தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘ஜாம்பி’ மற்றும் ‘கடமையைச் செய்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
இவர் கடைசியாக பிரபுதேவாவின் ‘பாகீரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரைகளில் காணப்பட்டார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், யாஷிகா ஆனந்த் புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும் போது மகாபலிபுரத்தில் விபத்துக்குள்ளானதில் அவரது தோழி வள்ளிசெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், மகாபலிபுரம் விபத்து வழக்கில் யாஷிகா ஆனந்துக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
யாஷிகா ஆனந்த் மீதான விபத்து வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இம்மாதம் 21ஆம் தேதி யாஷிகாவை நேரில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
யாஷிகா ஆனந்த் ஆஜராகாததை அடுத்து, நடிகைக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஏப்ரல் 25ம் தேதி யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால், அவரை போலீசார் கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Court issues a warrant against Yashika Anand