தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்வது கொள்வது வழக்கமான ஒன்று. சூர்யா – ஜோதிகா, அஜித் – ஷாலினி, கௌதம் – மஞ்சிமா உள்ளிட்ட பல நட்சத்திரங்களை பார்த்திருக்கிறோம்.
சமீபத்தில் இந்த வரிசையில் இணைந்த ஜோடி அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன். இவர்கள் இருவரும் கடந்து செப்டம்பர் மாதம் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். கீர்த்தி பாண்டியன் பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகள ஆவார்.
இவர்கள் இருவரும் ‘ப்ளூ ஸ்டார்’ என்ற படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்க தொடங்கினர். அதன்படி திருமணமும் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் அசோக் செல்வன் – மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சபாநாயகன்’ என்ற படம் டிசம்பர் 15ஆம் தேதி ரிலீசாகிறது.
அதுபோல கீர்த்தி பாண்டியன் கதையின் நாயகியாக நடித்துள்ள ‘கண்ணகி’ என்ற படமும் அதே நாளில் டிசம்பர் 15ஆம் தேதி ரிலீசாகிறது.
‘கண்ணகி’ படம் போஸ்டரில் கீர்த்தி கர்ப்பமாக இருப்பது போல அவரின் தொப்புள் கொடியில் இருந்து ஒரு கயிறு கீழே செல்வது போலவும் அதை ஒரு நபர் தீயில் பற்ற வைப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Ashok Selvan and Keerthy Pandian movies clash