முதல் படத்திலேயே 3 வேடங்களில் நடிகர் துஷாந்.; பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஜிவி. பிரகாஷ்

முதல் படத்திலேயே 3 வேடங்களில் நடிகர் துஷாந்.; பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DUNSTAN INTERNATIONAL FILM CORPORATION என்ற பட நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள படத்திற்கு “இருளில் ராவணன்’ என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.

அதிரடியாக முதல் படத்திலேயே மூன்று வேடங்களில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகிறார் துஷாந்.

‘பத்து என்றதுக்குள்ள’, ‘ரங்கூன்’ போன்ற படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

அஜித் கோஷி, பாய்ஸ் ராஜன், சந்திரமௌலி, போராளி திலீபன், விஜய் டிவி முல்லை, யூடியுபர் கட்டெறும்பு ஸ்டாலின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மெமரீஸ், க் போன்ற படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஸ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இருளில் ராவணன்

ஆற்றல், சிக்லேட்ஸ் படங்களின் ஒளிப்பதிவாளர் R.கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்துவருகிறார். அப்பா, போராளி, நாடோடிகள், ஈசன் போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த A.L.ரமேஷ் இந்த படத்திற்கும் எடிட்டிங் செய்கிறார். விஜய், அஜித் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்த தினேஷ் மாஸ்டர் இந்த படத்திற்கும் நடனம் அமைத்து வருகிறார்.

கலை இயக்கம் – மதன்
தயாரிப்பு மேற்பார்வை – தண்டபாணி
மக்கள் தொடர்பு – மணவை புவன்

தயாரிப்பு – DUNSTAN INTERNATIONAL FILM CORPORATION

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் A.V.S.சேதுபதி.

இருளில் ராவணன்

படம் பற்றி இயக்குனர் A.V.S.சேதுபதி பகிர்ந்தவை…

முழுக்க முழுக்க ராவண தேசத்தில் நடைபெறும் ஆக்ஷன் கலந்த கிரைம் திரில்லர் படமாக உருவாக்கியுள்ளோம்.

வீழ்ந்தவன் எழுந்தால் விபரீதங்களும் விளையும் என்பதுதான் இந்த படத்தின் மையக்கரு.

முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது இராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றயுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மிக விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் A.V.S.சேதுபதி.

மேலும், “இருளில் ராவணன்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை போஸ்டரை ஜிவி. பிரகாஷ் வெளியிட்டார்.

இருளில் ராவணன்

Gv Prakash launched Irulil Ravanan first look

கையில் பாட்டில்.. வாயில் சிகரெட்.; தனுஷின் ஹிந்தி பட டீசர் வெறித்தனம்.!

கையில் பாட்டில்.. வாயில் சிகரெட்.; தனுஷின் ஹிந்தி பட டீசர் வெறித்தனம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்த வருகிறார்.

இந்த படத்திற்காக நீண்ட தலை முடி.. நீண்ட தாடி என வித்தியாசமான கெட்டப்பில் வலம் வருகிறார்.

இந்த படத்தை முடித்த பிறகு சேகர் கம்முலா என்ற தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படங்களை அடுத்து தனுஷ் நடிப்பில் உருவாகும் 50வது படத்தை அவரே இயக்க உள்ளதாகவும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் அப்டேட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு.

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு ‘தேரே இஷ்க் மெய்ன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த டீசரில் தனுஷ் கையில் ஒரு பாட்டிலும் வாயில் சிகரெட்டையும் வைத்து ஓடி வருகிறார் தனுஷ்.

அந்த பாட்டிலை வேகமாக தனுஷ் தூக்கி வீச, அது ஒரு இடத்தில் பட்டு ‘தேரே இஷ்க் மெய்ன்’ பட டைட்டில் வெளியாகிறது.

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஹிந்தியில் தனுஷ் நடித்த ரஞ்சனா, அத்ரங்கி ரே ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டானது.

ரஞ்சனா படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. ஆனால் தமிழில் இந்த படம் தோல்வியை தழுவியது.

மேலும் பால்கி இயக்கத்தில் அமிதாப்புடன் ‘ஷமிதாப்’ என்ற ஒரு ஹிந்தி படத்திலும் தனுஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ்

Dhanush new Hindi movie title teaser goes viral

மகேஷ் பாபு படத்திலிருந்து விஜய் பட நாயகி விலகல்.; தனுஷ் நாயகி இணைந்தார்?!

மகேஷ் பாபு படத்திலிருந்து விஜய் பட நாயகி விலகல்.; தனுஷ் நாயகி இணைந்தார்?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடுத்து வரும் ‘குண்டூர் காரம்’ படத்தை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் நாயகியாக விஜய்யின் ‘பீஸ்ட்’ பட ஹீரோயின் பூஜா ஹேக்டே ஒப்பந்தமானார். ஈனால் மகேஷ்பாபு வீட்டில் நடைபெற்ற அடுத்தடுத்து இரண்டு துக்க நிகழ்ச்சியால் படப்பிடிப்பு தாமதமானது.

எனவே நாயகி பூஜாவின் கால்ஷீட் விவகாரத்தில் குளறுபடி உருவானது.

இதனையடுத்து அவர் இந்த படத்தில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதிய நாயகியாக சம்யுக்தா கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது்

இவர் சமீபத்தில் வெளியான தனுஷின் ‘வாத்தி’ மற்றும் ‘விருபாக்‌ஷா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Samyuktha pairs with Mahesh babu in Telugu movie

‘லியோ’-வே விட்டுட்டாங்க ‘ஜெயிலர்’ காணல.; நெல்சனுக்கு டென்ஷன் கொடுக்கும் ரஜினி ரசிகர்கள்

‘லியோ’-வே விட்டுட்டாங்க ‘ஜெயிலர்’ காணல.; நெல்சனுக்கு டென்ஷன் கொடுக்கும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த இரு தினங்களாக அதாவது ஜூன் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு தினங்களில் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்ட பெயர் ‘லியோ’.

நேற்று நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ‘நா ரெடி…’ என்ற முதல் சிங்கிள் வெளியானது.

இதற்கு முந்தைய நாள் ஜூன் 21ஆம் தேதி இயக்குனர் நெல்சனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

நெல்சன் தற்போது ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 50 நாட்கள் மட்டுமே ஜெயிலர் ரிலீசுக்கு இடைவெளி உள்ள நிலையில் படத்தின் பாடலோ போஸ்டரோ டீசரோ எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிள் தற்போதே வெளியாகி உள்ளதால் ‘ஜெயிலர்’ அப்டேட் கேட்டு ரஜினி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இனியாவது ரஜினி ரசிகர்களை டென்ஷனில் விடாமல் அடுத்தடுத்து அப்டேட்டுகளை நெல்சன் வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.

Rajinikanth fans tension with Nelson

தமிழில் 1.. தெலுங்கில் 1.; வாடி வாசலுக்கு முன்பே 2 படங்களில் கமிட்டாகும் சூர்யா.?!

தமிழில் 1.. தெலுங்கில் 1.; வாடி வாசலுக்கு முன்பே 2 படங்களில் கமிட்டாகும் சூர்யா.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் உருவாகும் ‘கங்குவா’ என்ற படத்தில் சூர்யா 10 விதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.

இந்த படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் மிகவும் பிரம்மாண்டமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வெற்றிமாறனின் படம் தாமதமாகும் எனக் கூறப்படும் நிலையில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு படம் ‘சூரரைப் போற்று’ புகழ் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்திலும் தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு என்பவர் இயக்கத்திலும் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் இதுவரை இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Before Vaadivasal Suriya committed 2 movies

LCU சொன்னாரே.. ‘லியோ’ பட போஸ்டரை கூட காப்பியடிச்சி இருக்காரே லோகேஷ்.?!

LCU சொன்னாரே.. ‘லியோ’ பட போஸ்டரை கூட காப்பியடிச்சி இருக்காரே லோகேஷ்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ’ படத்தை தன்னுடைய வழக்கமான LCU பாணியில் உருவாக்கி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

நேற்று ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு நான் ரெடி என்ற முதல் சிங்கள் வெளியானது.

மேலும் ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இதில் ரத்தம் தெறிக்க தெறிக்க சுத்தியலை சுழற்றி அடிப்பதாக விஜய் போஸ் கொடுத்திருந்தார்.

இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ‘லியோ’ பட போஸ்டர் ஹாலிவுட் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் தெரிவித்து ஒரு படத்தையும் பகிர்ந்துள்ளனர்.

‘Game of Thrones’ வெப் தொடரில் வரும் ஜான் ஸ்னோவ் போஸ்டர் லுக் போன்று இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Game of Thrones

Leo poster is copycat of Game of Thrones

More Articles
Follows