தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுமார் 10 வருடங்களுக்கு முன்பு… ‘பாண்டியநாடு’ மற்றும் ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய இரு படங்களில் விஷால் மற்றும் லட்சுமிமேனன் இணைந்து ஜோடியாக நடித்திருந்தனர்.
இந்தப் படங்கள் வெளியானது முதலே இருவருக்கும் காதல் என்ற செய்திகள் அவ்வப்போது வந்தன.
ஆனால் அதன் பிறகு இருவரும் அவரவர் பாதைகளில் பயணிக்க தொடங்கினர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக விஷால் மற்றும் லட்சுமிமேனன் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
நம் FILMISTREET தளத்தில் அப்படி எந்த ஒரு தவறான செய்தியும் பதிவிடவில்லை.
இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி காலை தன்னுடைய twitter பக்கத்தில் விஷால் இந்த திருமணம் செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அவரின் பதிவில்..
“பொதுவாக என்னைப் பற்றிய எந்த போலிச் செய்திகளுக்கோ அல்லது வதந்திகளுக்கோ நான் பதிலளிப்பதில்லை. அப்படி செய்வது பயனற்றது.
ஆனால் தற்போது நடிகை லட்சுமி மேனன் உடனான எனக்கு திருமணம் என்கிற ரீதியில் வதந்தி பரவி வருவதால், நான் இதை மறுக்கிறேன்.
என்னுடைய இந்த விளக்கத்துக்கு காரணம், இதில் சம்பந்தப்பட்டிருப்பவர் ஒரு நடிகை என்பதை விட முதலில் அவர் ஒரு பெண். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்து அவருடைய இமேஜைக் கெடுக்கிறீர்கள்.
நான் யாரை திருமணம் செய்வேன் என்பதை ஆராய்வதற்கு அது ஒன்றும் பெர்முடா முக்கோணம் அல்ல. நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அறிவிப்பேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்”
இவ்வாறு விஷால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
It’s not Bermuda triangle to decode Vishal about his marriage rumours