தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அனிருத் இசையில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.
இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்க இன்று அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகியது.
தமிழகத்தை பொறுத்தவரை முதல் காட்சி 9:00 மணிக்கு தான் தொடங்கும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் இன்று காலை விஜய் ரசிகர்களின் ஆராவர்த்ததுடன் தொடங்கி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்நிலையில், ‘லியோ’ திரைப்படம் இணையதளத்தில் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய்யின் ‘லியோ’ படம் வெளியான முதல் நாளே முழு திரைப்படமும் இணையத்தில் இணையத்தில் வெளியாகி உள்ளதால் சினிமா துறையினர் மற்றும் திரை ஆர்வலர்கள் தங்களது கண்டனத்தை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
‘leo’ film was released on the internet vijay fans shocked