CCL Chennai Rhinos : நட்போடு இருக்கோம்.. கப்போடு வருவோம்.; ரெடியான ஆர்யா – சாந்தனு – பரத் டீம்

CCL Chennai Rhinos : நட்போடு இருக்கோம்.. கப்போடு வருவோம்.; ரெடியான ஆர்யா – சாந்தனு – பரத் டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Celebrity Cricket லீக் சிசிஎல் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது, சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்*.

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன‌ர்.

திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு, மேலும் மேலும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது.

சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார் மற்றும் கங்கா பிரசாத் நிறுவனராக உள்ளார். அதுபோக சென்னை அணியில் விஷ்ணு விஷால், ஜீவா, மிர்ச்சி சிவா, சாந்தனு, விக்ராந்த், பரத், பிர்த்வி, அசோக் செல்வன், கலையரசன், ஆதவ் கண்ணதாசன், என்.ஜே.சத்யா, தாசரதி, ஷரவ் ஆகியோர் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.

23 பிப்ரவரி 2024 தொடங்கும் சிசிஎல் போட்டி 17 மார்ச் 2024 வரை நடைபெறுகிறது. ஷார்ஜா, ஹைதராபாத், சண்டிகர், திருவனந்தபுரம் என நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளது.

சென்னை ரைனோஸ் தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியை 25 பிப்ரவரி அன்று ஷார்ஜாவில் எதிர்கொள்கிறது.

தென்னிந்தியாவில் Star Network ஒவ்வொரு மொழிகளிலும் தனித்தனியாக போட்டியை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. தமிழில் விஜய் சூப்பர் சேனலில் போட்டிகள் தொடர்ந்து ஒளிப்பரப்ப படவுள்ளது. DD Sports மற்றும் ஜியோ சினிமாஸ் 20 போட்டிகளையும் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

இதுகுறித்து சிசிஎல் நிறுவனர் விஷ்ணு இந்துரி மற்றும் சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரைக்கையாளர்களை சந்தித்தனர்

இந்நிகழ்வினில்

சிசிஎல் நிறுவனர் விஷ்ணு இந்துரி கூறியதாவது…

சிசிஎல்-ல் மற்ற எந்த அணியை கேட்டாலும், சென்னை தான் எங்களுக்கு பிடித்த அணி என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு இந்த அணியின் மீது அனைவருக்கும் அதிகமான அன்பு இருக்கிறது. ஐபிஎல்லிற்க்கு பிறகு சிசிஎல் தான் அதிக அளவு பிரபலமான, அதிக அளவு பார்வையாளர்களால் பார்க்கப்படும் ஒரு கிரிக்கெட் போட்டியாகும்.

ஏனென்றால் நிறைய Brodcast Channel-கள் இப்போட்டியை ஒளிபரப்புவதில் ஒன்றனிணைந்துள்ளன. இந்த ஆண்டு, இந்த விளையாட்டு மேலும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. விளையாட வரும் அனைத்து நடிகர்களும் பணத்திற்காக இல்லாமல் பெரும் ஆர்வத்தினால் விருப்பத்தினால் மட்டுமே வருகின்றனர். அதற்காக அவர்களுக்கு நாங்கள் நன்றி கூறிக் கொள்கிறோம்.

நடிகர் ஆர்யா கூறியதாவது…

சிசி எல் போன்ற ஒரு போட்டியை ஒருங்கிணைத்து நடத்துவது சாதாரண விஷயம் கிடையாது. ஆனால் ஒவ்வொரு வருடமும் ஆர்வம் குறையாமல் அதை நடத்தி வருகிறார் விஷ்ணு.

அனைத்து நடிகர்களையும் ஒருங்கிணைந்து, அதை புத்துணர்ச்சியோடு நடத்தி வருகிறார். எங்கள் அணியை பொறுத்தவரை அனைவரும் நட்போடு இணைந்து விளையாடுகிறோம்.

நாங்கள் விளையாட்டின் போது சினிமாவை ஒதுக்கி வைத்து, முழுமூச்சாக விளையாட்டை மட்டுமே நோக்கமாக கொண்டு விளையாடுகிறோம்.

ஒவ்வொரு வருடமும் விளையாட்டு முடிந்து, நாங்கள் எங்களது தனிப்பட்ட வாழ்கைக்கு திரும்பினாலும், அடுத்த வருடம் விளையாட்டு துவங்கும் போது, விட்ட இடத்தில் இருந்து தொடருவோம் மிகவும் உற்சாகமாகிவிடுவோம். இது தான் இதன் சிறப்பம்சமே… இது ஒரு ஆரோக்கியமான, அதே நேரத்தில் மகிழ்ச்சி நிறைந்த விளையாட்டு. இதில் பங்குகொள்வது மகிழ்ச்சி.

நடிகர் பரத் கூறியதாவது…

சிசிஎல் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருந்தாலும், தொடர்ந்து இயங்கி கொண்டே வருகிறது, அதற்கு விஷ்ணுவிற்கு தான் நன்றி கூற வேண்டும்.

இந்த வருடம் விளையாட்டு இன்னும் பிரம்மாண்டமாகி இருக்கிறது. சிசிஎல் என்பது, அனைத்து மொழி நடிகர்களையும் சந்தித்து நட்புடன் பழகுவதற்கான ஒரு வாய்ப்பு. நட்போடு இருந்தாலும், இந்த வருடம் கப் எடுப்பதில், நாங்கள் உறுதியோடு இருக்கிறோம். கண்டிப்பாக வெல்வோம்.

நடிகர் சாந்தனு கூறியதாவது..

சென்னை ரைனோஸில் விளையாடுவது வெற்றி, தோல்வியை கடந்து ஒரு மகிழ்ச்சியை பேரின்பத்தை கொடுக்கிறது. மீண்டும் நண்பர்களுடன் இணைந்து பயணிப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது.

விஷ்ணு, ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அதற்காக அவருக்கு நன்றி. இந்த முறை கப் எடுத்தே தீர வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறோம். எங்கள் உடன் இணைந்து பயணிக்கும் எங்கள் குழுவிற்கு நன்றி.

CCL Chennai Rhinos

Chennai Rhinos team Arya Bharath Shanthanu speech at CCL event

சிவகார்த்திகேயன் படத்திற்கு கார்த்திக் பட டைட்டிலை வைத்த கமல்

சிவகார்த்திகேயன் படத்திற்கு கார்த்திக் பட டைட்டிலை வைத்த கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று பிப்ரவரி 17ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் அவரது புதிய படத்திற்கு ‘அமரன்’ என்று தலைப்பிட்டுள்ளனர். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

‘அமரன்’ என்ற பெயரில் கடந்த 1906 ஆம் ஆண்டு கார்த்திக் & சில்க் ஸ்மிதா நடித்திருந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ‘வெத்தல போட்ட சோக்குல… நான் குப்புன்னு குத்துல மூக்குல… அமரன் பேர சொன்னா சோடா பாட்டில் பறக்கும்’ என்ற பாடலை நடிகர் கார்த்திக் பாடியிருந்தார்.

தற்போது இந்த புதிய படத்தின் விவரம் இதோ,

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI), மற்றும் சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் (SPIP) இணைந்து தயாரிக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் #SK21 திரைப்படத்தின் பெயரை, நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி அறிவித்துள்ளார்கள்.இத்திரைப்படத்தின் பெயர் 16, பிப்ரவரி 2024 அன்று வெளியிடப்பட்ட சுவாரசியமான டீசரின் வழியாக தெரிவிக்கப்பட்டது.

அமரன்

இந்தத் திரைப்படத்திற்கு, “அமரன்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை, உலகநாயகன் கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்,மகேந்திரன் ஆகியோர் தயாரிக்க, இவர்களுடன் இணை-தயாரிப்பாளராக வக்கில் கானின் காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இணைகிறது.

இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் ராஜ்குமார் பெரியசாமி. மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் ராஹுல் சிங் ஷிவ் அரூர் எழுதிய ‘இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்’ தொடரிலிருந்து ஒரு அத்தியாயம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது.

நாயகி சாய் பல்லவி இந்தப் படத்திற்கு இன்னொரு புதிய பரிமாணத்தை அளித்திருக்கிறார்.

‘அமரன்’ திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு உள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், ஒளிப்பதிவாளர் சி.ஹெச்.சாய், படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணன், சண்டைக்காட்சி இயக்குனர் ஸ்டீஃபன் ரிச்டர், உடை வடிவமைப்பாளர்கள் அம்ரிதா ராம் மற்றும் சமீரா சனீஷ் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள்.

அமரன்

சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெலுகு திரையுலகில் தங்கள் முதல் தயாரிப்பான ‘மேஜர்’ மூலம் மிகுந்த புகழ்பெற்றவர்கள், இப்போது ‘அமரன்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் நுழைகிறார்கள்.

RKFI நிறுவனத்தின் 50-வது படமான ‘விக்ரம்’ 2022-ஆம் ஆண்டு, திரையுலகில் சூறாவளியாக நுழைந்து, மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர்களின் 51-வது முயற்சியான ‘அமரன்’ திரைப்படமும் வெற்றிகரமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிக் கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்தப் படம் 2024-ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும்.

Kamal and Sivakarthikeyan combo movie titled Amaran

காரைக்கால் எழுத்தாளர் மில்லத் இயக்கிய ‘ஆந்தை’..; திரையுலகில் உலக சாதனை

காரைக்கால் எழுத்தாளர் மில்லத் இயக்கிய ‘ஆந்தை’..; திரையுலகில் உலக சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காரைக்காலைச் சேர்ந்த, சிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளர் மில்லத் அகமது “ஆந்தை” என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்த படம் இன்று பிப்.16ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் இவர், “நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், பாடல், பாடலுக்கு குரல், பின்னணி குரல், நடனம், தயாரிப்பு மற்றும் இணை இயக்கம்” என தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் படத்தில் பத்து துறைகளைச் செய்வது இதுவே முதல் முறை என்ற சாதனையை பெற்றுள்ளார்.

இந்தச் சாதனையைப் பாராட்டி லண்டன் உலக சாதனைப் புத்தகம் மற்றும் இந்தியா உலக சாதனைப் புத்தகம் அங்கீகரித்து பதிவு செய்து உலக சாதனையாளர் சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

புதுச்சேரி மாநிலத்திலிருந்து திரைப்படத் துறையில் சாதித்தவர் என்ற பெயரும் பெற்றார்.

இதனிடையே நேற்று புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது ஆந்தை திரைப்படம் வெற்றி பெற்று, மேலும் பல நல்ல திரைப்படங்களைத் தரவேண்டும்” என்று வாழ்த்து கூறி ஆசிர்வதித்தார். மில்லத் அகமது 2021ஆம் ஆண்டு ஐந்து வார்த்தையில் சிறுகதை எழுதி உலக சாதனைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் ஆந்தை திரைப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இணை இயக்கம் என ஐந்து துறைகள் மட்டுமே செய்தேன். “ஊத்து ராவா” பாடல் பதிவின்போது இசையமைப்பாளர் ராம் அவர்கள் பாடலில் வரும் வசனங்களை என்னைப் பேச சொன்னார். பேசினேன் நன்றாக இருந்ததால் அப்படியே வைத்துக் கொண்டோம்.

பிறகு பாண்டிச்சேரியில் சில காட்சிகளும், ஒரு பாடல் காட்சியும் படம்பிடிக்க வேண்டியிருந்தது. அதற்கு இயக்குநரால் வர இயலாத சூழ்நிலையால் நான் சென்று இயக்கினேன். அப்போது சைக்கோ பாடலுக்கு நானே நடனம் அமைத்தேன். நன்றாக வந்திருக்கிறது படம் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். பிறகு டப்பிங் பேசும் போது ஒரு போலிஸ் கேரக்டர், ஒரு பைக்காரர், டெலிபோன் குரல், பெண் பற்றிய வசனம் மற்றும் சுகாதார அறிவுரையும் பேசியுள்ளேன். இந்த படத்தில் நடித்தும் இருக்கிறேன்.

ஆக ஒன்பது துறைகள் வந்துவிட்டது. இறுதியாக இந்தத் திரைப்படத்தில் ஆரம்பத்தில் இருந்த தயாரிப்பாளர்களால் தொடர்ந்து பயணிக்க இயலாத காரணத்தால் நானே தயாரிப்பாளர் ஆகிவிட்டேன். படத்தை முடித்தப்பிறகு பார்த்தால் 10 துறைகள் செய்து விட்டேன். பொதுவாக முதல் படத்தில் நான்கு அல்லது ஐந்து துறைகள் மட்டுமே செய்வார்கள்.

இதனை லண்டன் உலக சாதனைப் புத்தகம் மற்றும் இந்தியா உலக சாதனைப் புத்தகம் ஆகியவற்றிற்கு தெரிவித்தோம். அவர்கள் ஆய்வுசெய்து இறுதியில் இந்தச் சாதனையை அங்கீகாரம் செய்தார்கள் என்று கூறினார்.

Karaikal Millath Ahamed done world record by Aandhai movie

HOT SPOT வந்தா விவாதங்கள் வரும்.. தட்டி கேட்கத் தூண்டும்.; ‘அடியே’ இயக்குனரின் அடுத்த அதிரடி

HOT SPOT வந்தா விவாதங்கள் வரும்.. தட்டி கேட்கத் தூண்டும்.; ‘அடியே’ இயக்குனரின் அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து “ஹாட் ஸ்பாட்” என்ற புதிய படம் தயாரிக்கிறார்கள்.

மை சிக்ஸர் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் அவர்கள் வெளியீடுகிறார்..

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘திட்டம் இரண்டு’ மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் நடித்த ‘அடியே ஆகிய வித்தியாசமான வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் அடுத்த படம் “ஹாட் ஸ்பாட்” இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். வரும் மார்ச் மாதம் இப்படம் திரைக்கு வர உள்ளது.

சதீஷ் ரகுநாதன்- வான் ஆகியோர் இசையமைக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார் முத்தையன் எடிட்டிங் பணியை மேற்கொண்டு இருக்கிறார்.

இதில் கலையரசன் கதாநாயகனாக ஆட்டோ ஓட்டுநராக நடிக்கிறார். 96 மற்றும் அடியே பட கதாநாயகி கௌரி கிஷன் இளம் மனைவியாக வேடம் ஏற்றிருந்தார். அவரது கதாபாத்திரம் ஆண்கள் மனதில் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தும்.

மேலும் சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் , திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ் சோபியா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

“ஹாட் ஸ்பாட்” படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் கூறும் போது,”*

சமுதாயத்தில் அன்றாடம் நம் கண் முன்பே நடக்கும் சில அடிப்படை விஷயங்களை தட்டிக் கேட்க தைரியம் இல்லாமல் அதை கவனிக்காமல் செல்கிறோம்.

ஆனால் இது சமுதாயத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதன் பின்விளைவுகள் நம்மை பாதிக்கும் போது தான் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்று நாம் யோசிப்போம்.

அப்படிப்பட்ட முக்கிய விஷயங்களை அலசும் கதையாக ஹாட் ஸ்பாட் படம் இருக்கும். திரைக்கு வந்த பிறகு இப்படம் சமுதாயத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஏனென்றால் இது மக்களை மற்றும் மக்களை சுற்றி நடக்கும் அரசியலை குறித்து விவாதிக்கும் கதை. இளைஞர்கள் முதியவர்கள் மற்றும் அனைத்து சமூகத்தினர் மனங்களில் இப்படம் விழிப்புணர்வையும், தட்டி கேட்க வேண்டும் என்ற துணிச்சலையும் தரும்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது.

முன்னதாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுவே இப்படம் சமுதாயத்தில் என்ன விஷயத்தை பேசப் போகிறது என்ற ஆர்வத்தையும் அதிகரித்து இருக்கிறது.

இவ்வாறு இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் கூறினார்.

Hot spot movie will create awarness says Vignesh Karthik

வெற்றி துரைசாமியிடம் நிறைய கற்றேன்.; அவர் பெயரில் விருதுகள்.. – வெற்றிமாறன்

வெற்றி துரைசாமியிடம் நிறைய கற்றேன்.; அவர் பெயரில் விருதுகள்.. – வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் வெற்றிமாறன், அவரது மனைவி ஆர்த்தி வெற்றி மாறன், பேராசிரியர் ராஜநாயகம், முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன்குமார், மருத்துவர் வந்தனா,ஜெகதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முதலாவதாக பேசிய பேராசிரியர் ராஜநாயகம்,” கையறு நிலையில் துக்கமான சூழ்நிலையில்,இந்த பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகத்தின் முதுகெலும்பாக, இருபெரும் தூண்களில் ஒரு பெரும் தூணாக இருந்த வெற்றி துரைசாமியின் எதிர்பாராத மறைவு அஞ்சலி செலுத்த ஆற்றல் குன்றிய சூழலானாலும், இந்த ஆய்வகத்திற்கு அவர் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அவரது மறைவை அவரது குடும்பத்தினர், இந்த சூழலை கடந்து வர தேவையான ஆற்றலை இறைவன் அளிக்க வேண்டும்.வெற்றி துரைசாமியின் நினைவை போற்றும் வகையில் திரை மாணவர்களுக்கு விருதுகள் அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

அவருக்குப் பிறகு பேசிய தயாரிப்பாளர் தாணு…

“வெற்றி துரைசாமி மறைவால் மிக மிக சொல்லொணாத் துயரத்திற்கு ஆளானேன்.அவருடன் பழகிய காலங்கள் சிறப்பான காலங்கள் ஆகும்.

இந்த பன்னாட்டு திரை மற்றும் பண்பாடு ஆய்வகம் திறப்பதற்கு நான் கொடுத்த தொகை மிகப் பெரிய உதவியாக இருந்ததாக மீண்டும் மீண்டும் நன்றி கூறினார். எப்பொழுது எனக்கு ஒரு கதையை தயார் செய்யப் போகிறாய் என்று நான் கேட்டதற்கு, வெற்றி துரைசாமி வெற்றிமாறனின் முழு சம்மதத்துடன் தான் தங்களிடம் வந்து படத்திற்கான கதையை கூறுவேன் என்று கூறினார்.

பக்தியுடனும் பாசத்துடனும் வெற்றிமாறன் அவர்களை குருவாக பாவித்துக் கொண்டிருந்தார். அவருடைய தந்தையார் எனக்கு மிகவும் நெருக்கமானவர், அவருக்கு இது பேரிழப்பாகும் எந்த தந்தைக்கும் இப்படி ஒரு துயரம் நிகழக் கூடாது”,
என்று கூறினார்.

அதன் பின்னர் IIFC முன்னாள் மாணவர் பிரின்ஸ் பேசும்பொழுது,” வெற்றி துரைசாமி இந்த இடம் கொடுக்கவில்லை என்றால் இந்த நிறுவனம் உருவாகாமல் போயிருக்கலாம். என்னை மாதிரி நிறைய மாணவர்களின் கனவை நிறைவேற்றிய வெற்றி துரைசாமி நம்மிடையே இல்லையென்பது மிகவும் வருத்தமாக உள்ளது. அவரது தந்தையார் கூறியது போல குடிமைப்பணி மாணவர்கள் போல திரைத்துறை மாணவர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்”, என்று கூறினார்.

IIFC முன்னாள் மாணவர் அஜித் பேசும்பொழுது,” இந்த ஆய்வகத்திற்காக அனைத்து தருணங்களிலும் நம்முடன் இருந்தார். சமூக சமத்துவத்திற்காக பாடுபட்டார். இப்படி இயற்கை அவரை எடுத்துக் கொண்டது, மிகவும் வருத்தமாக உள்ளது”, என்றார்.

பிறகு மேஜர் மதன்குமார் அவர்கள் பேசிய போது,” மிகவும் துயரமான நாள்.வெற்றி துரைசாமியின் மறைவு மிகவும் வருத்தமான நிகழ்வு.

சிலர் மட்டுமே தமது வாழ்நாளில் முத்திரை பதித்து செல்கின்றனர்.தமது தந்தையைப் போல சாமானிய மக்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த ஆய்வகம் பயன்பட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் வணிக நோக்கமில்லாமல் இடமளித்தார். ஒரு தந்தையின் புத்திர சோகம் என்பது கொடுமையானது மற்றும் குடும்பத்தினரின் வலி என்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த ஆய்வகத்தில் இருந்து வரும் மாணவர்கள் தாங்கள் எடுக்கும் திரைப்படங்களை திரு. வெற்றி துரைசாமி அவர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று கூறினார்.

மருத்துவர் வந்தனா அவர்கள் பேசும்பொழுது,” என்னிடம் ‘அக்கா அக்கா’ என்று எப்போதும் அன்பை பொழிந்தார். என்னிடம் இருந்த வளர்ப்பு நாய்க்கான அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டு, உதவி புரிந்து, தத்தெடுத்துக் கொண்ட ஒரு புனித ஆத்மா அவர். அவருக்கு இப்படி ஒரு நிகழ்வு என்பது ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

மருத்துவ ரீதியில் அவர் அனுபவித்த கஷ்டமான சூழ்நிலைகளை போராடி மீண்டு வந்தார். அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும்”, என்று கூறினார்.

ஜெகதீஷ் பேசும் பொழுது,”சமூக பொருளாதார அரசியல் ரீதியாக பின் தங்கி இருக்கக்கூடிய மாணவர்களை ஒட்டுமொத்தமாக ஊடகத்தில் கொண்டு வர வேண்டும் என்ற ராஜநாயகம் அவர்களின் ஆவலை, ஒரு நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற கனவு திட்டத்தை மிகப்பெரிய அளவில் உதவி செய்தவர்தான் வெற்றி துரைசாமி. மனிதர்கள் மட்டுமில்லாமல் விலங்குகள் பறவைகளுடன் கூட மனிதநேயத்துடன் பழகுபவர்தான் வெற்றி துரைசாமி. இந்த ஆய்வகத்தின் மாணவர்கள் வெற்றி துரைசாமி அவர்களின் கனவை நிறைவேற்ற பாடுபட வேண்டும். சைதை துரைசாமியின் குடும்பத்தார்க்கும் பணியாளர்களுக்கும் வருத்தத்தையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.

அடுத்ததாக ஆர்த்தி வெற்றிமாறன் பேசும் பொழுது,” முதன்முறையாக 2012-ஆம் ஆண்டு தான் சந்தித்தோம்.இந்த IIFC-தான் அவருடன் பயணிக்க காரணமாக இருந்தது.

இந்த இடத்தை அவர் IIFC-க்காக கொடுத்து வகுப்பு எடுக்கவும், இதை நடைமுறைப்படுத்தவும் நிறைய ஆலோசிக்க வேண்டி இருந்தது.அவர் மிகவும் எளிமையான மனிதர் எளிதில் அணுகக் கூடியவர். எங்களுக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த நிறுவனத்தை இந்த அளவுக்கு கொண்டு வருவதற்கு அவரால் மட்டுமே சாத்தியமானது. அவர் குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்,”என்றார்.

இறுதியாக இயக்குனர் வெற்றிமாறன் பேசும்பொழுது…

“வெற்றி துரைசாமி சினிமா சம்பந்தப்பட்ட இடங்களில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பொழுது என்னுடைய மாணவர் என்று அறிமுகப்படுத்திக் கொள்வார். ஆனால் அவரிடம் நான் தான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.

எங்களிடம் நிறைய ஒத்துப் போகக்கூடிய பொதுவான பிடித்த விஷயங்கள் இருந்தன. அவை அனைத்தைப் பற்றியும் பேரார்வத்துடன் தெரிந்து வைத்திருப்பது மட்டுமல்லாமல் அதற்கான தேடல் அதிகமாக உள்ள மனிதர் அவர்.

அவர் ஒரு சிறந்த *’வைல்ட் லைஃப்’* புகைப்படக் கலைஞர் ஆவார்.ஏற்கனவே நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் சார்பில் சிறந்த புகைப்பட கலைஞராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அது தொடர்பான பயணம் மேற்கொண்ட போது தான் இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

என்னுடைய ஒவ்வொரு செயல்களிலும் அவருடைய பங்களிப்பு எப்பொழுதும் இருந்துள்ளது. நாங்கள் IIFC உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்த பொழுது அவர் தடையேதும் இல்லாமல் இங்கே செயல்படுத்தலாம் என்று கூறியது மட்டும் இல்லாமல் அவருடைய தொடர் ஆர்வத்தை இங்கே காண்பித்துக் கொண்டே இருந்தார்.

இப்படி ஒரு பேருதவி எல்லாராலும் முடியாது, இப்படி இன்னொருவரின் கனவில் பேரார்வத்துடன் செயலாற்றுவது என்பது எல்லாராலும் முடியாது.எப்போதுமே உதவி கொண்டே இருக்கக்கூடிய மனநிலையில் உள்ளவர்களால் மட்டுமே முடியும். அவருடைய மறைவு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது, அவரது மறைவை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

இந்த மாதிரியான காலகட்டங்களில் துணிச்சலாக எடுத்து வைக்கும் முன்னகர்வுகள் தான் நம்மையும் சமூகத்தையும் நம்மை விட்டு சென்றவர்களையும் நிலை நிறுத்தக் கூடியதாக இருக்கும்.

வெற்றி துரைசாமி நினைவாக IIFC சார்பாக முதல் திரைப்படம் எடுப்பவர்களுக்கும் *’வைல்டு லைஃப்’* புகைப்பட கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். சிலரின் மறைவுதான் நம்மில் பாதியை எடுத்து சென்று விடும் அப்படி ஒரு மறைவுதான் வெற்றி துரைசாமியின் மறைவு” என்று தன் அஞ்சலியை நிறைவு செய்தார்.

குழு புகைப்படத்துடன் ‘நினைவு அஞ்சலி’ நிகழ்வு நிறைவுற்றது.

Planning to give award in the name of Vettri Duraisamy says Vettrimaran

‘காதலிச்சா கல்யாணம் பண்ணக்கூடாது’.. அப்போ கழட்டி விடணுமா.?¿ வரிசை கட்டும் விஜய் ஸ்ரீஜி படங்கள்

‘காதலிச்சா கல்யாணம் பண்ணக்கூடாது’.. அப்போ கழட்டி விடணுமா.?¿ வரிசை கட்டும் விஜய் ஸ்ரீஜி படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

87 வயது நடிகர் சாருஹாசனை கதையின் நாயகனாக நடிக்க வைத்து ‘தாதா 87’ என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி.

வருடத்திற்கு இரண்டு படங்கள் இயக்கம் என இவரது பட வரிசை பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்..

இதனை எடுத்து பப்ஜி & பவுடர் என்ற படங்களை இயக்கினார். இதில் ‘பவுடர்’ என்ற படம் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது மோகன் நடிப்பில் உருவாகி வரும் ‘ஹரா’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

மோகன் ரீ என்ட்ரி கொடுக்கும் இந்த படம் 2024 ஏப்ரல் மாதம் வெளியாகும் என சமீபத்தில் போஸ்டர் வெளியானது.

இதனை அடுத்து அனித்ரா நாயர் நடிப்பில் ‘பேங்க்’ என்ற என்ற ஒரு படமும் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து ‘ஸ்டாலின் ஜோசப்’ என்ற படத்தை இயக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இந்த வரிசை பட்டியில் தற்போது ஒரு புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி.

‘காதலிச்சா கல்யாணம் பண்ண கூடாது’ ‘KKPK’ என்ற தலைப்பிட்டு ஒரு படத்தை இயக்குவதாக காதலர் தினத்தில் காதலர்களுக்கு அதிர்ச்சியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பொதுவாகவே நம் வாழ்க்கையில் காதல் திருமணமா¿ என்ற பேச்சு வழக்கில் உள்ளது. ஆனால் காதலிச்சா கல்யாணம் பண்ணக்கூடாது… கழட்டி விடனும் என்பது போல இவர் தலைப்பு வைத்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஏப்ரல் மாதம் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை, கோவை, கோவா, மலேசியா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு, தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகிறதாம் ‘காதலிச்சா கல்யாணம் பண்ணக்கூடாது’.

Vijay Sri G next titled Kadhalicha Kalyanam Panna Koodadhu

More Articles
Follows