தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
`ரங்கூன்’ மற்றும் `8 தோட்டாக்கள்’ உள்ளிட்ட படங்களில் மிகவும் கவனிக்கத்தக்க நடிகராக காணப்பட்டவர் நடிகர் லல்லு.
இவர் தற்போது முருகதாஸ் இயக்கும் விஜய்யின் `சர்கார்’ படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறாராம்.
இதுபற்றி அவர் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…
`சர்கார் படத்தில் அற்புதமான வாய்ப்பை கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு மிகப்பெரிய நன்றிகள். தளபதியுடன் திரையில் இணைந்து நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது கனவு நிறைவேறிவிட்டது.’ என பதிவிட்டுள்ளார்.
சர்கார் பட இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
மேலும் சர்கார் கொண்டாட்டம் தொடர்பான அறிவிப்பு ஒன்று நாளை செப்டம்பர் 19ல் வெளியாகவுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து 2018 தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.
Actor Lallu is so excited as he acted with Vijay in Sarkar
Lallu @lalluTweets
A big thanks to @ARMurugadoss sir for giving me an amazing opportunity to work in sarkar. Never did I imagine I’d share screen space with my #Thalapathy It’s a dream come true moment for me. #Sarkar #Thalapathy62