தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கிஷோர், லதா ராவ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கடிகார மனிதர்கள்.
வைகறை பாலன் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் பேசியதாவது…
“காவிரி பிரச்சனை பற்றி பேசினாலும் பிரச்சினை. பேசாமல் இருந்தாலும் பிரச்சினை. கன்னட நடிகர்கள் ஏதோதோ பேசுகிறார்கள்.
அதை கேட்கும் நமக்கே இப்படி இருக்கிறது என்றாலும் கர்நாடகாவில் இருந்து வந்து தமிழ்நாட்டிற்கு வந்து, சூப்பர் ஸ்டாரா இருக்கும் ரஜினிக்கு எப்படியான தர்மசங்கடம் ஏற்பட்டு இருக்கும்.
இந்த காவிரி நீர் பிரச்சனையை அமைதியாக பேசித் தீர்த்துக் கொள்வதுதான் சரியான வழி.” என்றார்.