முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த ‘பிக்பாஸ்’ சரவணன்..; விஷயம் என்ன தெரியுமா..?

saravanan1990களில் வெளியான ‘பார்வதி என்னை பாரடி’ & ‘பொண்டாட்டி ராஜ்யம்’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் சரவணன்.

பின்னர் சினிமாவை விட்டு விலகியிருந்த சரவணன் 2007-ம் ஆண்டு கார்த்தி உடன் பருத்திவீரன் படத்தில் நடித்து ரசிகர்களிடையே சித்தப்பா ஆனார்.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீசனிலும் பங்கேற்றார்.

மீண்டும் கார்த்தி உடன் இணைந்து ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்தார் சரவணன்.

தற்போது சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனையடுத்து மரியாதை நிமிர்த்தமாக தமிழக முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

முதல்வருக்கும் சரவணனுக்கும் சொந்த ஊர் சேலம் மாவட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Saravanan met CM Edappaadi Palanisamy today

Overall Rating : Not available

Related News

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம்…
...Read More
புதிய தலைமுறை டிவியில் செய்தி தொகுப்பாளராக…
...Read More
சுந்தரபாண்டியன் எனும் மாபெரும் வெற்றி படத்தில்…
...Read More

Latest Post