சிந்திய வேர்வைக்கு வெற்றியும் பாடமும் கிடைத்தது.; ‘தேசிங்கு ராஜா 2’ குறித்து எழில்

சிந்திய வேர்வைக்கு வெற்றியும் பாடமும் கிடைத்தது.; ‘தேசிங்கு ராஜா 2’ குறித்து எழில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.எழில் இயக்கத்தில் ‘தேசிங்கு ராஜா2’ படத்தில் நாயகனாக நடிக்கிறார் விமல்.

இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பாக P.ரவிசந்திரன் தயாரிக்கிறார்.

விமல் ஜோடியாக பூஜிதா பொனாடா நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் ஜனா நடிக்கிறார்.

மேலும், ஹர்ஷிதா, ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொல்லு சபா சாமிநாதன், மாதுரி முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் போன்றோர் கலக்குகிறார்கள்.

வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் நான்கு நண்பர்கள் வேறு வேறு பாதையில் பயணிக்கிறார்கள்.

இவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது.. இவர்கள் எந்த சூழ் நிலையில் மீண்டும் சந்திக்கிறார்கள் என்பதை படம் முழுக்க காமடி கதையாக உருவாக்கி இருக்கிறார் டைரக்டர் எழில்.

 தேசிங்கு ராஜா2

படம் பற்றி இயக்குநர் எழில் கூறும்போது…

“காமெடி என்று வந்துவிட்டால் விமல் அந்த அலைவரிசைக்கு பிரமாதமாக செட் ஆகி விடுவார். ரவி மரியா, ரோபோ சங்கர், கிங்ஸ்லி, மதுரை முத்து, மதுமிதா என காமெடி கூட்டணி களை கட்டியுள்ளது.

குறிப்பாக முதல் பாகத்தில் பண்ணையாராக நடித்த ரவிமரியா இதில் அரசியல்வாதியாக அட்ராசிட்டி செய்கிறார்.

‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்திற்கு எப்படி எனக்கு எனர்ஜியோடு அழகான பாடல்களை வித்யாசாகர் கொடுத்தாரோ இதிலும் அதேபோல கொடுத்திருக்கிறார். பாடல்கள் பெரிதாக பேசப்படும். தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் செலவை பார்க்காமல் தயாரித்துள்ளார்.

25 வருடங்களில் 15 படங்கள் இயக்கி உள்ளேன். இதை பெரிய சாதனை என்று சொல்ல முடியாது. ஆனாலும் நண்பர்கள் விரும்பினார்கள் என்பதற்காக 25 ஆம் ஆண்டு விழா நடத்தினோம்.

ஆரம்பத்தில் காதல் படங்களை எடுத்துக் கொண்டிருந்த நான் அப்படியே காமெடிக்கு திசை திரும்பியது ஒன்றும் பெரிய குறை இல்லை. இங்கே சிந்திய வியர்வைக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது. நிறைய பாடமும் கற்று இருக்கிறேன். பிழைகளை திருத்திக் கொண்டு அடுத்தடுத்து சென்று கொண்டிருக்கிறேன்.

சமீபத்தில் நடிகர் விஜய்யை சந்தித்தபோது பிஸியான சூழலிலும் என்னிடம் அரை மணி நேரத்திற்கு மேல் பேசினார். சினிமாவில் புகழ் வெளிச்சம் கிடைக்கும்போது நம் குணத்தை அது மாற்றாமல் இருக்க வேண்டும். வெற்றி கூட சுலபம்தான்.. ஆனால் அதை தக்க வைக்க பெரும்பாடு பட வேண்டி இருக்கிறது.

இத்தனை வருடமாக சினிமாவில் இருந்தாலும் என்னுடைய கனவும் நேற்று வந்து சினிமா பண்ணுறவங்க கனவும் ஒன்றுதான்.. கற்பனைக்கும் கனவுக்கு வயதில்லை” என்று கூறியுள்ளார்.

படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. குடும்பங்கள் ஜாலியாக கொண்டாடும் சம்மர் வெளியீட்டாக படம் தயாராகி வருகிறது.

இசை: வித்யாசாகர்
இணை தயாரிப்பு: ஆர்.பாலகுமார்
ஒளிப்பதிவு: செல்வா.ஆர்
எடிட்டிங்: ஆனந்த் லிங்கா குமார்
ஆர்ட்: சிவசங்கர்
ஸ்டண்ட் : ஸ்டண்ட்: ‘ஃபயர்’ கார்த்திக்
நடனம் : தினேஷ்
பாடல்கள்: விவேக்
பி.ஆர்.ஓ: ஜான்சன்

 தேசிங்கு ராஜா2

Director Ezhil talks about Designu Raja 2

‘சத்திய சோதனை’ இயக்குனருடன் கூட்டணி அமைத்த யோகி பாபு

‘சத்திய சோதனை’ இயக்குனருடன் கூட்டணி அமைத்த யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த படைப்பாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படத்தை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார், லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார்.

முன்னதாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியான “ஒரு கிடாயின் கருணை மனு” மற்றும் “சத்திய சோதனை” படங்கள் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்த புதிய திரைப்படத்தின் அறிவிப்பு, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

RB Talkies சார்பில் S.R. ரமேஷ் பாபு மற்றும் Box office studios சார்பில் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படத்தில் நடிகர்கள் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

படம் குறித்து நடிகர் யோகி பாபு கூறுகையில்…

“சுரேஷ் சங்கையாவின் ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை ஆகிய படங்களை நான் பார்த்திருக்கிறேன்.

எனக்கு மிகவும் பிடித்த படங்கள் . அவருடைய படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருந்தேன், அந்த அதிர்ஷ்டகரமான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. இது டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படைப்பாகும்.

மேலும் வரும் காலங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் பல தரமான கதையம்சமுள்ள படைப்புகளில் நான் தொடர்ந்து நடிப்பேன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்” என்றார்.

படம் குறித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா கூறுகையில்…

“இந்த வாய்ப்பை வழங்கிய டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்த படத்தின் திரைக்கதை அனைத்து பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில், அசத்தலான பொழுதுபோக்குடன், பரபரப்பான ரோலர் கோஸ்டர் அனுபவமாக இருக்கும்.

மேலும் இப்படத்தில் சமூகத்திற்குத் தேவையான அவசியமான செய்தியும் இருக்கும்” என்றார்.

படம் குறித்து நடிகை லவ்லின் சந்திரசேகர் கூறுகையில்….

“இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் அற்புதமான திரைக்கதையில் நடிப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் நான் அழகான மற்றும் தைரியமான இளம் பெண்ணாக நடிக்கிறேன்.

ஒரு மிகச்சிறந்த திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி” என்றார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் படத்திற்கு நிவாஸ் K பிரசன்னா இசையமைக்க, V. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். P.L. சுபேந்தர் கலை இயக்கம் செய்ய, படத்தொகுப்பை R.ராமர் கையாள்கிறார்.

Yogibabu and Suresh Sangaiya combo new movie

நாங்க கேட்டது லவ்.. அவர் கொடுத்தது ஆக்ஷன்..; கௌதம் ஸ்டைலில் பேசிய வருண்

நாங்க கேட்டது லவ்.. அவர் கொடுத்தது ஆக்ஷன்..; கௌதம் ஸ்டைலில் பேசிய வருண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் வருண் நாயகனாக நடித்துள்ள ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகிறது.

இதில் ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். கிருஷ்ணா, யோகிபாபு, டிடி, மன்சூர் அலிகான், விசித்ரா என்று பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

படத்தின் நாயகன் வருண் பேசியதாவது…

“இந்தப் படத்தில் எனக்கு சிறப்பான அனுபவம் கிடைத்தது. இதன் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். என்னை சிறந்த நடிகராக மாற்றிய கெளதம் சாருக்கு நன்றி. அவரது ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் கேட்டது ஒரு ஜாலியான லவ் படம்.

ஆனால், எனக்கு அவர் கொடுத்தது ஆக்‌ஷன் படம். ‘மாவீரன்’, ‘ஜவான்’ படங்களில் பணிபுரிந்த யானிக் பென் இதில் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார்.

இது எனக்குப் பெருமையான விஷயம். சூப்பரான இசை கொடுத்த கார்த்திக் ப்ரோ, என்னை அழகாகக் காட்டிய கதிர் சார், எடிட்டர் ஆண்டனி அண்ணா, போஸ்டர் டிசைன் செய்த கபிலன் என அனைவருக்கும் நன்றி. படம் ஒரு சீரியஸான மோடில்தான் இருக்கும். டிடி, கிருஷ்ணா என ஜாலியான நபர்களுடன் சீரியஸாக நடித்திருக்கிறேன். ராக்கே, கிட்டி சார், மன்சூர் அலிகான், விசித்ரா மேம் எல்லோருக்கும் நன்றி. வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி சாருக்கும் கெளதம் சாருக்கும் நன்றி. இந்தப் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலாக உள்ளேன்” என்றார்.

கெளதம் மேனன் பேசியதாவது…

“நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே செய்வதற்கு சுதந்திரம் கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி சாருக்கு நன்றி. வருண் குழந்தைப் போலதான். 10,15 படங்களில் நடித்துள்ளதால் சொல்கிறேன்.

கேமரா முன்னால் நின்று, 100 பேர் முன்னால் நடிப்பது எளிதான விஷயம் கிடையாது. அதை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் நடித்துக் கொடுத்தார் வருண்.

படத்தில் பாதி இடத்தில் செருப்பு, ஷூ இல்லாமல் நடித்தார். ஹீரோ கிருஷ்ணாவும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிடி, கதிர், கார்த்திக் என நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர். உங்களோடு நானும் படம் பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்…

“’சிங்கப்பூர் சலூன்’ வெற்றியைத் தொடர்ந்து இப்போது இந்தப் படத்திற்காக உங்களைச் சந்திக்கிறேன். மார்ச்1 அன்று ‘ஜோஷ்வா இமை போல காக்க’ படம் வெளியாகிறது. இதுவும் எங்களுக்கு லாபம் தரும் என்று நம்புகிறேன்.

இந்தப் படம் ஒரு பரிசோதனை முயற்சி என்று கெளதம் சார் சொன்னார். நான் உடனே சம்மதம் சொன்னேன். எந்தவொரு படத்தின் கதை, படப்பிடிப்பில் நான் பொதுவாக தலையிட மாட்டேன். ஆனால், எதேச்சையாக இதன் படப்பிடிப்பு பார்க்க நேர்ந்தது.

இதுவரை தயாரித்த 25 படங்களில் நான் பார்த்த முதல் படப்பிடிப்பு இந்தப் படம்தான். அதுவும் போய் 10 நிமிடங்கள் பொதுவாக பேசிவிட்டு வந்தேன். என்னுடைய சகோதரி மகன் தான் வருண். நான் தயாரிக்கும் படங்களில் எல்லாம் கேமியோ ரோல் நடித்துக் கொண்டிருந்தார்.

எனக்கு கெளதமின் லவ் படங்கள் பிடிக்கும். அவரிடம் வருணை அறிமுகப்படுத்தினேன். வருண் சாக்லேட் பாய் போல உள்ளான் எனக் கூறி அவரை வைத்து சூப்பர் லவ் ஸ்டோரி செய்யலாம் என்று கெளதம் உற்சாகமாக சொன்னார்.

பிறகு இது ஆக்‌ஷன் படமாக மாறியது. வருண் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி கிடையாது. ஒவ்வொரு வேலைக்கும் தனது கடின உழைப்பைக் கொடுப்பார். இளைஞர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். படத்தில் 10 சண்டைக் காட்சிகள் உள்ளது. படம் முழுக்க ஆக்‌ஷன் தான். ஹாலிவுட் படம் போல ஆக்‌ஷன் காட்சிகளை எடுத்திருக்குறார்கள். அதற்கு கதிரின் ஒளிப்பதிவும், கார்த்திக்கின் இசையும் பெரும் பலம். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக உழைத்துள்ளனர். இதில் நடித்துள்ள கிருஷ்ணாவுக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

ஜோஷ்வா இமை போல காக்க

Joshua imai pol kakka movie action says Varun

எலக்சனுக்காக விஜயகுமாருடன் கூட்டணி வைத்த ‘அயோத்தி’ நடிகை

எலக்சனுக்காக விஜயகுமாருடன் கூட்டணி வைத்த ‘அயோத்தி’ நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘உறியடி’, ‘ஃபைட் கிளப்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.‌

இதனை முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் சேதுபதி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘எலக்சன்’.

இதில் விஜய்குமார் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘அயோத்தி’ படப் புகழ் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார்.

இவர்களுடன் நடிகை ரிச்சா ஜோஷி, நடிகர்கள் ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத, மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாள, கலை இயக்கத்தை ஏழுமலை மேற்கொண்டிருக்கிறார்.

வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் அரசியலை மையப்படுத்தித் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் கதையின் நாயகனான விஜய்குமாரின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றிருக்கிறது.

விரைவில் இப்படத்தின் டீசர், சிங்கிள் ட்ராக் , லிரிக்கல் வீடியோ, ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

எலக்சன்

Vijayakumar starring Election based on local body election

கார்கில் போருக்குப் பின் 1999-ல் ராணுவ வீரனின் மனைவிக்கு நடந்த ‘பர்த் மார்க்’

கார்கில் போருக்குப் பின் 1999-ல் ராணுவ வீரனின் மனைவிக்கு நடந்த ‘பர்த் மார்க்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பர்த் மார்க்’. இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் பேசியதாவது…

“குழந்தைப் பிறப்பு முறை பற்றி இந்தப் படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ’பர்த் மார்க்’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கக் காரணம் கதையோடு சேர்ந்த வந்த விஷயம் என்பதால்தான்.

இந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு விஷயமும் ‘பர்த் மார்க்’ போல எங்கள் கூடவே ஒட்டிக் கொண்டது. கார்கில் போருக்குப் பிறகு 1999-ல் நடக்கும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. அப்போதிருக்கும் மனநிலையைதான் ஷபீரின் டேனி கதாபாத்திரம் திரையில் பிரதிபலித்திருக்கும்.

மிர்னாவும் ஜெனி என்ற கர்ப்பிணி பெண்ணாக சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நிஜமான கர்ப்பிணியின் வயிறு, அதன் எடை போலவே உண்மையான புராஸ்தெடிக் வயிறு மிர்னாவுக்கு செய்து கொடுத்தோம். அதை வைத்துக் கொண்டே அவர் படம் முழுக்க நடந்து, ஓடி நடித்திருப்பார். அது பெரிய விஷயம். போர் வீரனுடைய மனநிலை மற்றும் கர்ப்பிணி பெண்ணின் மாற்றங்கள் என அனைத்தையும் முறையாக ரிசர்ச் செய்துதான் உருவாக்கி இருக்கிறோம் இதற்கே எங்களுக்கு ஒரு வருடம் ஆனது. படத்திற்கு விஷால் சந்திரசேகரின் இசை மிகப்பெரிய பலம். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை நீங்கள் கொடுக்க வேண்டும்”.

பர்த் மார்க்

நடிகர் ஷபீர்..

“‘சார்பட்டா’ படம் மூலம் நீங்கள் கொடுத்த அனைத்து அன்புக்கும் நன்றி. ‘சார்பட்டா’ படத்திற்குப் பிறகு நான் முதலில் கையெழுத்துப் போட்ட படம் இது.

இதன் பிறகுதான், ‘கிங் ஆஃப் கொத்தா’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ மற்றும் இன்னும் சில தெலுங்கு படங்களில் நடித்தேன்.

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இயக்குநர் கொடுத்த இன்புட் வைத்தே படத்தில் என்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன்.

மிர்னாவுக்கு இன்னைக்கு உடம்பு சரியில்லை. அதனால்தான், அவரால் இங்கு வரமுடியவில்லை. படத்தில் லிப்லாக் வைக்க வேண்டும் என்று திணிக்கவில்லை. கதைக்கு அந்த எமோஷன் தேவைப்பட்டது. நிச்சயம் படம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

மேடையில் இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன், ஷபீருடன் நடிகர்கள் தீப்தி, பொற்கொடி, ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல், எடிட்டர் இனியவன் பாண்டியன் எனப் படக்குழுவினரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பர்த் மார்க்

Shabeer and Mirnaa starrer Birthmark movie press meet

கயல் ரிலீசாகி 10 வருஷமாச்சு.; அன்று முதல் இன்று வரை சினிமாவை கற்கிறேன்.. – ஆனந்தி

கயல் ரிலீசாகி 10 வருஷமாச்சு.; அன்று முதல் இன்று வரை சினிமாவை கற்கிறேன்.. – ஆனந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ஆனந்தி நடித்துள்ள திரைப்படம் ‘மங்கை’.

இந்த படம் மார்ச் 1ம் தேதி வெளியாகியுள்ள நிலையில் நேற்று இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற

இயக்குநர் ஹலிதா சமீம் பேசுகையில்…

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் மிக நன்றாக வந்திருக்கின்றன. எல்லோருக்கும் உதவுவதற்காகவே ஒருவர் இருக்கிறார் என்றால் அது கார்த்திக் துரை தான்.

தீயாக இருக்கும் தீசனின் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. சென்ற ஆண்டின் முழுமையான திரைப்படமாக நான் ‘கிடா’ திரைப்படத்தை தான் பார்க்கிறேன். துஷி ‘ஈசன்’ திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருப்பார். அவருக்கு வாழ்த்துகள். இப்படம் பேச இருக்கும் கருத்திற்காக நான் இப்படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

தயாரிப்பாளர் ஜாஃபர் பேசும் போது…

எல்லோருக்கும் வணக்கம். திரைப்பட இயக்குநர்கள், நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு திரைப்படத்தை எடுப்பது மட்டுமே முக்கியமான வேலை இல்லை. அதை சரியாக மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதும் முக்கியமான வேலை என்று நான் நம்பி உழைத்துக் கொண்டிருக்கிறேன். ‘மங்கை’ மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. துஷி, கயல் ஆனந்தி மற்றும் சிறப்பான பாடல்கள் என ஒவ்வொன்றாக படத்தில் சேர்ந்து கொண்டே இருந்தார்கள். இசையமைப்பாளராக கிடைத்த வாய்ப்பை தீசன் சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார். ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்பதில் இருந்து தான் இப்பயணம் துவங்கியது. பத்திரிகை நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நடிகை ஆனந்தி பேசும் போது…

அனைவருக்கும் வணக்கம். இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ‘கயல்’ வெளியாகி பத்து ஆண்டுகள் கழித்து ‘மங்கை’ படம் வெளியாக இருக்கிறது. ‘மங்கை’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.

பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது நான் படத்தில் நடிக்க வந்துவிட்டேன். அப்போது சினிமா குறித்து ஒன்றும் தெரியாது. இப்பொழுதும் பெரிதாக ஒன்றும் தெரியாது. இப்பொழுது தான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

என் படங்களை எடுத்துப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும். கண்டிப்பாக இப்படத்தின் மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன். படம் பாருங்கள். கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். தயாரிப்பாளர் ஜாஃபர் எங்களுக்கு கிடைத்த வரம்.

படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க அவ்வளவு உழைத்திருக்கிறார். எக்ஸீகியூட்டிவ் புரொடியூசர் கார்த்திக் சார் எல்லா வேலைகளையும் எடுத்து செய்வார். எல்லாவித உதவிகளையும் எல்லோருக்கும் செய்பவர். அவருக்கு நன்றி. இன்றைய விழா நாயகன் தீசன் அவர்களுக்கு வாழ்த்துகள், மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ஸ்டார் அவர்களுக்கு நன்றி. ஷிவின் எனக்கு ஒரு நல்ல தோழியாக மாறி இருக்கிறார். அது போல் துஷி எனக்கு நல்ல நண்பர். ஜே.பி சாரின் பையன் என்பதை எல்லாம் காட்டிக்கொண்டதே இல்லை.
நல்ல படங்களை எப்போதும் ஆதரிப்பீர்கள். இப்படத்திற்கும் உங்கள் ஆதரவை தாருங்கள். ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.” நன்றி.

எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் கார்த்திக் துரை பேசும் போது…

எல்லோருக்கும் வணக்கம். தயாரிப்பாளர் ஜாஃபர் சார், பிற நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் பேசும் போது…

அனைவருக்கும் வணக்கம். என் அம்மா, அப்பா, மனைவி மற்றும் கடவுளுக்கு நன்றி. என் மனைவிக்கு ஏன் நன்றி சொல்கிறேன் என்றால் வீட்டில் இருக்கும் மங்கை நன்றாக இருந்தால் தான் வெளியில் ஜெயிக்க முடியும். இந்த ‘மங்கை’ வெற்றிபெற வாழ்த்துகள். வாய்ப்பு கொடுத்த ஜாஃபர் சாருக்கு நன்றி. இயக்குநர் குபேந்திரன் சார் சொன்னார் நாங்க ஒரு சின்ன படம் பண்றோம், சப்போர்ட் செய்யணும் என்று. படம் சின்ன பட்ஜெட் பெரிய பட்ஜெட் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று சொன்னேன். இப்படத்தின் க்ளைமாக்ஸ் மங்கைகளுக்கும் மட்டுமின்றி ஆடவர்களுக்கும் மிக முக்கிய பாடமாக அமையும் என்று கூறி விடை பெறுகிறேன்.

இயக்குநர் குபேந்திரன் காமாட்சி பேசும் போது…

அனைவருக்கும் வணக்கம். பத்திரிகை, ஊடக மற்றும் இணையதள நண்பர்கள் அனைவருக்கு வணக்கம்.

தீசன் எப்போதுமே பாஸிட்டிவ் எனெர்ஜியுடன் இருப்பார். அவருக்கு மிக்க நன்றி. படப்பிடிப்புக்கு போகும் போது ஒரு பாடல் மட்டும்தான் இருந்தது. பின்னர் அது ஐந்து பாடல்களாக ஆனது. அதற்கு தீசனின் இசை ஒரு காரணம். பாடலாசிரியர்கள் கபிலன், யுகபாரதி, கார்த்திக் நேத்தா அனைவருக்கும் நன்றி.

படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் ஜாஃபர் சார் மற்றும் ஒளிப்பதிவாளர் ஸ்டார் சார் அனைவருக்கும் நன்றி, படத்திற்கு பத்திரிகையாள்ர்களான் நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

Mangai will be milestone in my life says Anandhi

More Articles
Follows