சிங்கங்களை எதிர்த்து நின்று தில் காட்டிய நடிகர்

சிங்கங்களை எதிர்த்து நின்று தில் காட்டிய நடிகர்

soundar rajaநடிகர் சௌந்தரராஜா வித்தியாசமான நடிகர்களில் ஒருவர். கதைநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும்போதே வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து அசத்துவார். சுந்தரபாண்டியனில் தன் பயணத்தை தொடங்கிய சௌந்தர ராஜா சமீபத்திய தமிழ் ஹிட் படங்களின் மூலம் சிறப்பான வளர்ச்சியை எட்டி இருக்கிறார்.

கார்த்தி கதாநாயகனாக நடித்த கடைக்குட்டி சிங்கம், விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம், இரண்டு படங்களிலும் குணச்சித்திர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் ராஜபாண்டி எம்.எல்.ஏ. வாக கெத்தான வெத்து வில்லன் கதாபாத்திரத்தில் சௌந்தர ராஜாவின் நடிப்பைப்பார்த்து ரசிகர்களும் சினிமா நண்பர்களும் பெரிதும் பாராட்டுகின்றனர்.

சிங்கங்களை எதிர்த்து நின்று கெத்தாக சீறியதோடு மட்டுமின்றி ரசிகர்களை சிரிக்கவும் வைத்ததில் நிஜமாகவே மகிழ்ச்சி என்கிறார், சௌந்தரராஜா.

கனா என் எதிர்பார்ப்புகளை விஞ்சிவிட்டது இணை தயாரிப்பாளர் கலையரசு

கனா என் எதிர்பார்ப்புகளை விஞ்சிவிட்டது இணை தயாரிப்பாளர் கலையரசு

kanaa movie stillsசினிமாவில் “இன்ஸ்பிரேஷன்ஸ்” என்பதே ஒரு தனி ஜானர். அந்த விஷயங்களை கொண்டிருக்கும் எந்த ஒரு படமும் மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெறும் என நான் சொல்வேன். எங்கள் தயாரிப்பான “கனா” எல்லோராலும் பாராட்டப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. வணிக வெற்றியை விட, தியேட்டர்களில் தங்கள் படங்களை ரசிகர்கள் முழுமையாக அனுபவிப்பதை பார்ப்பது தான் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். ரசிகர்களின் பல்ஸை அருண்ராஜா காமராஜ் கச்சிதமாக தெரிந்து வைத்திருக்கிறார். திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பு என் எதிர்பார்ப்புகளை விஞ்சிவிட்டன” என்கிறார் இணை தயாரிப்பாளர் கலையரசு.

அவர் தற்போது அனுபவிக்கும் ஒரு எதிர்பாராத ஆச்சரியம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். அவத் கூறும்போது, “ஒரு திரைப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடும்போது, வர்த்தக ரீதியாக வெற்றிகரமாக கருதப்படும். ஆனால் பல பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சிறப்பு திரையிடலுக்காக எங்களை அணுகுவதை நான் நினைத்து கூட பார்க்கவில்லை. மேலும், ரசிகர்களின் வாய்வழி செய்தி மூலம் மிகப்பெரிய விளம்பரமாகி, திரையரங்குகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இன்னும் நல்ல தரமான பொழுதுபோக்கு படங்களை வழங்க இது ஊக்கமாக இருக்கிறது” என்றார்.

மேலும், மொத்த குழுவுக்கும் நன்றி தெரிவித்து பேசும்போது, “ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் ஒரு பிரபலமான நடிகையாக இருக்கிறார் என்பதை கனா மறுபடியும் நிரூபித்திருக்கிறது. அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்படங்கள் எப்போதும் யதார்த்தத்துடன் மிக நெருக்கமாக இருக்கிறதுது. ‘கனா’ மூலம் அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறார். அறிமுக திரைப்படம் என்றாலும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார் தர்ஷன். மேலும் அவருடைய காட்சிகளை ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்பதை பார்க்க இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சத்யராஜ் சார் பற்றி நான் வேறு என்ன சொல்ல முடியும்? தன் மாயாஜால நடிப்பால் படத்தின் முதுகெலும்பாக இருந்து படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறார். கனாவில் தன் இசையால் ரசிகர்களிம் கவனத்தை ஆரம்பம் முதலே ஈர்த்திருந்தார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கும் அனுபவத்தை வழங்கிய ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் மற்றும் மிக வேகமாக படத்தை தொகுத்த ரூபன் ஆகியோரை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. இந்த திரைப்படத்தை சிறப்பாக உருவாக்க நிபந்தனையற்ற ஈடுபாட்டுடன் அவர்கள் கொடுத்த உழைப்பு தான் இப்போது அழகான படத்தை கொடுத்திருக்கிறது” என்றார்.

இரண்டு விஜய்களுடன் மிரட்ட வருகிறது அக்னிச்சிறகுகள் !!

இரண்டு விஜய்களுடன் மிரட்ட வருகிறது அக்னிச்சிறகுகள் !!

vijay antony and arun vijayபடப்பிடிப்பு தொடங்கும் முன்பே அனைவரும் ‘அக்னி சிறகுகள்’ படத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்த ஒரு முக்கிய காரணம் உண்டு. விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே மற்றும் இயக்குனர் நவீன் போன்ற பிராண்டுகள் தான் அனைவரின் கவனத்தையும் இந்த படத்தின் மீது திருப்பியிருக்கிறது. அவர்கள் உண்மையில் சக்திவாய்ந்த திறமையாளர்கள், கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே பணிபுரிபவர்கள். குறிப்பாக, விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் போன்ற ஒரு அசாதாரணமான கூட்டணியை பார்க்கும்போது, ஒவ்வொருவருக்கும் இந்த படத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாகி உள்ளது.

“தற்போது விஜய் ஆண்டனி, அருண் விஜய் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோரின் ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்து, முழுவீச்சில் ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் காட்சிகளை படமாக்குகிறோம். மேலும், விஜய் ஆண்டனி ஒரு புதிய தோற்றத்தில் இருப்பார், முதல் முறை பார்ப்பவர்களால் அது அவர் தான் என அடையாளம் காண முடியாத அளவிற்கு அவர் தோற்றம் இருக்கும். இது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல, அவர் கதாபாத்திரம் இந்த மாதிரியான மாற்றங்களை கோரியது. எனவே, பல்வேறு தோற்றங்களை பரிசீலித்து, இறுதியாக சரியான ஒன்றைக் கண்டுபிடித்தோம்” என்கிறார் இயக்குனர் நவீன்.

படம் மற்றும் கதாபாத்திரங்கள் பற்றி அவரை கேட்டபோது, சிறு மௌனமான புன்னகையுடன் அவர் கூறும்போது, “கதை அல்லது கதாபாத்திரங்களை பற்றி எதையும் இப்போது வெளிப்படுத்துவது சரியாக இருக்காது. ஆனால், அக்னி சிறகுகள் எங்கள் முந்தைய திரைப்படங்களில் இருந்து மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும் என்று மட்டும் உறுதியாக சொல்வேன்” என்றார்.

அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரிக்கும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், நாசர், ஜகபதி பாபு மற்றும் சில முக்கியமான நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இயக்குனரை மனமார வாழ்த்தும் ஜெயம் ரவி

இயக்குனரை மனமார வாழ்த்தும் ஜெயம் ரவி

jayam ravi‘நீ உலகத்தை எப்படி பார்க்கிறாயோ, அப்படி தான் உலகம் உன்னை பார்க்கும்’ என்ற ஒரு சொல்லாடல் இருக்கிறது. ஒரு தனி மனிதன் இதை புரிந்து கொண்டாலே, அது அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறன்களை தானாகவே கண்டுபிடிப்பதற்கான மிகப்பெரிய பாக்கியத்தை அளிக்கிறது. ஜெயம் ரவி 2018 ஆம் ஆண்டில் வேறு வேறு ஜானரில், புது முயற்சிகளில் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இந்த கால கட்டத்தை கடந்து செல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார் என்பதில் ஐயமில்லை. அவரது சமீபத்திய படமான “அடங்க மறு” வெகுஜன வெற்றியாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அடங்க மறு படத்துக்கு அதிகரிக்கும் திரையரங்குகளை பார்க்கும்போது நிச்சயம் பிளாக்பஸ்டர் என்பது உறுதியாகிறது. மென்மையான மற்றும் அழகான ஹீரோ ஜெயம் ரவி அவரது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.

“நிச்சயமாக, எனக்கு புதிய பரிமாணத்தை வழங்கிய ‘டிக் டிக் டிக்’ மற்றும் ‘அடங்க மறு’ ஆகிய படங்களில் ஒரு பகுதியாக இருந்ததை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். முதலில் என்னை நம்பிய இயக்குனர்கள் சக்தி சௌந்தர்ராஜன் (டிக் டிக் டிக்) மற்றும் கார்த்திக் தங்கவேல் (அடங்க மறு) ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஒரு சூப்பர்ஸ்டாரும் இந்த படங்களை இழக்க விரும்ப மாட்டார்கள் என்ற அளவில் இந்த படங்களின் திரைக்கதை இருந்தது. ஆனால் இந்த திரைப்படங்களில் முதலிலேயே கதாநாயகனாக என்னை கற்பனை செய்து பார்த்தது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.

நிச்சயமாக, நேமிசந்த் ஜபக் சார் மற்றும் சுஜாதா விஜயகுமார் அத்தை போன்ற தயாரிப்பாளர்கள் இல்லையென்றால், இந்த படங்கள் உருவாகியிருக்காது. வெறுமனே வெற்றி கொடுக்கும் உற்சாகத்தை விட, என் அடுத்த திரைப்படங்களை கவனமாக தேர்வு செய்வதில் உள்ள கூடுதல் பொறுப்பை நான் உணர்கிறேன். இந்த திரைப்படங்கள் மிகப்பெரிய சவால்களை கொண்டிருந்தன, அதை தாண்டி நல்ல படமாக கொண்டு வர தொழில்நுட்ப கலைஞர்கள் கடுமையாக உழைத்தனர். மேலும் இந்த படங்களில் மிகச்சிறந்த நடிகர்கள் கிடைத்தது என் பாக்கியம், அவர்கள் தான் என்னை இன்னும் சிறப்பாக நடிக்க உந்தினார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் என் திரைப்படங்களை கொண்டாடினார்கள். அது தான் என்னை பல்வேறு வித்தியாசமான கதைகள் மற்றும் வேடங்களில் தொடர்ந்து நடிக்க ஊக்குவிக்கிறது.

சீதக்காதிக்கு கிடைத்த பெரும் வரவேற்பால் மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்

சீதக்காதிக்கு கிடைத்த பெரும் வரவேற்பால் மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்

seethakaathi stillsசீதக்காதி படத்துக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பால் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். படக்குழுவின் முக்கிய நோக்கமே ‘மேடை நாடக உலகம்’ மற்றும் அதன் கலைஞர்களுக்கு அர்ப்பணம் செய்வது தான். யாருக்காக எடுக்கப்பட்டதோ அவர்களை சென்று சேர்ந்திருக்கிறது படம். எனினும், அவர்கள் தனித்துவமான கருத்துடைய ஒரு திரைப்படத்தை தயாரிக்க கிடைத்த அதிர்ஷ்டத்தையே முழுமையான மகிழ்ச்சியாக நினைக்கிறார்கள். ஹாலிவுட்டுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய கதையை எடுத்தது பெருமை. இந்த அற்புதமான படைப்பை உருவாக்கிய இயக்குனர் பாலாஜி தரணீதரன் மற்றும் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பிய, நாடக கலைஞர்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ள, அதன் வழியாக இன்று தமிழ் சினிமாவில் “மக்கள் செல்வன்” ஆக மாறியுள்ள விஜய் சேதுபதி ஆகியோர் மீது மிகுந்த மரியாதையில் உள்ளனர் தயாரிப்பாளர்கள்.

75 வயதுள்ள நாடக கலைஞராக விஜய் சேதுபதி நடித்த சீதக்காதி டிசம்பர் 20ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. கோவிந்த் வசந்தா இசையமைக்க, சரஸ்காந்த் டி.கே. ஒளிப்பதிவு செய்திருந்தார்.

விஜய் சேதுபதி “சீதக்காதி”யில் தான் வெறும் 40 நிமிடங்கள் தான் தோன்றுவேன் என வெளிப்படையாக அறிவித்திருந்தது பார்வையாளர்களை துல்லியமான மனநிலையுடன் தயார்படுத்தியிருந்தது என தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர். மக்கள் தியேட்டருக்கு வருவதற்கு முன்பே இத்தகைய வழிகாட்டும் நடைமுறைகள் தூய சினிமாவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்

23 நாட்களில் படமான அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “

23 நாட்களில் படமான அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “

en kadhali scene podura imagesசங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலிஅம்மா,அம்பானிசங்கர், தியா, தென்னவன்,வையாபுரி, ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் விஜய் டிவி.கோகுல் நடித்துள்ளார் அவருக்கு தங்கையாக நிஷா நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – வெங்கட்

இசை – அம்ரிஷ்

பாடல்கள் – ராம்ஷேவா, ஏகாதசி

கலை – சோலைஅன்பு

நடனம் – சிவாலாரன்ஸ், சாண்டி

ஸ்டன்ட் – மிரட்டல் செல்வா

எடிட்டிங் – மாரிஸ்

தயாரிப்பு மேற்பார்வை – தண்டபாணி

தயாரிப்பு – ஜோசப் பேபி.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராம்சேவா. இவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது…

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கி உள்ளோம். நாம் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும்…சந்தோஷமா வாழ்கிற அதே நேரத்தில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். அப்படி ஜாக்கிரதையாக இல்லா விட்டால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் நம் வாழ்க்கையையே மாற்றிப் போட்டு விடும் என்கிற கருத்தை உள்ளடக்கிய படம் தான் இது. இதை காமெடியாக வும் கமர்ஷியலாகவும் சொல்லி இருக்கிறோம். மனோபாலா காமெடியில் கலக்கி இருக்கிறார்.

நான்கு பாடல்களும் வெவ்வேறு விதமாக கொடுத்திருக்கிறார் இசைமைப்பாளர் அம்ரிஷ். சின்னமச்சான் பாடலை தொடர்ந்து செந்தில்கணேஷ் – ராஜலக்ஷ்மி இருவரும் இந்த படத்திலும் ஒரு பாடலை பாடி இருக்கிறார்கள். “ நிலா கல்லுல செதுக்கிய சிலையா “ என்று துவங்கும் அந்த பாடல் மிகப் பெரியஹிட்டாகும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. வெறும் 23 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டோம். அதற்கு பக்க பலமாக இருந்த என்னுடைய ஒளிப்பதிவாளர் வெங்கட்மற்றும் படக்குழு அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். படப்பிடிப்பு புதுச்சேரி மற்றும் சென்னையில் நடைபெற்றது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர் ராம்சேவா.

More Articles
Follows