பிரியா ஆனந்துடன் காதல்…? என்ன சொல்கிறார் கௌதம் கார்த்திக்.?

Gautham Karthik stillsமணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானார் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்.

இதனை தொடர்ந்து வை ராஜா வை மற்றும் முத்துராமலிங்கம் படங்களில் பிரியா ஆனந்துடன் ஜோடியாக நடித்தார்.

எனவே பிரியா ஆனந்துடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் ரங்கூன் படத்தின் வெற்றி தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் கௌதம் கார்த்திக்.

அப்போது அவர் பேசியதாவது…

நான் சிப்பாய் , இவன் தந்திரன் , ஹரஹர மகா தேவகி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளேன்.

இப்போது “ நல்ல நாள் பார்த்து சொல்றேன் “ என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறேன்.

அப்பா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “ அக்னி நட்சத்திரம் “ ஒரு தரம்வாய்ந்த படைப்பாகும். நிச்சயம் அப்படத்தின் ரீமேக்கில் நான் நடிக்க மாட்டேன்.

எனக்கு நடிப்பின் மேல் மிகப்பெரிய ஆசையை தூண்டிய திரைப்படம் கடல். ரங்கூன் என்னுடைய முதல் வெற்றி படமாகும். நல்ல கதையும், நல்ல இயக்குனரும் அமையும் பட்சத்தில் என்னுடைய கேரியர் இன்னும் சிறப்பாக அமையும்.

எப்போதெல்லாம் நான் சோர்வாக உள்ளேனோ அப்போதெல்லாம் எனக்கு சக்தி கொடுப்பவர் என்னுடைய அம்மா தான்.

 தற்போது அப்பா , மற்றும் தாத்தா நடித்த படங்களை பார்த்து வருகிறேன். என்னை பொறத்தவரை அப்பா மிகப்பெரிய லெஜன்ட்.

அவர் நடித்ததில் எனக்கு கோகுலத்தில் ஒரு சீதை திரைப்படத்தில் வரும் “ கிரெடிட் கார்ட் “ கொடுக்கும் காட்சி மிகவும் பிடிக்கும்.

சினிமாவில் அப்பாவுக்கு மிகச்சிறந்த ஜோடி என்றால் நக்மா மேடம் மற்றும் ரேவதி மேடம் என்று சொல்லுவேன்.

அப்போது ப்ரியா ஆனந்த் காதல் குறித்து கேட்கப்பட்டது.

கடல் படத்தில் நடிப்பதற்கு முன்பே ப்ரியா ஆனந்தை நன்றாக தெரியும். அவருடன் தற்போது வரை உள்ளது நட்பு மட்டுமே.

நாளை என்ன நடப்பது என்பது தெரியாது. ஆனால் என் திருமணம் நிச்சயம் காதல் திருமணம்தான். 30 வயதுக்கு மேல் திருமணம் செய்வேன்.

அது நடிகையாக இருக்கலாம். அல்லது வேறு ஒரு துறை சார்ந்த பெண்ணாக கூட இருக்கலாம்” என்றார்.

Gautham Karthik clarifies his love rumour with Priya Anand

Overall Rating : Not available

Related News

கொடிவீரன்' படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில்…
...Read More
கெளதம் கார்த்திக், சனா, லாலு, பிரசாந்த்…
...Read More
ராஜதுரை இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா…
...Read More

Latest Post