புதிய கூட்டணி அமைத்த விஷ்ணு விஷால் & அருண்ராஜா காமராஜ்

புதிய கூட்டணி அமைத்த விஷ்ணு விஷால் & அருண்ராஜா காமராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை தந்த, இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க, புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.

தரமான படைப்புகள் தரும், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணி இணையும் அறிவுப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘கனா’ மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற சூப்பர்ஹிட் படங்களை வழங்கிய பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ், சமீபத்தில் லேபிள் சீரிஸ் மூலம் சொல்லப்படாத களத்தில் அருமையான கருப்பொருளை பேசி பெரும் பாராட்டுக்களைக் குவித்தார்.

இந்நிலையில் அவர் அடுத்ததாக விஷ்ணு விஷால் உடன் இணையும் படத்திற்கான எதிர்பார்ப்பு இப்பொழுதே எகிறியுள்ளது.

தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான வெற்றிப்படைப்புகள் தந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் விஷ்ணு விஷால்.

ரஜினியுடன் இணைந்து அவர் நடித்துள்ள ‘லால் சலாம்’ வெளிவரவுள்ள நிலையில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உடனான அவரது கூட்டணி அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் பல தரமான வெற்றித் திரைப்படங்களை தயாரித்து வழங்கியதுடன், பல ப்ளாக்பஸ்டர் படங்களை வெளியிட்டுள்ள ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

இப்படத்தின் தலைப்பு, படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Vishnu Vishal starring in Arunraja Kamaraj directorial

இல்லற ஜோடிகளின் இன்றைய சவாலை சொல்லும் ‘வெப்பம் குளிர் மழை’

இல்லற ஜோடிகளின் இன்றைய சவாலை சொல்லும் ‘வெப்பம் குளிர் மழை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமூக பிரச்சனைகளை எடுத்துரைக்கும் திரைப்படங்கள் எப்போதும் திரைப்பட ஆர்வலர்களின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுகின்றன. மேலும், கடினமான பிரச்சனைகளை துணிச்சலாக எதிர்கொண்ட பல படங்கள், இயக்குநர்களின் அர்ப்பணிப்போடு பரவலான அளவில் பல தரப்பட்ட பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது.

ஹேஷ்டேக் FDFS புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளரான திரவ்வின் வரவிருக்கும் திரைப்படமான ‘வெப்பம் குளிர் மழை’ ஒவ்வொரு பார்வையாளரிடமும் வலுவான உணர்ச்சிகளைத் தூண்டும் அத்தகைய சிக்கலை ஆராய்கிறது.

எம்.எஸ்.பாஸ்கர், திரவ், இஸ்மத் பானு, ராமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் திருமணமான தம்பதிகள் சந்திக்கும் இன்றைய சவால்களை மையமாகக் கொண்டது மற்றும் அதில் உருவாகும் சமூக தாக்கங்கள் மன, உடல் ரீதியாக உறுதியற்ற தன்மைகளை எப்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு உருவாக்குகின்றன என்றும் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து கூறுகிறார்.

படத்தின் மையக்கரு மனித உணர்வுகளின் நுணுக்கங்களையும், இருப்பின் அடிப்படைத் தன்மையையும் ஆராய்வதோடு, சமீப காலங்களில் ஒரு குறிப்பிடத்தக்க சமூக நெருக்கடியாக உருவாகியுள்ள குழந்தைப் பெற்றுக் கொள்ளுதல் பற்றிய அழுத்தமான சிக்கலையும் கையாளுகிறது.

வெப்பம் குளிர் மழை

தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தில் உதவி இயக்குநராகவும், ‘மகளிர் மட்டும்’ மற்றும் ‘சுழல்’ வெப் சீரிஸில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய பாஸ்கல் வேதமுத்து இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படத்தின் தயாரிப்பாளரான திரவ், கதையில் சிக்கலான முதன்மை கதாபாத்திரமான பெத்தபெருமாளாக நடிக்கிறார்.

திரவ் இதற்கு முன்பு நடிகர் கிஷோர் குமார் மற்றும் சுபத்ராவை வைத்து ஒரு இசை சார்ந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது விரைவில் வெளிவர இருக்கிறது.

இஸ்மத் பானு இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அவர் ஏற்கனவே வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் ஒரு பாடலில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மேலும் ‘பொம்மை நாயகி’ மற்றும் ‘லேபிள்’ வெப் சீரிஸ் போன்ற படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில், இன்றைய சமூகத்தில் உள்ள பெண்களின் பெரும் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வரும் எம்.எஸ்.பாஸ்கர், ‘திரி அய்யா’ என்ற ஜாலியான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். தனது தனித்துவமான உடல் மொழியோடு கோபமான மாமியார் பாத்திரத்தை ரமா ஏற்று நடித்துள்ளார்.

வெப்பம் குளிர் மழை

*தொழில்நுட்ப குழு*

இசையமைப்பாளர்: ஷங்கர்
ரங்கராஜன்,
எடிட்டர்: திரவ்,
ஒளிப்பதிவாளர்: பிருத்வி ராஜேந்திரன்,
ஒலி வடிவமைப்பாளர்: ஆனந்த், திரவ், அருண்,
சண்டைக்காட்சிகள்: ஸ்டன்னர் சாம்,
கலை இயக்குநர்: பாலச்சந்தர்,
ஆடை: கீர்த்தனா,
பாடல் வரிகள்: திரவ்,
டிஐ: ஸ்ரீகாந்த் ரகு.

வெப்பம் குளிர் மழை

Veppam Kulir Mazhai deals with stigmatic threat to humanity

மீண்டும் கதையின் நாயகனாக மாறிய நடிகர் அப்புக்குட்டி

மீண்டும் கதையின் நாயகனாக மாறிய நடிகர் அப்புக்குட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் கதையின் நாயகனாக நடித்து, தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, தற்போது கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் பல படங்களில் குணச்சித்திர கேரக்டரிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார் அப்பு குட்டி.

அஜித், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பலரது படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் அப்பு குட்டி கதையின் நாயகனாக நடித்துள்ள ‘வாழ்க விவசாயி’, ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ இரண்டு படங்களும் விரைவில் வெளிவர உள்ளது.

‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் பிரபலமான அப்புக்குட்டி, அழகர்சாமியின் குதிரை, வெந்து தணிந்தது காடு, என தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

வாழ்க விவசாயி

பால்டிப்போ கதிரேசன் தயாரிப்பில், பொன்னி மோகன் இயக்கியுள்ள ‘வாழ்க விவசாயி’ படத்தில், கதையின் நாயகனாக , விவசாயியாக வாழ்ந்து, நடித்துள்ள அப்புக்குட்டிக்கு மீண்டும் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அப்புக்குட்டி ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார்.

ராஜூ சந்திரா இயக்கத்தில் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ படத்தில் கதையின் நாயகனாக அப்புக்குட்டி மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார்.

கதையின் நாயகனாக நடிப்பது தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறும் அப்புக்குட்டி, ரஜினி, விஜய் படங்களில் காமெடி செய்யவும் விருப்பம் தெரிவிக்கிறார்!

வாழ்க விவசாயி

Actor Appukutty movie release updates

‘போர்த் தொழில்’ பாணியில் ‘அஸ்திரம்’..: ஷாம் – வெண்பா கூட்டணி

‘போர்த் தொழில்’ பாணியில் ‘அஸ்திரம்’..: ஷாம் – வெண்பா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் , நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘அஸ்திரம்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார்.

கதாநாயகியாக மாடலிங் துறையைச் சேர்ந்த நிரஞ்சனி நடிக்க, முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

முக்கிய கேரக்டரில் நடிகை வெண்பா நடித்துள்ளார்.

‘ஐரா’, ‘எட்டு தோட்டாக்கள்’, ‘பொம்மை நாயகி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி ‘அஸ்திரம்’ படத்திற்கு இசையமைக்கிறார்.

விரைவில் வெளியாக உள்ள ‘ரேஞ்சர்’, ‘ஜாக்சன் துரை 2’ படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கல்யாண் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய,

‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப்போற்று’ படங்களில் துணை படத்தொகுப்பாளராக பணியாற்றிய பூபதி இப்படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

கலை வடிவமைப்பை ராஜவேல் கவனிக்க, சண்டைப் பயிற்சியாளராக முகேஷ் பொறுப்பேற்றுள்ளார்.

இன்று இப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் வெங்கட் பிரபு, வம்சி நடிகர்கள் கிச்சா சுதீப், ஆர்யா, சாயேஷா உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள் வெளியிட்டனர்.

கடந்த பத்து வருடங்களாக குறும்படங்களில் நடித்து, பின்னர் ‘என் பெயர் ஆனந்தன்’ உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அனுபவம் பெற்றவர் இப்படத்தின் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால்.

படம் குறித்து இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூறும்போது,

“கொரோனா காலகட்டத்தில் 30 நிமிடம் கொண்ட ஒரு பைலட் ஃபிலிம் ஆக இதை உருவாக்கும் வேலைகளில் இறங்கினோம். கதை நன்றாக இருக்கவே இதை திரைப்படமாக மாற்ற முடிவு செய்தோம். இதன் கதையை எழுதியுள்ளார் கதாசிரியர் ஜெகன். இந்த படம் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ளது.

நடிகர் ஷாம் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘ராட்சசன்’, ‘போர் தொழில்’ பாணியில் இந்தப் படமும் விறுவிறுப்பான துப்பறியும் படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தின் கதையை சொல்வதற்காக நடிகர் ஷாமை சோசியல் மீடியா மூலமாக மெசேஜ் அனுப்பி தொடர்பு கொண்டேன். என்னை யார் என்றே தெரியாத நிலையில் என்னுடைய பேச்சிலேயே நம்பிக்கை வைத்து என்னை தனது அலுவலகத்திற்கு அழைத்து கதை கேட்டு உடனேயே நடிப்பதற்கும் சம்மதமும் தெரிவித்தார்.

தனக்கு இந்த படம் வெற்றிகரமான ரீ எண்ட்ரி கொடுக்கும் படமாக இருக்கும் என அவர் நம்புவதால் கூடுதல் அர்ப்பணிப்புடன் இந்த படத்தில் பணியாற்றியுள்ளார்.

கொடைக்கானல் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 30 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

நடிகர்கள் ஆர்யா, சுதீப், சாயேஷா, இயக்குநர்கள் வெங்கட் பிரபு, வம்சி உள்ளிட்ட பலர் நடிகர் ஷாம் மீது கொண்ட நட்பின் காரணமாக (பிப்-4) இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டனர். இவர்களுடன் இணைந்து, இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் மீது கொண்ட நட்பினால் நாற்பதுக்கும் மேற்பட்ட நடிகர்கள், இயக்குநர்கள் தங்கள் அஸ்திரத்தின் முதல் பார்வையை தங்கள் வலைத்தளங்களில் பதிவுசெய்துள்ளனர்.

விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ரிலீஸ் தேதி குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.

அஸ்திரம்

Shaam Niranjani Venba starring Asthram

4 ஹீரோயின்களுடன் 1 ஹீரோ..: ஜியா இயக்கிய ‘எனக்கொரு WIFE வேணுமடா’

4 ஹீரோயின்களுடன் 1 ஹீரோ..: ஜியா இயக்கிய ‘எனக்கொரு WIFE வேணுமடா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பத்திரிகை துறையில் 22 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஜியா உல் ஹக் என்கிற ஜியா இயக்கியுள்ள இரண்டாவது குறும்படத்துக்கு ‘எனக்கொரு WIFE வேணுமடா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

‘கள்வா’ என்ற ரொமான்டிக் திரில்லர் குறும்படத்தை கடந்த ஆண்டு இயக்கிய ஜியா, இப்போது புது படைப்புடன் வந்துள்ளார்.

பிலிம் வில்லேஜ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அமோகன் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார். இந்த குறும்படம் ஹியூமர் டிராமாவாக உருவாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு முடிந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த குறும்படம் வெளியாக உள்ளது.

‘எனக்கொரு WIFE வேணுமடா’ குறும்படம் மூலம் இசையமைப்பாளராகவும் ஜியா அறிமுகம் ஆகிறார்.

இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக்கை பிரபல இயக்குனர் சீனு ராமசாமி டிவிட்டரில் வெளியிட்டார்.

‘நித்தம் ஒரு வானம்’, சமீபத்தில் வெளியான ‘செவப்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் செபாஸ்டின் அந்தோணி இதில் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயின்களாக அக்‌ஷயா, அனகா, வினிதா, மவுனிகா நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம் – ஜியா.

ஒளிப்பதிவு – அபிஷேக். படத்தொகுப்பு – பிரசாத் ஏ.கே.
தயாரிப்பு – அமோகன். இசை வடிவமைப்பு – மிதுன். ஒலிப்பதிவு – கோகுல் ராஜசேகர். மேக்அப் – பவித்ரா. பிஆர்ஓ – டீம் ஏய்ம் சதீஷ்.

எனக்கொரு WIFE வேணுமடா

Enakkoru Wife Venumada short film directed by Ziya

உதவி கேட்கத் தெரியாதவர்கள் உதவி செய்யத் தெரியாதவர்கள்.; 25 லட்சம் உதவிய கார்த்தி பேச்சு

உதவி கேட்கத் தெரியாதவர்கள் உதவி செய்யத் தெரியாதவர்கள்.; 25 லட்சம் உதவிய கார்த்தி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த அக்டோபர் மாதம் பிரம்மாண்டமாக நடந்தேறிய கார்த்தி 25 விழாவில் திரைக்கலைஞர் கார்த்தி சிவகுமார் இந்த சமூகத்திற்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை அறிவித்தார்.

அதில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தும் விதமாக தலா 1 லட்சம் வீதம் 25 லட்சம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தங்கள் மேன்மையான சேவைக்காக ஊக்கத்தொகை பெரும் 25 சமூக செயல்பாட்டாளர்கள் பற்றிய விவரம் மற்றும் செயல்பாடுகள்*

கார்த்தி25 – நடிகர் கார்த்தி பேசியது…

இந்த சமூகத்திற்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை அறிவித்த நடிகர் கார்த்தி, அதில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தி, தலா 1 லட்சம் வீதம் 25 லட்சம் வழங்கினார்.

கார்த்தி

“இங்கு அன்பு சார்ந்த இத்தனை பேரை ஒருங்கிணைத்ததே மிகப்பெரிய சந்தோசமாக இருக்கிறது. 25வது படத்தை முடித்து விட்டோம்.

இந்த தருணத்தில் மக்களுக்கு நன்றி சொல்ல ஏதாவது ஒரு சந்தர்ப்பம் வந்தாலும் அதன் மூலம் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தோம். முதல் கட்டமாக ஒரு கோடி ரூபாய் அளவில் அன்னதானம் வழங்க முடிவு செய்தோம்.

நான் பணமாக தான் கொடுத்தேன். ஆனால் என்னுடைய தம்பிகள் ஒவ்வொரு பகுதியாக சென்று தினமும் ஆயிரம் பேருக்கு அவர்கள் கையால் சாப்பாடு போட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்த தருணத்தில் அவர்களுக்கு நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.

ஒரு விஷயம் செய்தாலும் அதில் பல பேருக்கு பலன் கிடைக்க வேண்டும் என்பதால் தான் 25 பள்ளிகளை தேர்வு செய்து அவற்றுக்கு உதவி செய்ய முடிவு செய்தோம். அதேபோல ஆதரவற்ற 25 முதியோர் இல்லங்களை தேர்வு செய்தோம்.

தம்பிகள் கொடுத்த யோசனைப்படி தன்னார்வலர்களை அழைத்து கௌரவிக்க முடிவு செய்தோம். இங்கு எத்தனையோ தன்னார்வலர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அவர்களை இப்படி ஒரு விழாவிற்கு அழைத்தால் வருவார்களா என்கிற சந்தேகம் இருந்தது. அவர்களுக்கு நாம் என்ன தொகை கொடுத்தாலும் அது உடனே மக்களுக்கு தான் போய் சேரும். அப்படிப்பட்ட தன்னார்வலர்கள் ஒரு 25 பேரை மட்டும் இப்போது அழைத்து கௌரவப்படுத்தியுள்ளோம். எங்கள் அழைப்பை ஏற்று இங்கே வந்து இந்தத் தொகையைப் பெற்றுக்கொண்டு எங்களை கௌரவித்த அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.

கார்த்தி

சின்ன குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தரலாம் என்று கேட்டால் என்ன படிக்கலாம், எப்படி சம்பாதிக்கலாம் என்பதை தாண்டி அன்பாக இருங்கள் என்று கற்றுக் கொடுக்க வேண்டும். தங்களுக்கு உதவி வேண்டும் என்று கேட்கத் தெரியாதவர்களை கூட தேடிச் சென்று சந்தித்து உதவி செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. இங்கே வந்திருப்பவர்கள் யாருமே பெரிய வசதி வாய்ப்பு கொண்டவர்கள் இல்லை. ஆனால் தன்னால் முடிந்தவற்றை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பது பெரிய விஷயம். தங்களுக்கு இது தேவை என்று நினைக்காமல் சுற்றியுள்ள மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் இவர்களை இங்கே அழைத்து மீடியா முன்பாக அவர்களை அடையாளப்படுத்தியதில் மகிழ்ச்சி.

ஏனென்றால் இங்கே உதவி பண்ண வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட பல பேர் இருக்கிறார்கள். ஆனால் யார் மூலமாக உதவி செய்வது என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது.

பலரிடம் பணம் இருக்கிறது நேரம் இல்லை. அப்படி தங்களது பொன்னான நேரத்தை செலவழித்து உதவி தேவைப்படுபவர்களை தேடிச் சென்று உதவி செய்யும் தன்னார்வலர்கள் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம் என்று சொல்லலாம்.

இதன் மூலம் இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள உதவி செய்ய மனம் படைத்த வசதியானவர்களுக்கு இவர்களைப் பற்றி தெரிய வரும். இந்த பணி இன்னும் தொடரும்”என்று கூறினார்.

கார்த்தி

Actor Karthi donated Rs 25 lakhs

More Articles
Follows