LAL SALAAM ஐஸ்வர்யா இயக்கத்தில் கெஸ்ட் ரோலில் ரஜினி.; கிரிக்கெட்டுக்கு எதிரான படமா.?

LAL SALAAM ஐஸ்வர்யா இயக்கத்தில் கெஸ்ட் ரோலில் ரஜினி.; கிரிக்கெட்டுக்கு எதிரான படமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தற்போது நடிக்கும் ‘ஜெயிலர்’ படம் அவரது 169வது படமாகும்.

அவர் தனது 170வது படத்தில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் கைகோர்க்கிறார். இந்த படத்தை லைக்கா தயாரிக்கிறது.

தற்போது ‘தலைவர் 171’ படத்தினை மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கவுள்ளார்.

இவர் ஏற்கெனவே ‛3, மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

இந்த படத்திற்கு ‘லால் சலாம்’ என பெயரிட்டு இந்த படத்தின் பூஜையை இன்று நவம்பர் 5ல் நடத்தியது படக்குழு.

இதில் நடிகர் ரஜினிகாந்த் நீண்ட சிறப்பு வேடத்தில் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க நாயகனாக அதர்வா நடிக்கவிருந்தார்.

சில காரணங்களால் அதர்வா விலகிவிட இப்போது விஷ்ணு விஷாலும், விக்ராந்த்தும் இணைந்து நடிக்கின்றனர்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டலில் கிரிக்கெட் பேட், பால், ஹெல்மெட் போன்றவை எரிவது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது.

எனவே இது கிரிக்கெட்டுக்கு எதிரான படமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த படத்தை அடுத்த 2023 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டு அறிவித்துள்ளனர்.

Rajini Starrer Lal Salaam Movie Aishwarya Direction

பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜிபி.முத்து வெளியேற காரணம் சன்னி லியோன்தான் – நடிகர் சதீஷ்

பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜிபி.முத்து வெளியேற காரணம் சன்னி லியோன்தான் – நடிகர் சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், சன்னி லியோன், சதீஷ்நடிப்பில், இயக்குநர் யுவன் இயக்கத்தில், வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் “ஓ மை கோஸ்ட்” (OMG).

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக அரங்கேறியது.

இசை, நடன கோலாகல கொண்டாட்டத்துடன் நடைபெற்ற இவ்விழாவினில்..

நடிகர் தயாரிப்பாளர் RK சுரேஷ் பேசியதாவது…

நடிகை சன்னி லியோன் மனிதநேயமிக்க நபர். இந்த படம் பற்றி சதீஷ் என்னிடம் கூறியபோது, ஒரு வெற்றி படத்திற்கான அனைத்து அம்சமும் இந்த படத்தில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. டார்க் காமெடி திரைப்படங்கள் இப்போது அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் இந்த திரைப்படம் ஹாரர் உடன் கலந்த டார்க் காமெடி திரைப்படம். படம் நன்றாக வந்துள்ளது. ஒரு புதிய தயாரிப்பாளர் நமது திரைத்துறைக்கு வந்து இருக்கிறார். அவரை வரவேற்க வேண்டியது நமது கடமை. இந்த திரைப்படம் வெற்றியடைந்தது, இதில் பங்கேற்று இருக்கும் அனைவருக்கும் வெற்றி படமாக இது அமைய வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இயக்குநர் தங்கர் பச்சான் பேசியதாவது…

இப்பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தை நான் இயக்குகிறேன். இந்த படமும், இந்த தயாரிப்பாளர் எடுக்கும் அடுத்த படமும் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றும் படமாக இருக்கும். திரைப்படங்கள் மக்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு அங்கமாக திகழ்கிறது. ஊடகங்கள் சிறிய திரைப்படங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

நேர்மையான விமர்சனம் தான் திரைப்படத்திற்கு தேவை. மண் சார்ந்த திரைப்படங்களை நாம் எடுக்க வேண்டும். அப்படிபட்ட திரைப்படங்களை எடுக்கும், இயக்குனர்களும் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் ஆதரவு தேவை. இந்த திரைப்படம் வெற்றியடைய எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

ஜிபி முத்து கூறியதாவது…

இது தான் எனது முதல் திரைப்படம், முன் அனுபவம் இல்லாத எனக்கு, இயக்குனர் தான் பக்கபலமாக இருந்தார். தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்தில் எனக்கு சிறப்பான ஒரு கதாபாத்திரத்தை கொடுத்துள்ளனர். அந்த பாத்திரம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்கு தேவை. அனைவரும் ஆதரவு தாருங்கள்

நடிகர் சதீஷ் பேசியதாவது..

இந்த படத்தின் கதையை இயக்குநர் கூறியபோது, அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. அதில் சன்னி லியோன் நடிக்கிறார் என்ற உடன், நான் இந்த படத்தில் நடிக்க ஒத்து கொண்டேன்.

சன்னி லியோன் ஒரு சிறந்த மனிதநேயம் மிக்க நபர், அவரை நெருங்கவே நாங்கள் தயங்கி கொண்டு இருந்தோம். ஆனால் அவர் இலகுவாக மிக இயல்பாக எங்களிடம் பழகினார். அவர் இந்த படத்தில் மிகப்பெரிய அர்பணிப்பை கொடுத்துள்ளார். சிறப்பாக நடித்துள்ளார்.

நீங்க எல்லாம் இங்க வந்தது சன்னி லியோனுக்கு தான் என்பது எனக்கு தெரியும். அப்புறம் வேஷ்டி சட்டை போட்ட ஆம்பள சன்னி லியோன் (ஜிபி.முத்து) ஆகியோருக்கு தான் வந்திருங்கீங்கன்னு தெரியும்.

அதுபோல பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜிபி.முத்து வெளியே ஓடி வர அவரது பிள்ளைகள் காரணம் அல்ல… சன்னி லியோன்காக தான் வந்துட்டாரூ..

OMG படத்திற்காக அனைவரும் கடின உழைப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படம் உங்களுக்கு பிடிக்கும்” என்று நம்புகிறேன்.

சதீஷ்

நடிகை சன்னி லியோன் கூறியதாவது…

தமிழகம் வந்து உங்களை சந்திதது மகிழ்ச்சி. நீங்கள் கொடுக்கும் வரவேற்பும், அன்பும் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. OMG திரைப்படத்திற்காக அனைவரும் கடின உழைப்பையும், அர்பணிப்பையும் கொடுத்துள்ளோம்.

இந்த படத்தை பார்க்க உங்களது நேரத்தையும் பணத்தையும் நீங்கள் ஒதுக்குவதற்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். எங்களது கனவை நீங்கள் பார்க்க போகிறீர்கள். உங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை.

சன்னி லியோன்

தயாரிப்பாளர் வீர சக்தி கூறியதாவது…

இந்த படம் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த ஒரு கதை. முதல் பாதி காமெடியும், இரண்டாவது பாதி சன்னி லியோன் வரும் பிரம்மாண்டமும் படத்தில் நிறைந்து இருக்கும். நீங்கள் ரசிக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். நடிகர்கள், இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை

தயாரிப்பாளர் K. சசிகுமார் பேசியதாவது…

இப்படம் பற்றி அண்ணன் அனைத்தையும் கூறி விட்டார். இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் ஒரு படமாக இருக்கும். அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். படம் விரைவில் திரைக்கு வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி

இயக்குநர் யுவன் பேசியதாவது…

தயாரிப்பாளர் மிக தீவிரமான சினிமா ரசிகர் அவரிடம் கதை சொன்ன போதே இந்தப்படத்தை வேறு உயரத்திற்கு கொண்டு சென்று விடுவார் என நம்பிக்கை வந்தது. இந்தப்படம் சன்னி லியோன் வந்த பிறகு தான் மிகப்பெரிய படமாக மாறியது. மொழி தெரியாமல் மிக அர்ப்பணிப்புடன் கற்றுக்கொண்டு நடித்தார்.

அவருடன் வேலை பார்க்க மிக எளிதாக இருந்தது. சதீஷ் மிக அற்புதமாக நடித்துள்ளார். படத்தில் அனைவருமே கடினமாக உழைத்துள்ளார்கள். கண்டிப்பாக அனைவரும் திரும்ப திரும்ப பார்க்கும் படியான படமாக இருக்கும். நன்றி.

“ஓ மை கோஸ்ட்” (OMG) திரைப்படத்தினை VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் D.வீரா சக்தி மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சன்னி லியோன்

Sunny Leone Sathish GP Muthu speech at Oh My Ghost Trailer launch

‘கைதி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை அமலா பால்..!

‘கைதி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை அமலா பால்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி.

இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்திருந்தனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் 2019 தீபாவளியன்று வெளியாகி உலகளவில் ரூ.100 கோடியளவில் வசூலை குவித்தது.

இந்நிலையில், இப்படத்தை ஹந்தியில் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் ‘போலா’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர்.

தற்போது, நடிகை அமலா பால் இப்படத்தில் இணைந்துள்ளார்.மேலும், அவர் கவுரவ வேடத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

Actress Amala Paul has joined the Hindi remake of Kaithi

DNA மெக்கானிக் தயாரிப்பில் ‘மகாமுனி’ இயக்குனருடன் அர்ஜூன்தாஸ் – தான்யா கூட்டணி

DNA மெக்கானிக் தயாரிப்பில் ‘மகாமுனி’ இயக்குனருடன் அர்ஜூன்தாஸ் – தான்யா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மெளனகுரு’, ‘மகாமுனி’ ஆகிய படங்களால் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குநர் சாந்தகுமார்.

அவரது அறிமுகப் படமான ‘மெளன குரு’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும், இந்தப் படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட போதும் அங்கும் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அவரது இரண்டாவது படைப்பான ‘மகாமுனி’, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் 30 விருதுகளை வென்றது.

இப்போது இயக்குநர் சாந்தகுமார் தன்னுடைய மூன்றாவது படத்தை ‘டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி’ பேனரின் கீழ் இயக்க இருக்கிறார். கதையின் முன்னணி கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். சென்னையில் எளிய முறையிலான பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.

ஒரு குறிப்பிட்ட வகைக்குள் வராத புதிய ட்ரெண்டை தமிழ் சினிமாவில் உருவாக்கிய படங்கள் என்றால் அது சாந்தகுமாரின் முந்தைய படங்களான ‘மகாமுனி’ மற்றும் ‘மெளனகுரு’. இந்தப் படங்களில் த்ரில்லர், எமோஷன்ஸ், ரொமான்ஸ், ஆக்‌ஷன் மற்றும் புதிர் என அனைத்தும் இருக்கும். அதேபோல, இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் புதிய படமும் குறிப்பிட்ட ஒரு வகைக்குள் இருக்காது.

தன்னுடைய புத்திசாலித்தனமான படங்கள் தேர்வால் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நன் மதிப்பைப் பெற்று வருபவர் நடிகர் அர்ஜூன். ‘கைதி’, ‘மாஸ்டர்’ மற்றும் ‘அந்தகாரம்’ ஆகிய படங்களில் அவருடைய வித்தியாசமான கதாபாத்திரம் சினிமா பயணத்தில் அவரது வளர்ச்சிக்கு அடுத்தக் கட்டமாக அமைந்தது. அந்த வரிசையில் இந்தப் படத்திலும் தனித்துவமான கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.

ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், GM சுந்தர், S ரம்யா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

*தொழில்நுட்பக் குழு விவரம்:*

எழுத்து, இயக்கம், தயாரிப்பு: சாந்தகுமார் (DNA மெக்கானிக் கம்பெனி),
ஒளிப்பதிவு: சிவா GRN,
கலை: சிவராஜ் சாமரன்,
சண்டைப் பயிற்சி: ஆக்‌ஷன் பிரகாஷ்,
எடிட்டர்: V.J. சபு ஜோசப்,
இசை: தமன்,
பாடல் வரிகள்: யுகபாரதி,
படங்கள்: M. ஆனந்தன்,
ஆடை வடிவமைப்பு: மீனு சித்ரா கனி,
ஆடை: P. செல்வம்,
ஒப்பனை: வினோத்,
இணை இயக்குநர்கள்: சிவ பிரகாஷ் & கிருஷ்ண மூர்த்தி,
புரொடக்‌ஷன் எக்ஸிகியூட்டிவ்: C சரவணன்,
தயாரிப்பு மேலாளர்: தேனி தமிழ்,
நிர்வாக தயாரிப்பாளர்: S. பிரேம்.

Arjun Daas and Tanya Ravichandran pair for new project

‘பதான்’ படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கிரேஸ் இருக்கிறது – இயக்குநர் சித்தார்த் ஆனந்த்

‘பதான்’ படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கிரேஸ் இருக்கிறது – இயக்குநர் சித்தார்த் ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல மாத எதிர்பார்ப்புக்குப் பிறகு, ரசிகர்கள் இறுதியாக ஷாருக்கானின் தோற்றத்தை ‘பதான்’ டீசரில் பார்த்துள்ளனர்.

டீஸர் புதன்கிழமை வெளியாகி இன்டஸ்ட்ரியில் புயலைக் கிளப்பியுள்ளது.

ஷாருக் கான் ஆக்‌ஷன் பேக் அவதாரத்தில் அதிரடியாக நடித்துள்ளார்.

இயக்குனர் சித்தார்த் ஆனந்த், தனது படத்தைப் பற்றி கூறுகையில் நீண்ட காலத்திற்குப் பிறகு உண்மையான மற்றும் இயற்கையான ஒரு திரைப்படத்திற்கான ஆதரவு எல்லா தரப்பில் இருந்தும் உள்ளது.

மேலும் இந்த புகழுக்கெல்லாம் சொந்தக்காரர் சூப்பர் ஸ்டார் ஷா ருக் கான் என தெரிவித்துள்ளார்.

ரூ. 1000 கோடி பட்ஜெட் உருவாகும் ஷங்கரின் அடுத்த திரைப்படம்..

ரூ. 1000 கோடி பட்ஜெட் உருவாகும் ஷங்கரின் அடுத்த திரைப்படம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் பிரமாண்டமான திரைப்படங்களை எடுப்பவர் இயக்குனர் ஷங்கர்.

இவர், தற்போது கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ மற்றும் ராம் சரண் நடிக்கும் ‘RC15’ ஆகிய இரண்டு பெரிய திரைப்படங்களையும் இயக்கி வருகிறார்.

ஷங்கர் அடுத்ததாக சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ என்ற வரலாற்று நாவலைத் தழுவி எடுக்கவிருக்கிறார்.

இப்படம் மூன்று பாகங்களாக ரூ. 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் மேலும்,2023 ஜனவரியில் ‘வேள்பாரி’ படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளை ஷங்கர் தொடங்குவார் என்பதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

Shankar’s next film with a budget of RS.1000 crores

More Articles
Follows