அஞ்சலி செலுத்தி விட்டு காலா படம் பார்க்கும் தூத்துக்குடி மக்கள்

அஞ்சலி செலுத்தி விட்டு காலா படம் பார்க்கும் தூத்துக்குடி மக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

A Silent tribute of Rajini fans in thoothukudi before watching Kaala movieரஜினிகாந்த் படங்கள் ரிலீஸ் என்றாலே திருவிழா போல ரஜினி ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

அவர்கள் ரஜினியை தெய்வமாக நினைத்து இதை காலம் காலமாக செய்து வருகிறார்கள்.

இன்று காலா வெளியான நிலையில், எந்த ஆர்ப்பாட்டமும் அதகளமும் இல்லாமல் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்திவிட்டு காலா படத்தை பார்த்துள்ளனர் தூத்துக்குடி மக்கள்.

அதுற்றிய விவரம் வருமாறு…

கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதில் 13 பேர் உயிரிழந்த நிலையில், ரஜினிகாந்த் அங்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது துப்பாக்கி சூட்டுக்கு காரணம் சமூக விரோதிகளே என கூறியிருந்தார்.

ஆனால் போராடியவர்கள் எப்படி சமூக விரோதிகள் ஆவார்கள் என பலத்த எதிர்ப்பு குரல்கள் ரஜினிக்கு எதிராக தொடங்கியது-

மேலும் `காலா’ திரைப்படத்தை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற தகவல் வாட்ஸ்அப்களிலும் வைரலானது.

இதனால் தூத்துக்குடியில் `காலா’ திரைப்படம் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள பாலகிருஷ்ணா திரையரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ‘காலா’ திரைப்படம் இன்று காலை 9.47 மணிக்குத் திரையிடப்பட்டது.

திரைப்படம் திரையிடத் தொடங்குவதற்கு முன்பு, ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ஸ்டாலின் தலைமையில் ரசிகர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து `காலா’ படம் திரையிடப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் கால திரைப்படத்தை மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கண்டு மகிழ்ந்தனர்.

இதுகுறித்து மாவட்டத் தலைவர் ஸ்டாலின் பேசுகையில், “தலைவர் படம் ரிலீஸானாலே வெடி வெடிச்சு இனிப்பு வழங்கி திருவிழா போல சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடுவோம்.

கடந்த மாதம் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதால் தூத்துக்குடியே சோகத்தில் மூழ்கி உள்ளது. இந்த நிலையில், ஆரவாரம் கூடாது. தலைவரும் இதை விரும்ப மாட்டார்.

வீரமரணம் அடைந்த 13 பேரின் ஆத்மா சாந்தி அடைய ரசிகர்கள் மவுன அஞ்சலி செலுத்தினோம். 3 நாள்களுக்குத் துக்கம் அனுசரிக்கும் வகையில், இதேபோல அஞ்சலி நிகழ்வு நடக்கும்..” என்றார்.

A Silent tribute of Rajini fans in thoothukudi before watching Kaala movie

A Silent tribute of Rajini fans in thoothukudi before watching Kaala movie

ரஜினிக்காக காலா எடுக்கவில்லை; மக்களுக்காக எடுத்தேன்… ரஞ்சித் பேட்டி

ரஜினிக்காக காலா எடுக்கவில்லை; மக்களுக்காக எடுத்தேன்… ரஞ்சித் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala for the problems of land less peoples not for Rajini says Ranjithரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘காலா’ திரைப்படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகியுள்ளது.

பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.

தமிழகமெங்கும் காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் அதிகாலை முதலே ஆரம்பமானது.

திரையரங்குகளுக்கு முன்பிருந்த பேனர்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம், பூஜைகள் செய்தனர்.

மேலும் ரசிகர்களின் உற்சாகத்தை காண என இயக்குனர் ரஞ்சித் தியேட்டர்களுக்கு நேரிடையாக சென்றிருந்தார்.

இதுகுறித்து ரஞ்சித் கூறும்போது…

‘காலா படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்கவில்லை. மக்கள் பிரச்னைக்காக எடுக்கப்பட்ட படம்.

இங்கே மக்களிடையே ஈக்குவாலிட்டி இல்லை. அதைதான் சொல்லியிருக்கிறேன்.

நான் இயக்குனர் என்பதை விட நான் ஒரு அரசியல்வாதிதான். என் படங்களில் எப்போதும் அரசியல் இருக்கும்.

கர்நாடகாவில் ஒரு சில இடங்களில் காலா திரைப்படம் வெளியாகவில்லை. இது வருத்தம் அளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

Kaala for the problems of land less peoples not for Rajini says Ranjith

காந்தியை கேட்டாங்களா? என்னைய ஏன் கேட்கிறீங்க.? : கமல்ஹாசன்

காந்தியை கேட்டாங்களா? என்னைய ஏன் கேட்கிறீங்க.? : கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan clarifies his meeting with Karnataka CM Kumarasamyஓரிரு தினங்களுக்கு முன் கர்நாடக முதல்வர் குமாரசாமியை கர்நாடக மாநிலத்தில் சந்தித்து பேசினார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி காவிரி மேலாண்மை வாரியம் உள்ள நிலையில் கமல் எதற்காக அந்த மாநில முதல்வரை சந்தித்தார் என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் பல கட்சியினர் கமலின் இந்த சந்திப்பை கண்டித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழக விவசாயிகள் அமைப்புடன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் கமல்ஹசன்.

அப்போது அவர் இதுகுறித்து கூறும்போது…

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு ஒரு கட்சித் தலைவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.

எல்லாம் பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முடியும். அதன் அடிப்படையில்தான் கர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்களை சந்தித்தேன்.

நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் மகாத்மா காந்தி எல்லாம் செய்தார். அவர் ஒரு கட்சித் தலைவர் இல்லை.

அப்படியென்றால் காந்தியை கேள்வி கேட்பீர்களா? என்னை கேட்பது ஏன்?” என பேசினார் கமல்ஹாசன்.

Kamalhassan clarifies his meeting with Karnataka CM Kumarasamy

நான் நாத்திகவாதி என்பதால் அப்படிதான் செயல்படுவேன்..: காலா டைரக்டர் ரஞ்சித்

நான் நாத்திகவாதி என்பதால் அப்படிதான் செயல்படுவேன்..: காலா டைரக்டர் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director ranjithரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு பின்னர் பரபரப்புடன் வெளிவரும் ‘காலா’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.

படத்தில் ரஜினியின் வழக்கமான ஆக்‌ஷன் ஃபார்முலாவைத் தாண்டி கபாலியைப் போல் ரஞ்சித் என்ற இயக்குநரே அதிகம்
காணப்படுகிறார் என்ற கருத்து எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் பா.இரஞ்சித் இன்று சென்னையில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது…

நாம் வடிவமைக்கும் கேரக்டரில் நடிகர் நடிக்கிறபோது அவர் மூலமாகத்தானே கருத்தை பேச முடியும். பிறகு அதை எப்படிச் செய்ய முடியும்.

பொதுவாக தென்னிந்தியாவில் ராவணன் அரக்கன் என்ற நம்பிக்கையே உள்ளது.

நான் நாத்திகவாதி, எனவே என்னுடைய மனநிலை அடிப்படையில் நான் செயல்படுவேன்.” என கூறினார்.

ரஜினியின் அடுத்த பட ஷுட்டிங்கை தொடங்கினார் கார்த்திக் சுப்பராஜ்

ரஜினியின் அடுத்த பட ஷுட்டிங்கை தொடங்கினார் கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

super star with sun picturesகாலா படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ள படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்க, திரு என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார்.

முக்கிய ரோலில் விஜய்சேதுபதி நடிக்கிறார்.

ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கின்றனர்.

சனந்த் ரெட்டி ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

சிம்ரன் /அஞ்சலி ஆகியோரும்
நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த 4-ம் தேதி டேராடூனில் தொடங்கியது. இதற்காக 200 பேர் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்த ஷூட்டிங்கில், இன்று முதல் கலந்து கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.

அது தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ரஜினி நடித்துள்ள ‘காலா’ படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது.

அப்போதும் கூட அவர் சென்னையில் இல்லாமல் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

பிளாஸ்டிக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு ஆரி பாராட்டு

பிளாஸ்டிக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு ஆரி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Aari express his thanks to TN Govt for Plastic banதமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்துவதோ கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் பால் தயிர் எண்ணெய் மற்றும் மருத்துவ பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மற்ற பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கு நடிகரும் சமூக சேவகருமான ஆரி தனது நன்றியை தெரிவித்துள்ளார், இவர் பல வருடங்களாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என போராடியிருக்கிறார்.

குறிப்பாக தனது படபூஜை விழா மற்றும் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் அவர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் விழா ஏற்பாடு செய்திருக்கிறார் மற்றும் பல கல்லூரிகலில் விழிப்புணர்வும் செய்திருக்கிறார்.

எனவே தனது ஆசையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதாக தமிழக அரசு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார் நடிகர் ஆரி.

மேலும் இதற்கு தமிழக மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Actor Aari express his thanks to TN Govt for Plastic ban

More Articles
Follows