எப்படியாவது முன்னாடியே வந்துடுங்க..; ‘லியோ’ ரசிகர்களுக்கு லோகேஷ் வேண்டுகோள்

எப்படியாவது முன்னாடியே வந்துடுங்க..; ‘லியோ’ ரசிகர்களுக்கு லோகேஷ் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம், ‘லியோ’.

இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ படத்தின் முதல் 10 நிமிடங்களை ரசிகர்கள் தவறவிட வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்.

இது குறித்து அவர் பேசியதாவது:

“என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நான் சொல்வது, படத்தின் முதல் 10 நிமிடங்களை தவறவிட வேண்டாம். எப்படியாவது முன்னாலேயே போய் உட்கார்ந்து விடுங்கள். ஏனெனில் அந்த காட்சிக்காக பல்லாயிரக்கணக்கான பேர் உழைத்திருக்கிறோம். அந்த அனுபவத்துக்காகத்தான் போன அக்டோபரில் இருந்து இந்த அக்டோபர் வரை நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். ரசிகர்களுக்கு அது ஒரு ட்ரீட் ஆக இருக்கும்”. இவ்வாறு லோகேஷ் தெரிவித்துள்ளார்.

Lokesh Kanagaraj Requests Fans Not To Miss The First 10 Minutes Of vijay’s ‘Leo’

பான் இந்தியா படம் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ சூட்டிங் & ரிலீஸ் அப்டேட்

பான் இந்தியா படம் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ சூட்டிங் & ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷனாயா கபூர், சஹரா எஸ். கான் மற்றும் ரோஷன் மேகா ஆகியோருடன் நட்சத்திர நடிகரான மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான் இந்திய திரைப்படமாகும்.

இயக்குநர் நந்த கிஷோர் இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் 2ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது.

இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரை நடைபெறுகிறது.

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு தளத்திலிருந்து அவரது கதாபாத்திரம் மற்றும் தோற்றம் குறித்த ஒரு கண்ணோட்டத்தை பகிர்ந்து கொண்ட போது… இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது.‌

காதல் மற்றும் பழிக்கு பழி வாங்கும் உணர்வு என இரண்டு தீவிர நேர் எதிர் முனைகளுக்கு இடையேயான மோதலை மையமாகக் கொண்ட இந்த ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராகும்.

அப்பா- மகன் இடையிலான உறவை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இப்படத்தின் முக்கியமான மைல் கல்லாக இருக்கும் என உறுதி அளிக்கிறது.

‘விருஷபா தி வாரியர்ஸ் அரைஸ்’- படம் கதை சொல்லல் மற்றும் சினிமாவின் சிறப்பம்சத்தை.. அதன் தரத்தை மறு வரையறை செய்யும் படைப்பாக அமைந்துள்ளது.

படக்குழுவினர் தரமான உருவாக்கத்தில் சமரசமில்லாமல் முழு ஈடுபாட்டுடன் உழைத்து வருகிறார்கள்.‌

நந்தகிஷோர் இயக்கத்தில் தயாராகும் ஒரு காவிய ஆக்சன் நிரம்பிய பொழுதுபோக்கு படைப்பிற்காக காத்திருங்கள்.

இது உங்களை பிரமிக்க வைக்கும். 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ ஒன்றாக இருக்கும். மேலும் இந்த திரைப்படம் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் உலகம் முழுவதும் நான்காயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.‌

நவராத்திரி திருவிழாவின் போது ஒரு நல்ல நாளன்று இப்படத்தின் தயாரிப்பாளர்கள்.. ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்கள்.

மோகன்லால், ரோஷன் மேகா, ஷனாயா கபூர், சஹரா எஸ். கான் ஆகியோருடன் ஸ்ரீகாந்த் மேகா, ராகினி திரிவேதி, நேகா சக்சேனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘விருஷபா தி வாரியர்ஸ் அரைஸ்’ எனும் திரைப்படம்- பான் இந்தியா அளவிலான காவிய ஆக்சனாகும். இந்தத் திரைப்படம் தலைமுறைகளைக் கடந்த அப்பா மற்றும் மகன் இடையேயான டிராமா, ஆக்சன் எமோஷனல் மற்றும் வி எஃப் எக்ஸ் ஆகியவற்றுடன் அடுத்த ஆண்டிற்கான மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாக இருக்கும்.

இந்த திரைப்படத்தை கனெக்ட் மீடியா- பாலாஜி டெலிஃபிலிம்ஸ் – ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் வருண் மாத்தூர், சௌரவ் மிஸ்ரா, ஏக்தா ஆர் கபூர், சோபா கபூர், விஷால் குர்னானி, ஜூஹி பரேக் மேத்தா, அபிஷேக் வியாஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

நந்த கிஷோர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ஒரே தருணத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்

Vrushabha The Warriors Arise movie release date on Dussehra

உலகிலேயே இதான் முதல் முறையாம்.. சென்சாரில் 16 கட்.; ‘எப்போதும் ராஜா’ குறித்து வின்ஸ்டார் விஜய்

உலகிலேயே இதான் முதல் முறையாம்.. சென்சாரில் 16 கட்.; ‘எப்போதும் ராஜா’ குறித்து வின்ஸ்டார் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர், மக்கள் தொடர்பாளர் என பன்முகம் கொண்டவர் வின்ஸ்டார் விஜய்.

இவரது தயாரிப்பில் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் ‘எப்போதும் ராஜா’.

இதன் விவரம் வருமாறு…

அண்ணன் தம்பியாக விண்ஸ்டார் விஜய் முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆறு பாடல் காட்சிகள், ஆறு சண்டை காட்சிகள் என மக்களுக்கு பிடித்துள்ள ஜனரஞ்சகமான படமாக அமைந்துள்ளது.

விண்ஸ்டார் விஜய்யுடன் ஜோ மல்லூரி, பி.சோம சுந்தரம், லயன்குமார், பிரியா, டெப்ளினா, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விரைவில் வெளிவர இருக்கும் இப்படம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது.

எப்போதும் ராஜா பாகம் 1 படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் விண் ஸ்டார் விஜய் தெரிவித்தாவது…

இந்த படம் தணிக்கை குழு 16 கட் கொடுத்துள்ளது. உலகிலேயே முதன்முறையாக கைப்பந்து விளையாட்டை கதைக்களமாக கொண்டு தயாரிக்கப்பட்டிக்ருகிறது.

இந்த படத்தில் சாதாரண மனிதன் சாதனை படைக்க போராடுவது தான். படத்தின் திரைக்கதை ஆரம்பத்தில் தமிழ்நாடு வாலிபால் சாம்பியன் ஆக அறிமுகம் ஆகி இந்திய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற முயற்சி செய்கிறேன். இதில் பல பிரச்சனைகளை சந்தித்து எப்படி வெற்றி பெற்தேன் என்பதே படத்தின் கதை என்கிறார்.
இந்த படம் தமிழகமெங்கும் விரைவில் 100 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.

Winstar Vijay talks about his movie Eppodhum Raja

விவசாயி தயாரிப்பாளரை ஏமாற்றிய இயக்குநர்.; ‘லியோ’ உடன் மோதும் ‘திரையின் மறுபக்கம்’

விவசாயி தயாரிப்பாளரை ஏமாற்றிய இயக்குநர்.; ‘லியோ’ உடன் மோதும் ‘திரையின் மறுபக்கம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா ரசிகர் சத்யமூர்த்தி ஒரு விவசாயி. அவர் வாயால் வடை சுடுகிற இயக்குனர் செந்திலிடம் ஏமாந்து அவர் நிலத்தை வைத்து ஒரு படம் தயாரிக்கிறார்.

இயக்க வழி தெரியாமல் திறமை இல்லாத செந்தில் சத்ய மூர்த்தியின் வீட்டை திரைப்பட பைனான்சியர் அன்பரசியிடம் அடமானம் வைக்கிறார்.

இயக்குனர் செந்தில் படம் பண்ணுவதில் பயங்கரமாக சொதப்ப விவசாயி சத்யமூர்த்தி செந்திலை நீக்கி விட்டு படத்தின் ஹீரோ, துணை இயக்குனர் உதவியோடு படத்தை முடிக்கிறார்.

அன்பரசியின் கழுகுப்பிடியிலிருந்து சத்யமூர்த்தி தப்பினாரா ..? படத்தை எப்படி வெளியே கொண்டு வரப்போகிறார் என்பதே கதை.

திரையின் மறுபக்கம் எனும் திரைப்படம் உண்மையும் நகைச்சுவையும் சார்ந்த கதை.

இப்படத்தை நிதின் சாம்சன் (Nitin Samson ) இயக்கியதோடு மட்டுமல்லாமல் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டு உள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, அமெரிக்கா (புளோரிடா) ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி உள்ளார். அக்டோபர் 20 ந்தேதி முதல் தமிழகமெங்கும் 60 தியேட்டர்களில் ரீலீசாகிறது.

விஜய்யின் ‘லியோ’ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போது மற்ற எந்த படங்களும் வெளியாகாத நிலையில் ‘திரையின் மறுபக்கம்’ படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Thiraiyin Marupakkam movie clash with Leo movie

கமல் – அமிதாப் – பிரபாஸ் இணைந்த ‘கல்கி 2898 ஏடி’ பட அப்டேட்

கமல் – அமிதாப் – பிரபாஸ் இணைந்த ‘கல்கி 2898 ஏடி’ பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது ’இந்தியன் 2’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் கமல்ஹாசன் அடுத்ததாக பிரபாஸ் நடிக்க இருக்கும் ‘கல்கி 2898 ஏடி’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.

பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ள இந்த படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என ஆறு மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது.

’நடிகையர் திலகம்’ என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படம் உருவாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதை அடுத்து அவரது கேரக்டரின் மாஸ் போஸ்டர் வெளியானது.

மேலும் இந்த படத்தில் அமிதாப்பச்சன் இணைவதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம் என்று படக்குழுவினர் பதிவு செய்துள்ளனர்.

கல்கி 2898 ஏடி

kamal amitabh prabhas starrer ‘Kalki 2898 AD’ shooting update

நல்ல கதையை நம்பி 4 கோடிக்குள் படம் தயாரிக்கலாம்.. – எஸ்.ஆர் பிரபு

நல்ல கதையை நம்பி 4 கோடிக்குள் படம் தயாரிக்கலாம்.. – எஸ்.ஆர் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் – அபர்னதி உள்ளிட்டோர் நடித்த படம் ‘இறுகப்பற்று’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்த இந்த படத்தை எஸ்.ஆர். பிரபு தயாரித்திருந்தார்.

அக்டோபர் 6 தேதி வெளியான இப்படம் வெற்றி பெற்ற நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசும்போது….

“இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பு ஒரு சின்ன தயக்கம் இருந்தது. வழக்கமாக பெரிய படங்களை எடுக்கும்போது ஓடுமா ஓடாதா என யோசிக்காமல் படத்தை எடுப்போம்.

ஆனால் யாராவது சின்ன படம் எடுக்கிறேன் என என்னிடம் சொன்னால் நல்ல படமாக எடுங்கள் என்று சொல்வேன். அப்போது என் மீது பலரும் கோபப்படுவார்கள். ஆனால் கொரோனா தாக்கத்திற்கு பிறகு நிலைமை எல்லாமே மாறியது. சின்ன பட்ஜெட்டில் அதுவும் நான்கு கோடிக்குள் படம் எடுத்தால் மக்கள் ஆதரவு கிடைக்குமா என சந்தேகம் ஏற்பட்டது.

காரணம் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து சிறிய படங்களை பார்ப்பது குறைந்துவிட்டது. த்ரில்லர் படம் என்றால் கூட இளைஞர்கள் படம் பார்க்க வருவார்கள். அவர்கள் மூலமாக படம் பற்றி வெளியே பரவிவிடும். ஆனால் குடும்ப படத்திற்கு அப்படி வருவார்களா என்கிற சந்தேகம் இருந்தது.

ஆனால் நல்ல கதை என்றால் தைரியமாக சின்ன பட்ஜெட் படங்களை எடுக்கலாம் என்கிற நம்பிக்கையை இறுகப்பற்று படத்திற்கு கிடைத்த வெற்றி மூலம் மக்கள் கொடுத்து இருக்கிறார்கள்.. அதற்காகத்தான் இந்த நன்றி தெரிவிக்கும் சந்திப்பு” என்றார்.

We can produce good script movie within 4 lakhs says SR Prabu

More Articles
Follows