இது TWO – TWO இல்ல.; மாஸ் ரவி இயக்கி நடிக்கும் ‘காத்துவாக்குல ஒரு காதல்’

இது TWO – TWO இல்ல.; மாஸ் ரவி இயக்கி நடிக்கும் ‘காத்துவாக்குல ஒரு காதல்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை புரொடக்ஷன்ஸ் எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காத்து வாக்குல ஒரு காதல்’. கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி கதையின் நாயகனாகவும் மாஸ் ரவி பூபதி நடித்து இயக்கி உள்ளார்.

கதா நாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்யா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

காற்றை யாரும் பார்க்க முடியாது, உணர மட்டும்தான் முடியும். காதல் கருப்பா சிவப்பா பார்க்க முடியாது, சுவாசிக்க தான் முடியும்.

இரண்டு பேருக்குள் நடக்கும் உண்மையான காதலை சுற்றி படம் உருவாகியுள்ளது. வடசென்னை பின்னணியில் தற்போது சமூக வலைத்தளத்தில் இளம் பெண்கள் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் படமாக்கி இருக்கிறார்கள்.

ரசிகர்களுக்கு ஏற்ப காதல், காமெடி, ஆக்சன், திரில்லர், எமோஷனல் என கமர்ஷியல் அம்சத்துடன் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, கேரளா போன்ற படமாக்கி இருக்கிறார்கள்.

தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

நடிகர்கள்

மாஸ் ரவி, லட்சுமி பிரியா, மஞ்சுளா, சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்யா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த், மேனக்சன் மீப்பு, மொசக்குட்டி பிரியதர்ஷினி, பிரியங்கா, ரோபோ சங்கர்

தொழில் நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு நிறுவனம் – சென்னை புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் – எழில் இனியன்
ஒளிப்பதிவாளர்கள்- ராஜதுரை MA., சுபாஷ் N மணியன்
இசை – ஜி கே வி
எடிட்டர் – ராஜ்குமார்
ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன், பயர் கார்த்திக்
டிசைனிங் – ரெடிஸ் மீடியா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மாஸ் ரவி
மக்கள் தொடர்பு – குமரேசன் பி.ஆர்.ஓ

Mass Ravi Lakshmi Manjula starrer Kaathuvaakula Oru Kadhal

வருட கடைசி நாளிலும் வசூல் வேட்டையாடிய ஷாருக்கானின் ‘டங்கி’

வருட கடைசி நாளிலும் வசூல் வேட்டையாடிய ஷாருக்கானின் ‘டங்கி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதிய ஆண்டு பிறந்துவிட்டது. டங்கி பட பாக்ஸ் ஆபிஸ் வசூல் இன்னும் தொடர்கிறது. படம் வெளியான நாளில் 30 கோடியில் ஆரம்பமான இப்பட வசூல், ரசிகர்கள் ஆதரவுடன் உயர்ந்து வருகிறது. ரசிகர்களின் பாசிட்டிவ் வார்த்தையுடன், குடும்ப பார்வையாளர்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களிடமிருந்து அபரிமிதமான அன்பைப் பெற்று வருகிறது இப்படம்.

இரண்டாவது வாரத்திலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருவதுடன், புத்தாண்டு கொண்டாட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்டகாசமான வசூலைக் குவித்துள்ளது.

கடந்த ஆண்டின் 2023 இறுதி நாளில் இரட்டை இலக்கத்தில் கோடிகளை குவித்துள்ளது இப்படம். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் ‘டங்கி’ டிசம்பர் 30 சனிக்கிழமை அன்று 9 கோடியை ஈட்டியது.; டிசம்பர் 31 ஞாயிறு அன்று இப்படம் 11.25 கோடி வசூல் செய்தது.

இதன் மூலம், இந்தியாவில் படத்தின் உள்நாட்டு மொத்த வசூல் 188.07 கோடியை எட்டியுள்ளது. வார இறுதி நாளில் 38 சதவீதத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இப்படத்தை கண்டுகளித்துள்ளனர்.

இந்த விடுமுறை காலத்தை கொண்டாட, குடும்ப பார்வையாளர்களுக்கு ஒரு அருமையான படைப்பாக டங்கி அமைந்திருக்கிறது.

உலகளவிலான பாக்ஸ் ஆபிஸ் வசூல் சூப்பர் ஸ்டேடியாக 380.60 கோடியை எட்டியுள்ளது. இப்படம் இந்தியாவில் 200 கோடியையும் உலகளவில் 400 கோடியையும் விரைவில் கடக்கவுள்ளது.

இப்படத்தில் ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர்.

அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

டங்கி

2023 year end Dunki collects Rs 11 crores

அயோத்தி ராமர் கோயில் திறப்பு : குடும்பத்தோட வர்றேன்… அது என் பாக்கியம்.. – ரஜினி

அயோத்தி ராமர் கோயில் திறப்பு : குடும்பத்தோட வர்றேன்… அது என் பாக்கியம்.. – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வரும் ஜனவரி 22ம் தேதி பிரமாண்டமாக திறக்கப்படவுள்ளது.

இதில் கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வரவுள்ளனர்.

இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் முக்கிய தலைவர்களுக்கும், பல திரையுலக பிரபலங்களும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்க்கும் இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு…

அயோத்தி, ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில், நடிகர் *திரு.ரஜினிகாந்த்* அவர்களையும், அவரது குடும்பத்தினரையும் ஜனவரி 22ம்தேதி அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வுக்கு வரவேண்டி அழைப்பிதழை கொடுப்பதற்காக, சென்னை போயஸ் கார்டனில் அவரது இல்லத்தில் ஆர்.எஸ்.எஸ் தென் பாரத அமைப்பாளர் செந்தில்குமார்*, தென்பாரத மக்கள் செயலாளர் (மக்கள் தொடர்பு).பிரகாஷ்*, மாநில இணைச்செயலாளர் (மக்கள் தொடர்பு) இராம இராஜசேகர்*, மாநகர் பொறுப்பாளர் ராம்குமார்* மற்றும் பாஜக, சமூக ஊடகப் பார்வையாளர் அர்ஜுனமூர்த்தி ஆகியோர் அழைப்பிதழை வழங்கினர்.

நிச்சயமாக குடும்பத்துடன் வருவதாகவும், மிகவும் பாக்கியமாகக் கருதுவதாகவும், எல்லாம் ஶ்ரீராமரின் அருள் எனவும் உணர்வுப்பூர்வமாக ரஜினிகாந்த் அவர்கள் கூறி, பயபக்தியுடன் அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டாராம்.

Rajinikanth invited for Ayothi New Ramar Temple at UP

முரட்டுத்தனமான நானி..; ஹைதராபாத்தில் தொடங்கியது ‘சூர்யாவின் சனிக்கிழமை’

முரட்டுத்தனமான நானி..; ஹைதராபாத்தில் தொடங்கியது ‘சூர்யாவின் சனிக்கிழமை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நானி மற்றும் திறன் மிகு இயக்குநர் விவேக் ஆத்ரேயா… இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகின்றனர்.‌

இருவரும் இணைந்து உருவாக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ திரைப்படம் ஒரு தனித்துவமான சாகசங்கள் நிறைந்த திரைப்படமாகும்.‌ இந்த திரைப்படம் நானியை முற்றிலும் அதிரடியான அவதாரத்தில் காண்பிக்கிறது.

டி வி வி என்டர்டெய்ன்மென்ட்டின் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் இணைந்து அதிக பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.‌

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பினை ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த படப்பிடிப்பு நீண்ட நாட்களை கொண்டதாக இருக்கும் என்றும், இதில் முன்னணி நடிகர்கள் சிலர் கலந்து கொள்ளவிருப்பதாகவும், இதனை தவிர்த்து அதிரடியான சண்டைக் காட்சிகளையும், சாகச காட்சிகளையும் படமாக்கப்பட இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதில் நானி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்தத் திரைப்படம் தொடர்பாக இதற்கு முன் வெளியிடப்பட்ட ‘Unchained’ எனும் வீடியோவில் இடம்பெற்றுள்ளதைப் போல் நானி முரட்டுத்தனமான தோற்றத்தில் தோன்றுகிறார்.

பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்க, எஸ். ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.‌

முரளி. ஜி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.‌ படத்தொகுப்பு பணிகளை கார்த்திகா ஸ்ரீனிவாஸ் மேற்கொள்ள, அதிரடியான சண்டை காட்சிகளை ராம்- லக்ஷ்மன் அமைக்கின்றனர்.

‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ பான் இந்திய திரைப்படமாகும். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.‌

Suryavin Sanikizhamai movie next scheduled started in Hyderabad

ஒரே வாரத்தில் 300 கோடியை கடந்து வசூல் வேட்டையாடும் ‘டங்கி’

ஒரே வாரத்தில் 300 கோடியை கடந்து வசூல் வேட்டையாடும் ‘டங்கி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இதயம் வருடும் ஆழமான கதை மற்றும் நடிகர்களின் அற்புதமான நடிப்பால், ராஜ்குமார் ஹிரானியின் டங்கி திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களின் வாழ்வியலைச் சொல்வதில் அவர்களுக்கு நெருக்கமான படைப்பாக அமைந்திருக்கிறது

திரையரங்குகளுக்கு குடும்ப பார்வையாளர்கள் முதல் அனைத்து வயதினரையும் கவர்ந்துள்ளது டங்கி. இப்படம் இந்தியாவில் மட்டும் 150 கோடியைத் தாண்டியுள்ளது மேலும் உலக பாக்ஸ் ஆபிஸில் 300 கோடியை வெறும் 7 நாட்களில் கடந்து சாதனை படைத்துள்ளது.

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர்.

அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியானது.

Dunki crossed 300 crores in worldwide within 1 week

விஜயகாந்த் இடத்தில் நானிருக்கிறேன்.. பயமாக இருக்கிறது..; நாசர் இரங்கல்

விஜயகாந்த் இடத்தில் நானிருக்கிறேன்.. பயமாக இருக்கிறது..; நாசர் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முன்னாள் நடிகர் சங்க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் இறுதி மரியாதை செலுத்தி விட்டு அவர் கூறியதாவது..*

பலலட்சம் ரசிகர்கள் நண்பர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்களோ! அதே மன நிலையில் தான் நானும் இருக்கின்றேன்.

வெளியூரில் படபிடிப்பில் இருந்த எனக்கு இங்கு வந்து சேருவதற்கு ஒன்பது மணிநேரம் ஆகிவிட்டது. அவருடன் நடித்து, பழகி இருக்கின்றேன். ஆனால் இன்று, என்னை நடிகர் சங்க தலைவர் என்று ஒரு அடையாளம் இருக்கிறது என்றால் அந்த பெருமை அனைத்தும் விஜயகாந்த் சாரையே சாரும்.

அவர் மட்டும் இதை மீட்டு கொடுக்கவில்லை என்றால் நாங்க எல்லோரும் இப்படி ஒரு மரியாதையோடு இருந்திருக்க முடியாது. அவரை பற்றி அனைவர்க்கும் தெரியும். அவர் எப்பொழும் ஒரு தலைவராக இருந்தது இல்லை.

படப்பிடிப்பு தளத்தில் சரிக்கு சமமாக எப்படி பழகுவரோ அப்படி தான் மக்களிடத்திலும் பழகுவர். அவருடைய அனைத்து உணர்ச்சியையும் மக்களுக்காவே செலவிடுவார்.

முக்கியமாக அவரிடம் இருந்த கோவம் பற்றி எல்லோரும் சொல்லுவார்கள். நான் பல நபர்களின் கோவங்களை பார்த்து இருக்கின்றேன். அவர்கள் கோவம் எல்லாம் சொந்த பிரச்சனைக்காக தான்.
ஆனால் விஜயகாந்த் சார் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோவத்துடன் தான் இருந்து இருக்கிறார்.

கொஞ்சம் பயமாக தான் இருக்கின்றது.. ஏனென்றால் அவர் அமர்ந்த இடத்தில் நான் அமர்ந்து இருக்கின்றேன். அவர் செய்த 100 – ல் ஒரு பகுதியாவது செய்ய வேண்டும் என்ற பயம் இருக்கின்றது.

அவருடைய குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் மற்றும் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Nasser condolences message for Vijayakanth demise

More Articles
Follows