அஜித் என்னை க்யூட் மாஸ்டர் என்றே அழைப்பார்.. – ‘பைட் மாஸ்டர்’ விக்கி

அஜித் என்னை க்யூட் மாஸ்டர் என்றே அழைப்பார்.. – ‘பைட் மாஸ்டர்’ விக்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Stunt master Vicky with Ajithதமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகள் என்பது தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதற்கேற்றார் போல் இருக்கும் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. குறிப்பாக தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்கு அதிக அளவில் உள்ளது. இங்கு இருப்பவர்கள் பல மொழி படங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

அதற்கு படத்தின் யதார்த்தத்தை மீறாமல் இருப்பதே முக்கிய காரணம். அந்த வகையில் 2016ல் வெளியான “உரியடி” படத்தில் இடம் பெற்ற சண்டைக்காட்சிகள் மிகவும் பிரபலமானது. குறிப்பாக அந்தப் படத்தில் தாபாவில் நடக்கும் சண்டைக்காட்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சண்டைக் காட்சியை யதார்த்தமாகவும் தத்துரூபமாகவும் வடிவமைத்த ஸ்டண்ட் மாஸ்டர் விக்கிக்கு நிறைய பாராட்டுகள் குவிந்தன.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வீரம் படத்தில் இடம் பெற்ற அஜித்-அதுல் குல்கர்னி க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சியை விக்கி அமைத்தார். இப்படத்தின் சண்டைக் காட்சியும் அதிக அளவில் பேசப்பட்டது.

இப்படத்தில் பயணித்த அனுபவம் பற்றி விக்கி கூறும்போது, நான் உரியடி படத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது, இயக்குனர் சிவா சார் தரப்பில் இருந்து அழைப்பு வந்தது. சிவா சாரை சந்தித்தபோது வீரம் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை அமைத்து தரும்படி கேட்டார். இரண்டாவதே அஜித் சார் படம் என்றவுடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. உடனே ஓகே சொல்லி மறுநாள் படப்பிடிப்புக்கு சென்றேன்.

அஜித் சாரை பார்த்தவுடன் புத்துணர்ச்சியும், தயக்கமும் ஏற்பட்டது. ஆனால் அவரோ என்னிடம் வந்து பேசி என்னுடைய தயக்கத்தைப் போக்கினார். அமராவதி படத்தில் இருந்த அதே அஜித் தான் தற்போதும். என்னிடம் எப்படி வேண்டுமானாலும் வேலை வாங்கலாம் என்று அவர் கூறினார். என்னுடைய தயக்கத்தைப் போக்கி சண்டைக்காட்சி அமைத்துக் கொடுத்தேன். சண்டைக் காட்சிக்கு மிகவும் ஒத்துழைப்பு தந்த அஜித் சார், என்னை க்யூட் மாஸ்டர் என்று சொல்லிவிட்டுச் சென்றார். எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது.

வீரம் படத்தை அடுத்து, உரியடி 2, அருவி, ஜோக்கர், மாயவன், சிலுக்குவார்பட்டி சிங்கம், விழித்திரு, அண்ணனுக்கு ஜே, ராட்சசன், வால்டர், சத்ரு போன்ற படங்களுக்கும், இதைத்தவிர பரத் நடிக்கும் நடுவண், அதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்திலும் பணியாற்றியிருக்கிறேன்.

தற்போது சூர்யா நடித்து வெளியாக இருக்கும் சூரரைப்போற்று படத்தில் சண்டைக்காட்சிகள் அமைத்து இருக்கிறேன். இப்படம் நவம்பர் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

சண்டைக்காட்சிகள் அமைப்பது குறித்து விக்கி மேலும் கூறும்போது, நான் ஒவ்வோரு சண்டைக்காட்சி யையும் ஸ்டோரி போர்டு போட்டுதான் வேலை செய்வேன். அதுபோல் எந்த ஒரு சண்டைக் காட்சியை உருவாக்கும் போதும், ரிகர்சல் செய்து இப்படித்தான் திரையில் வரும் என்று இயக்குநருடன் காண்பிப்பேன். அது இயக்குனருக்கு பிடித்துப்போகவே சண்டைக் காட்சியை உருவாக்குவேன். இதுவே என்னுடைய மிகப்பெரிய பிளஸ் என்றார்.

சண்டை இயக்குனர் விக்கி தமிழ் மொழி மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், மராத்தி போன்ற பல மொழிப் படங்களிலும் பணியாற்றி வருகிறார். இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

Stunt master Vicky shared his working experience with Thala Ajith

நன்றி கெட்ட விஜய்..; எஸ்ஏசி-க்கு ஆதரவாக களமிறங்கிய அஜித் ரசிகர்கள்

நன்றி கெட்ட விஜய்..; எஸ்ஏசி-க்கு ஆதரவாக களமிறங்கிய அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sacஓரிரு தினங்களுக்கு முன் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர்.

ஆனால் இந்த கட்சிக்கும் எனக்கும் எந்த விதமாக தொடர்பும் இல்லை என விஜய் அறிவித்தார். அதற்கு அடுத்த நாளே விஜய்யின் அம்மாவும் கட்சி பொறுப்பில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்தார்.

இதனையடுத்து விஜய் ரசிகர்களே விஜய்யின் தந்தையும் கடுமையாக சாடினர்.

விஜய்க்கு கெட்ட பெயருரை ஏற்படுத்தி வருகிறார் என திட்ட தொடங்கினர்.

விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தி அவரை படிப்படியாக வளர்த்துவிட்டது அவரது அப்பா என்பதை மறந்து இப்படி பேசுவது மற்ற நடிகர்களின் ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் வந்தாலும், யாருமே எட்டாத உயரத்தை விஜய் அடைந்துள்ளர்.

அதற்கு முழு காரணமே எஸ்ஏ சந்திரசேகர்தான்.

அப்படியான நிலையில் விஜய்யும் அவரது ரசிகர்களும் இப்படி எதிரி போல செயல்படுவதால் ”#SACexposesVijayMafia, #நன்றிகெட்டவிஜய்” என்ற ஹேஷ்டாக்கை டிரெண்ட் செய்ய தொடங்கினர் அஜித் ரசிகர்கள்.

பதிலுக்கு விஜய் ரசிகர்கள் ”#நன்றிகெட்ட_நாய்_அஜித்” என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி டிரெண்ட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

Ajith fans support Vijay father SAC

மலையாள சினிமாவில் விஜய்சேதுபதி ஆர்வம்.; மெர்சல் நாயகியுடன் ஜோடி!

மலையாள சினிமாவில் விஜய்சேதுபதி ஆர்வம்.; மெர்சல் நாயகியுடன் ஜோடி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiஎந்த மாநிலம் எந்த மொழி என்றாலும் கலைஞர்களுக்கு பேதம் கிடையாது என்பதை சரியாக புரிந்து வைத்துள்ளார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

தமிழில் பல படங்கள் வரிசை கட்டி நின்றாலும் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களிலும் நடிக்க தனி ஆர்வம் காட்டி வருகிறார்.

கடந்த வருடம் மார்க்கோனி மத்தாய் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் மற்றொரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

19(1)(a) என்ற பட சூட்டிங்கில் கலந்துக் கொண்டுள்ளார்.

நித்யா மேனன் இப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

சைக்கோ, 24. மெர்சல், ஓகே கண்மணி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் நித்யா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருது பெற்ற படங்களான ‘ஆதாமிண்ட மகன் அபு’, ‘பத்தேமாறி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சலீம் அஹமதுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இந்து வி.எஸ் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.

Vijay Sethupathi joins sets of Malayalam film

2000 ஏக்கரில் உலகத்தரமிக்க திரைப்பட நகரம் அமைக்க முதல்வர் திட்டம்

2000 ஏக்கரில் உலகத்தரமிக்க திரைப்பட நகரம் அமைக்க முதல்வர் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

film cityஅண்மையில் பெய்த கடும் மழை பாதிப்புள்ளாக்கியது ஹைதராபாத் நகரம்.

இதனையடுத்து தெலங்கான முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்து வெள்ள நிவாரண நிதியாக ரூ. 1 கோடி வழங்கினார் சிரஞ்சீவி.

அவருடன் சென்ற நடிகர் நாகார்ஜுனாவும் தன் சார்பில் ரூ. 50 லட்சம் வழங்கினார்.

அப்போது ஹைதராபாத்தில் பிரம்மாண்ட திரைப்பட நகரம் அமைக்க ஆலோசனை செய்துள்ளார் முதல்வர்.

தெலங்கானா அரசு சார்பில் 2000 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த திரைப்பட நகரம் ஒன்றை அமைக்கும் எண்ணம் உள்ளதாக முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

பல்கேரியா நாட்டில் உள்ள ஸ்டூடியோக்களை போல் இந்த நகரை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஹைதராபாத்தில் ஏற்கெனவே 1600 ஏக்கர் பரப்பில் ராமோஜி பிலிம் சிட்டி 25 வருடங்களாக செயல்பட்டு வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரஜினி, அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்கள் ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருவதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Another film city to come up near Hyderabad soon – Chandrasekar Rao

நயன்தாரா துணையுடன் ஜோ பைடன் & கமலா ஹாரிஸ் வெற்றி..; அமெரிக்க அதிபருக்கு ஆர்ஜே. பாலாஜி வாழ்த்து

நயன்தாரா துணையுடன் ஜோ பைடன் & கமலா ஹாரிஸ் வெற்றி..; அமெரிக்க அதிபருக்கு ஆர்ஜே. பாலாஜி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mookuthi amman nayanthara imagesநவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் முடிவுகளில் முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது.

கடந்த 3 தினங்களாக தாமதமாகிக் கொண்டிருந்த மாகாணங்களின் வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியானது.

இறுதியாக அதிபராக வென்றார் ஜோ பைடன். இவர் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய-தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராகியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் பட இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜியும் தன் பங்குக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரின் வாழ்த்தில்… முமூக்குத்தி அம்மன் துணையும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்க்கது.

Mookuthi Amman team celebrates the victory of Joe Biden and Kamala Harris via a special poster

SAC நடத்தும் குடும்ப அரசியல் நாடகம்..; கோழை விஜய்க்கு ஏன் அரசியல் ஆசை..? சீண்டும் மீரா

SAC நடத்தும் குடும்ப அரசியல் நாடகம்..; கோழை விஜய்க்கு ஏன் அரசியல் ஆசை..? சீண்டும் மீரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

meera mithun vijayநடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என அண்மைக்காலமாகவே பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார் அவரின் தந்தை எஸ்ஏசி.

கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து தன் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் தனக்கும் தொடா்பும் இல்லை என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய்யின் அம்மா ஷோபாவும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இது தொடர்பான அனைத்து செய்திகளையும் நம் தளத்தில் உடனுக்குடன் பார்த்தோம்.

இந்நிலையில் இவர்களின் அரசியல் கட்சியை குடும்ப நாடகம் என விமர்சித்துள்ளார் நடிகையும் மாடலுமான மீரா மிதுன்.

அவரின் இன்றைய ட்விட்டர் பதிவில்…

எஸ்ஏசி குடும்ப அரசியல் நாடகம் போடுகிறார். உங்களுக்கு தைரியம் இல்லை என்றால் ஏன் அரசியல் ஆசை? என சீண்டும் வகையில் கேட்டுள்ளார்.

Tats a very good nicely portrayed family political drama by director SAC, If you don’t have guts to even say you have started a party @actorvijay why arasiyal aasai ?! Politics is not for cowards
https://t.co/582Kss6nVd

Meera Mithun alleges against actor Vijay

More Articles
Follows