‘பத்து தல’ பார்க்க ரெடியா.? அப்போ ரன்னிங் டைம் தெரிஞ்சிக்கோ தல..

‘பத்து தல’ பார்க்க ரெடியா.? அப்போ ரன்னிங் டைம் தெரிஞ்சிக்கோ தல..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சில்லுன்னு ஒரு காதல்’ புகழ் ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் படம் ‘பத்து தல’.

இப்படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், செண்டாயன், ரெடின் கிங்ஸ்லி, டீஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஆக்‌ஷன் டிராமா மற்றும் ட்ரைலர் வீடியோக்கள் மூலம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த படம் மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் ரன்னிங் டைம் 152 நிமிடங்கள் என்றும் அதாவது 2 மணி நேரம் 32 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது.

‘பத்து தல’ படம் கன்னடப் படமான ‘முஃப்தி’யின் படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

simbu starrer ‘Pathu Thala’ run time revealed

மாணவர்களுக்கு வேளாண் சுற்றுலா.. உழவர்களுக்கு வேளாண் கருவிகள்.; கார்த்தியின் நன்றியும் கோரிக்கையும்

மாணவர்களுக்கு வேளாண் சுற்றுலா.. உழவர்களுக்கு வேளாண் கருவிகள்.; கார்த்தியின் நன்றியும் கோரிக்கையும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக அரசுக்கு நடிகர் கார்த்தியின் அறிக்கை கடிதம்…

22-03-2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் வணக்கம்.

வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு, நீர் நிலைகள் சீரமைப்பு , மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது.

இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.

அதோடு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அவசியமான முன்னெடுப்பு. தற்போது சாமை, வரகு, குதிரைவாலி, போன்றவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது.

ஆனால் அவைகளை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது.

இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இதோடு மட்டுமன்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது.

இதுப் போன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக் கொண்டால், அரசு மேற்கொள்ளும் வேளாண் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம்

என்றென்றும் அன்புடன்

கார்த்தி சிவகுமார்,
நிறுவனர்.

——-

கார்த்தி

வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் @mkstalin அவர்களுக்கும் மற்றும் அமைச்சர் @MRKPanneer அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி.

Actor karthi praising tamilnadu government in agriculture budget

‘லியோ’ படத்தில் யூடியூப் பிரபலங்களை இணைத்த லோகேஷ்

‘லியோ’ படத்தில் யூடியூப் பிரபலங்களை இணைத்த லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படம் ‘லியோ’.

இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லியோ

இந்நிலையில், பிரபல யூடியூபர்களான இர்ஃபான் மற்றும் குறும்புக்காரர் ராகுல் ஆகியோர் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்கிறார்களாம்.

காஷ்மீரில் இர்ஃபான் மற்றும் ராகுல் இருவரும் இருப்பதால், இவர்கள் படத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கணிக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் ஒரு படத்தையும் இர்ஃபான் தனது சமூக வலைப்பின்னல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

லியோ

Popular YouTubers Irfan and Rahul in Vijay’s ‘Leo’

படம் தயாரிப்பது தண்டனை.. பாவம் செய்தவனே படம் எடுப்பான் – கே.ராஜன்

படம் தயாரிப்பது தண்டனை.. பாவம் செய்தவனே படம் எடுப்பான் – கே.ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர். கண்ணன் இயக்கி தயாரித்து இருக்கும் படம் ‘காசேதான் கடவுளடா’. ‘மிர்ச்சி’ சிவா, ப்ரியா ஆனந்த், யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (21.03.2023) நடந்தது.

தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியதாவது…

“இன்று தம்பி கண்ணன் நல்ல தயாரிப்பாளர், இயக்குநர். ஒருகாலத்தில் ராமநாராயணன் போல தொடர்ந்து படங்களை எடுத்துக்கொண்டே இருப்பார் இப்படி படங்கள் எடுக்க வேண்டாம் என்று நான் சொன்னேன். அப்படியானால் நான் படமே எடுக்க மாட்டேன், இயக்குவேன் என்று சொன்னார். நல்ல முடிவு.

காசேதான் கடவுளடா

படம் தயாரிப்பது போன்ற ஒரு தண்டனை வேறு எதுவும் இல்லை. பாவம் செய்தவன் தான் படம் எடுக்க வருவான் என்பது புது மொழி. தயாரிப்பாளர்களை வாழ வைக்க சில நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாதது.

இன்று எந்த படம் ஓடும் என்பது கணிக்க முடியாத ஒரு விஷயம். ஆனால் மக்கள் நல்ல படத்தை பார்க்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. ‘லவ் டுடே’ சமீபத்திய உதாரணம். இன்னும் மூன்று வருடத்திற்கு கண்ணன் படங்கள் திட்டமிட்டு கதைக்களத்தை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

ஹீரோவை மனதில் வைத்து கதை உருவாக்கினால் நிச்சயம் தோல்விதான். அதனால், எதையும் திட்டமிட்டு செய்யுங்கள். படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். படத்தின் தலைப்பைப் போல படம் வெற்றியடைந்து பணம் கொட்ட வாழ்த்துகள்”. என்றார்.

காசேதான் கடவுளடா

k.rajan speech at Kasethan Kadavulada press meet

ஷாருக்கான் – தீபிகாவின் ‘பதான்’ படம் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்

ஷாருக்கான் – தீபிகாவின் ‘பதான்’ படம் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடித்து கடந்த கடந்த ஜனவரி 25-ல் வெளியான படம், ‘பதான்’.

ஹிந்தியில் வெளியான இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.

இதில் இடம்பெற்ற காவி கவர்ச்சி உடை சர்ச்சையை கிளப்பியது.

இந்த எதிர்ப்புகளை மீறி ‘பதான்’ வசூலில் பல சாதனைகளைப் படைத்து வசூல் வேட்டையாடி வருகிறது.

உலகம் முழுவதும் வெளியான முதல் நாளிலேயே ரூ.105 கோடி வசூலை அள்ளியது.

இப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்த நிலையில், உலகளவில் ரூ.1100 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியாவில் மட்டும் ரூ.545 கோடியை வசூலித்து இந்தியில் அதிகபட்ச வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் ‘பதான்’ பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்று மார்ச் 22-ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடியில் தளத்தில் ‘பதான்’ படத்தை நீங்கள் பார்க்கலாம்.

பதான்

Pathaan movie OTT release date update

காதல் கணவரை விவாகரத்து செய்யும் ராம்சரண் சகோதரி நடிகை நிஹாரிகா.?

காதல் கணவரை விவாகரத்து செய்யும் ராம்சரண் சகோதரி நடிகை நிஹாரிகா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2016ல் வெளியான ‘ஒக்க மனசு’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நிஹாரிகா.

இவர் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகள் ஆவார். மேலும் நடிகர் ராம்சரணுக்கு சகோதரி முறை ஆவார்.

இவர் தமிழில் விஜய்சேதுபதி உடன் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நிஹாரிகா நடித்திருந்தார்.

ஆந்திர போலீஸ் பிரபாகர் ராவின் மகன், சைதன்யா என்பவரைக் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2020-ல் திருமணம் செய்துக் கொண்டார் நிஹாரிகா.

இவர்களின் திருமணம் உதய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

இதற்கு காரணமாக…

இன்ஸ்டாவில் கணவரை பின் தொடர்வதை நிறுத்திவிட்டார் நிஹாரிகா.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிஹாரிகாவுடன் இருக்கும் போட்டோ வீடியோக்களை சைதன்யா நீக்கிவிட்டார்.

இதனால் இருவரும் விவாகரத்துப் பெற உள்ளதாகத் தெலுங்கு சினிமா உலகில் பரவலாக பேசப்படுகிறது.

Ram Charans cousin Niharika & Chaitanya heading for divorce?

More Articles
Follows