இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் வாழ்ந்தவர் கௌதம்..- சதீஷ்

Gautham character in Iruttu Araiyil Murattu Kuththu is original says Sathishதனஞ்செயன் தயாரிப்பில் நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் மிஸ்டர் சந்திரமௌலி.

திரு என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, வரலட்சுமி, மைம் கோபி, சதீஷ், சந்தோஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் வருகிற ஜீலை 6ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது சதீஷ் பேசியதாவது…

இப்படத்திற்கு தனஞ்செயன் எல்லா விதத்திலும் புரோமோசன் செய்து வருகிறார்.

யாராவது செல்பி எடுக்க என்னருகே வந்தால் நான் மிஸ்டர் சந்திரமௌலி படத்தை பேச ஆரம்பித்து விடுகிறேன்.

எங்கள் எல்லாரையும் அப்படி டியூன் செய்து வைத்துவிட்டார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் வாழ்ந்துவிட்டார் கௌதம் கார்த்திக். அதுதான் அவருடைய உண்மையான கேரக்டர்.

நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். பேய்க்கு பயப்படுவார். அதைதான் அப்படி சொன்னேன்.

இப்படம் வந்த பிறகு ரெஜினா ஆர்மி என ரசிகர்கள் ஆரம்பித்துவிடுவார்கள். இந்த படத்தில் அவரது உடைகளை பார்த்த பிறகு லோ பட்ஜெட் படம் என நினைக்க வேண்டாம். படம் பிரம்மாண்டமாக எடுத்துள்ளார் தனஞ்செயன்” என கலகலப்பாக பேசினார் சதீஷ்.

Gautham character in Iruttu Araiyil Murattu Kuththu is original says Sathish

Overall Rating : Not available

Related News

ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள கஜினிகாந்த்…
...Read More
கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து…
...Read More

Latest Post