‘லியோ’ ட்ரைலர் வெளியிட்ட தியேட்டர்களுக்கு நோட்டீஸ்.; சென்சாரில் 13 கட்

‘லியோ’ ட்ரைலர் வெளியிட்ட தியேட்டர்களுக்கு நோட்டீஸ்.; சென்சாரில் 13 கட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’.

இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30-ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த நிலையில் திடீரென ரத்தானது.

இதைத்தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், “நிகழ்ச்சியை காண வரும் ரசிகர்களின் பாஸ் கோரிக்கைகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக வருகின்றன. எனவே பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல” என்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ‘லியோ’ இசை வெளியீட்டு விழா ரத்தானது தொடர்பாக சென்னை மாநகர போலீசாருக்கு தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தில், “செப்டம்பர் 30-ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவிருந்த ‘லியோ’ இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு அதிக பாஸ்கள் கோரிக்கை வந்ததால் பாதுகாப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், அதில் சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Vijay starrer ‘leo’ movie Gets 13 Changes to Censor Board orders

தமிழில் இதான் முதன்முறை.? ‘ரஜினி 171’ படத்திற்காக லோகேஷ் எடுக்கும் புதிய முயற்சி

தமிழில் இதான் முதன்முறை.? ‘ரஜினி 171’ படத்திற்காக லோகேஷ் எடுக்கும் புதிய முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படம் இன்னும் 9 தினங்களில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் ‘கைதி 2’ படத்தை இயக்குவார் எனக் கூறப்பட்டது.

ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ‘ரஜினி 171’ படத்தை இயக்க உள்ள லோகேஷ். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க அன்பறிவு சண்டை பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.

லியோ படத்தில் பணிபுரிந்த மனோஜ் பரஹம்ஸா என்பவர் தான் ‘தலைவர் 171’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

அதன்படி இந்த படத்தின் முக்கியமான காட்சிகளை ஐமேக்ஸ் கேமராவில் படமாக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படம் ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Lokesh plans for Imax Camera in Thalaivar 171 movie

சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாகும் நடிகை காஜல் அகர்வால்

சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாகும் நடிகை காஜல் அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால்.

இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் கமலுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இவருக்கு சமீபத்தில் திருமணம் ஆன நிலையில் வாய்ப்புகள் குறைந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.

காஜல் அகர்வால்

இந்த நிலையில் ராஜமௌலி இயக்கம் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவிற்கு வில்லியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ராஜமௌலி இயக்கத்தில் உருவான ‘மகதீரா’ படத்தில் ராம்சரண் மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மகேஷ்பாபு

Kajal agarwal plays negative role in Rajamouli direction

லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனருக்கு வாய்ப்பளித்த கமல்ஹாசன்

லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனருக்கு வாய்ப்பளித்த கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசனின் தீவிர ரசிகர் நான் என மேடைக்கு மேடை சொல்பவர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய மூன்று படங்களும் சூப்பர் ஹிட் அடிக்கவே ஹாட்ரிக் இயக்குனர் என்ற பெயரை பெற்றார் லோகேஷ்.

இதனையடுத்து கமல்ஹாசனின் படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக கமல் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் இயக்கியிருந்தார்.

இது சமீப காலத்தில் மெகா ஹிட் திரைப்படம் என வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடியது.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ்.

இந்த நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் தன்னுடைய உதவி இயக்குனர் விஷ்ணு எடவன் என்பவர்க்கு தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் கமல்ஹாசன் வாய்ப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாடல் ஆசிரியர் கதாசிரியர் மற்றும் உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் விஷ்ணு.

மேலும் லோகேஷ் கனகராஜ் உடன் கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

விரைவில் கமல்ஹாசன் மற்றும் விஷ்ணு எடவன் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

விஷ்ணு

Lokesh assistant Vishnus debut movie in Rajkamal films

எனக்கு ‘பேட்ட’-க்கு பிறகு ‘ஜிகர்தண்டா டபுள் X’ தான்.. – கார்த்திக் சுப்பராஜ்

எனக்கு ‘பேட்ட’-க்கு பிறகு ‘ஜிகர்தண்டா டபுள் X’ தான்.. – கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம், நான் இந்த மேடையில் நிற்பதற்கு ரொம்ப சந்தோஷப்படுகிறேன். ‘பேட்ட’ படத்திற்கு பிறகு இந்த படம் எனக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்று நினைக்கிறேன்.

‘பீட்சா’ இசை வெளியீட்டுக்கு சத்யம் தியேட்டருக்கு வந்தேன். அந்த மாதிரி உணர்வை இப்போது எனக்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தருகிறது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.

இந்த திரைப்படத்தை பற்றி நான் அதிகம் பேசமாட்டேன். இந்த கதையை பற்றி நீங்கள் பேசுவீர்கள் என்று நம்புகிறேன். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் கதிரேசன் சார் அவர்களுக்கு நன்றி. சந்தோஷ் நாராயணன் சொன்ன மாதிரி இந்தப்படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது. பத்திரிகையாளர் நண்பர்களுக்கு நன்றி. உங்கள் ஆதரவு கட்டாயம் வேண்டும். அனைவருக்கும் நன்றி.

After Petta movie Jigarthanda Double x will give me success says KS

கூடுதல் தகவல்…

ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் மற்றும் விக்ரம் நடித்த மகான் ஆகிய இரண்டு படங்களை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார். இந்த இரண்டு படங்களும் தோல்வியை தழுவியது இங்கே கவனிக்கத்தக்கது. ‘பேட்ட’ மாபெரும் வெற்றி பெற்றது. )

இயக்கம்: கார்த்திக் சுப்பராஜ்

தயாரிப்பு: கார்த்திகேயன் சந்தானம், எஸ். கதிரேசன்

அசோசியேட் தயாரிப்பாளர்: அலங்கார் பாண்டியன்

இசை: சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு: எஸ். திருநாவுக்கரசு

படத்தொகுப்பு: ஷஃபிக் முகமது அலி

தயாரிப்பு வடிவமைப்பாளர்: டி. சந்தானம்

சண்டை பயிற்சி: திலிப் சுப்புராயன்

கலை இயக்கம்: பாலசுப்ரமணியன், குமார் கங்கப்பன்

நடன அமைப்பு: ஷெரிப் எம், பாபா பாஸ்கர்

ஒலி வடிவமைப்பு: குணால் ராஜன்

ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் ராஜா

ஒப்பனை: வினோத். எஸ்

ஆடைகள்: சுபேர்

பாடல்கள்: விவேக், முத்தமிழ் ஆர்.எம்.எஸ்

ஸ்டில்ஸ்: எம். தினேஷ்

வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர்: எச். மோனேஷ்

கலரிஸ்ட்: ரங்கா

பப்ளிசிட்டி டிசைன்ஸ்: ட்யூனி ஜான்

டீசர் கட்: ஆஷிஷ்

சவுண்ட் மிக்ஸ்: சுரேன். ஜி

ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர்: கணேஷ் பி.எஸ்

தயாரிப்பு நிர்வாகி: ஜி. துரைமுருகன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்: ராஜ்குமார்

தயாரிப்பு மேலாளர்கள்: என். சண்முக சுந்தரம், ரங்கராஜ் பெருமாள்

நிர்வாகத் தயாரிப்பாளர்: அசோக் நாராயணன். எம்

ரஜினி போல கார்த்திக் சுப்புராஜும் என் குருதான்… – ராகவா லாரன்ஸ்

ரஜினி போல கார்த்திக் சுப்புராஜும் என் குருதான்… – ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது…

வந்திருக்கும் பத்திரிக்கையாளர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் என் மேல் அன்பு செலுத்தும் என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

‘ஜிகர்தண்டா 1’ நான் பண்ணவேண்டியது. கதிரேசன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் கதை சொன்னார்கள்.

தெலுங்கு படத்தில் நான் பணியாற்றிக் கொண்டு இருந்ததால் அந்தப்படத்தை என்னால் செய்ய முடியவில்லை. நான் ரொம்ப மிஸ் பண்ணிவிட்டேன் என்று கவலைப்பட்டேன்.

அதற்கு கடவுள் கொடுத்த வாய்ப்பு தான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. எனக்கு வாழ்க்கையில யாரெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்களோ அவர்களை நான் குரு என்று தான் சொல்லுவேன்.

பாலசந்தர் சார் கூட ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறேன். ரஜினி சாரை நான் குரு என்று தான் சொல்லுவேன். கார்த்திக் சுப்பராஜும் இப்போது குரு தான். அவர் என்ன சொன்னாரோ அது தான் இந்தப்படம்.

கார்த்திக் சுப்பராஜ் இந்தப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கி உள்ளார். படப்பிடிப்பு நடைபெற்ற இடம் ஒன்றில் மக்களுக்காக சாலை அமைத்து தந்துள்ளார்கள். அடுத்தவர்களுக்கு உதவிய காரணத்திற்காகவே இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும்.

சந்தோஷ் நாராயணன் சாரோட பெரிய ரசிகன் நான். நிறைய மேடைகள் இருக்கிறது. இந்தப்படத்தை பற்றி நிறைய பேச வேண்டும். எஸ் ஜே சூர்யா சாருடன் நடித்தது மகிழ்ச்சி.

Like Rajini Karthik Subburaj also my Guru says Lawrence

More Articles
Follows