மெகாஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டது பெரும் சிறப்பாக அமைந்தது.

படத்துவக்க விழாவில் முதல் காட்சிக்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப் போர்டு அடிக்க, இயக்குநர் பாபி கேமராவை சுவிட்ச் ஆன் செய்தார். கோபிசந்த் மலினேனி முதல் காட்சியை இயக்கினார். ஹனு ராகவபுடி மற்றும் புச்சிபாபு சனா ஆகியோர் ஸ்கிரிப்டை தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தனர்.

தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர் ஆகியோர் இந்த படத்தினை தயாரிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் நட்சத்திர நடிகர்கள் மற்றும் டெக்னிக்கல் விஷயங்களைச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கவனித்துக்கொள்கிறார்கள். நடா கிரீட்டி ராஜேந்திர பிரசாத் மற்றும் வெண்ணெலா கிஷோர் ஆகியோர் இப்படத்தில் பங்குபெறவுள்ளனர்.

ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்க, சாய் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் புடி படத்தொகுப்பாளராகவும், ராம் குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். படத்தின் மற்ற விவரங்கள் ஒவ்வொன்றாகப் பின்னர் அறிவிக்கப்படும்.

நடிகர்கள்: நிதின், ராஷ்மிகா மந்தனா, ராஜேந்திர பிரசாத், வெண்ணெலா கிஷோர் மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம்: வெங்கி குடுமுலா
தயாரிப்பு : மைத்ரி மூவி மேக்கர்ஸ்
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர்
CEO: செர்ரி
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : சாய் ஸ்ரீராம்
கலை இயக்குநர்: ராம் குமார்
நிர்வாக தயாரிப்பாளர்: ஹரி தும்மலா
வரி தயாரிப்பாளர்: கிரண் பல்லாபள்ளி
விளம்பர வடிவமைப்பாளர்: கோபி பிரசன்னா
மக்கள் தொடர்பு : சதீஷ் குமார் – சிவா (AIM )

VNRTrio

VNRTtrio movie begins started by Chiranjeevi

‘ஜீரக பிரியாணியை.. விருந்தாக்கி ‘புதுப்புது சுகம்’ தேடும் கவிஞர் ஜெகன் கவிராஜ்

‘ஜீரக பிரியாணியை.. விருந்தாக்கி ‘புதுப்புது சுகம்’ தேடும் கவிஞர் ஜெகன் கவிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பூம்புகார், பந்தபாசம், படித்தால் மட்டும் போதுமா உள்ளிட்ட படங்களுக்கு பல வெற்றிப் பாடல்களை எழுதியவர் பழம்பெரும் கவிஞர் மறைந்த மாயவநாதன்.

அதே ஊரைச் சேர்ந்த கவிஞர் ஜெகன் கவிராஜ் என்பவரும் பாடலாசிரியராக களமிறங்கியுள்ளார்.

பிரபு ஜெயராம் இயக்கத்தில் 2021ல் வெளியான ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தில் ஜீரக பிரியாணி” பாடலை எழுதியிருந்தார் ஜெகன் கவிராஜ்.

இந்த படத்திற்கு குணா இசையமைத்து இருந்தார்.

அந்த பாடல் ரசிகர்களையும் முக்கியமாக பிரியாணி காதலர்களையும் கவர்ந்தது.

இந்த நிலையில் தற்போது ‘வெப்’ என்ற திரைப்படத்தில் ஓர் பாடலை எழுதி இருக்கிறார் ஜெகன்.

புது புது சுகம்… என்ற அந்த பாடல் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இயக்குநர் ஹாருன் இயக்கிய இந்த படத்தில் நட்ராஜ் & ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளனர்.

இதுகுறித்து ஜெகன் கூறியதாவது..

அய்யா இளையராஜாவின் முதல் ராஜாவான கார்த்திக் ராஜா அவர்கள் இசையில் அண்ணன் நட்டி நடித்துள்ள *Web* படத்தில் எழுதியிருக்கிறேன். பாடிய ஸ்வேதா மோகன் அவர்களுக்கும் அழகாக நடனம் அமைத்த சாண்டி மாஸ்டர் அவர்களுக்கும் நன்றி! வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஹாருன் சாருக்கும், வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அண்ணன் Ksk செல்வா அவர்களுக்கு அன்பும் நன்றியும்❤️🙏

பாடல் லிங்:

வெப்

Pudhu Pudhu Sugam Song writeing Lyricist Jegan Kaviraj

விபத்து வழக்கு.. நீதிமன்ற அவமதிப்பு.; யாஷிகாவை கைது செய்ய ரெடியாகும் போலீஸ்

விபத்து வழக்கு.. நீதிமன்ற அவமதிப்பு.; யாஷிகாவை கைது செய்ய ரெடியாகும் போலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘ஜாம்பி’ மற்றும் ‘கடமையைச் செய்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இவர் கடைசியாக பிரபுதேவாவின் ‘பாகீரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரைகளில் காணப்பட்டார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், யாஷிகா ஆனந்த் புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும் போது மகாபலிபுரத்தில் விபத்துக்குள்ளானதில் அவரது தோழி வள்ளிசெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், மகாபலிபுரம் விபத்து வழக்கில் யாஷிகா ஆனந்துக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

யாஷிகா ஆனந்த் மீதான விபத்து வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இம்மாதம் 21ஆம் தேதி யாஷிகாவை நேரில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

யாஷிகா ஆனந்த் ஆஜராகாததை அடுத்து, நடிகைக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஏப்ரல் 25ம் தேதி யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால், அவரை போலீசார் கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Court issues a warrant against Yashika Anand

பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ்.; சுசீந்திரன் – ஜிவி. பிரகாஷ் கூட்டணி

பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ்.; சுசீந்திரன் – ஜிவி. பிரகாஷ் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க உள்ளார்.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையம் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஜி வி பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் முதல் பார்வையை மார்ச் 31 அன்று 10 முன்னணி இயக்குநர்கள் வெளியிட உள்ளார்கள்.

பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

இயக்குநராக தனது முதல் படத்தை தயாரிப்பதற்காக சுசீந்திரனுக்கு நன்றி தெரிவித்துள்ள மனோஜ் பாரதிராஜா, இயக்குனர் மணிரத்னத்திடம் பம்பாய் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது அதனையொட்டி அவரை சந்தித்து ஆசி பெற்றார்.

இப்படம் அனைவரும் ரசித்து பாராட்டும் வகையில் இத்திரைப்படம் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் ஜி வி பிரகாஷின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கிய பங்காற்றும் என்றும் மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார்.

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

Manoj to direct Bharathiraja to be produced by Suseeenthiran

IPL தீம் – வாரணம் ஆயிரம் – துப்பாக்கி கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ் மரணம்

IPL தீம் – வாரணம் ஆயிரம் – துப்பாக்கி கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்களுக்கு கிட்டார் வாசித்த பிரபல கிட்டார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ்.

2008 ஆம் ஆண்டு விக்ரம் நடித்த ‘பீமா’ படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கிடாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு கௌதம் மேனனின் ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் கிடாரிஸ்டாக பணியாற்றினார்.

விஸ்வரூபம், துப்பாக்கி, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், டி இமான் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார்.

இவர் கடந்த 2015- வெளியான ‘உப்பு கருவாடு’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இவர் கடந்த சில மாதங்களாக மூளைக் கட்டியால் மற்றும் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது

இந்த நிலையில், நேற்று இரவு கிட்டார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Guitarist Steeve Vatz passes away

More Articles
Follows