தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.
இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்க நாளை அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாக உள்ளது.
கடந்த சில தினங்களாகவே ‘லியோ’ படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் இருக்குமா? இல்லையா? என்பது பற்றி விவாதங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை 9:00 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ரோகினி மற்றும் வெற்றி ஆகிய தியேட்டர்களில் லியோ திரைப்படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் ‘லியோ’ தயாரிப்பு நிறுவனம் ஒரு வாரத்தில் 80 சதவிகித லாபத்தை கொடுக்க வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு தியேட்டர் நிர்வாகம் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்யவில்லை என தெரிய வந்துள்ளது.
இவை மட்டும் இல்லாமல் சென்னையில் இன்னும் சில தியேட்டர்களிலும் இந்த பிரச்சனை நீடித்து வருவதால் லியோ திரைப்படம் ரிலீசாகாது எனவும் கூறப்படுகிறது.
Leo will not be released in Rohini and Vettri theatres