தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடித்து வெளியான படம் ‘ஆகஸ்ட் 16 1947’.
இப்படத்தில் அறிமுக நாயகி ரேவதி நடிக்க, குக் வித் கோமாளி புகழ், ‘அருவி’ பட நாயகி அதிதி பாலன், ஷர்மா ரிச்சர்ட், அஸ்தன் ஜேசன் ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஏ ஆர் முருகதாஸின் உதவியாளர் என்.எஸ்.பொன்குமார் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
‘ஆகஸ்ட் 16 1947’ படம் கடந்த ஏப்ரல் 7, 2023 அன்று திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் திரையரங்குகளில் வெளியானபோது விமர்சன ரீதியாகவும், மக்களிடமும் வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், ‘ஆகஸ்ட் 16 1947’ படம் இன்று மே 5-ம் தேதி முதல் பிரபலமான அமேசான் பிரைமில் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Gautham Karthik’s ‘AUGUST 16 1947’ on OTT from today