ஆண்டனி விமர்சனம்

ஆண்டனி விமர்சனம்

இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்ற பெருமையுடன் வந்துள்ள படம் ஆண்டனி.

இந்த படத்தில் நிஷாந்த், வைஷாலி, லால், ரேகா, சம்பத்ராஜ், வெப்பம் ராஜா, சேரன் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

குட்டி குமார் என்பவர் இயக்கியுள்ளார்.

ஆர்.பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, இளம் பெண் இசையமைப்பாளர் ஷிவாத்மிகா இசை அமைத்துள்ளார்.

கதைக்களம்…

கதாநாயகன் ஆண்டனி (நிஷாந்த்), கொடைக்கானலில் சப் இன்ஸ்பெக்டராக பணி புரிகிறார். இவரது நேர்மையால் இவருக்கு பல எதிரிகள் இருக்கிறார்கள்.

ஆண்டனியின் காதலி மகா (வைஷாலி) லேடிஸ் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண் இளம்.

ஆண்டனியின் தந்தை ஜார்ஜும் (மலையாள நடிகர் லால்) ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி ஆவார். தாய் மேரி (ரேகா) விபத்தில் கால்களை இழந்தவர்.

படத்தின் முதல் காட்சியை இருட்டில் துவங்குகிறது. ஹீரோ ஆண்டனி ஒரு காருக்குள் போதை நிலையில் இருக்கிறார். போதை தெளிந்தவுடன் தான் எங்கே இருக்கிறோம் என தெரியாமல் குழம்புகிறார்.

அப்போதுதான் தான் மண்ணுக்குள் அதுவும் ஒரு காருக்குள் புதைந்து கிடக்கிறோம் என தெரிய வருகிறது.

இவரிடம் போன் வேற இல்லை. இதனால் யாரையும தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்.

காருக்குள் இருக்கும் லைட் வெளிச்சத்தை வைத்து தன்னால் முயன்ற முயற்சிகளை செய்து வெளியே வர நினைக்கிறார்.

காரை உடைத்து வெளியே வர நினைத்தாலும் மண் சரிந்துக் கொண்டே இருக்கிறது.

இதனிடையில் ஆண்டனி வராததால், அவரது தந்தை ஜார்ஜ் தன் நண்பர்களுடன் தேடுகிறார்.

அவனது எதிரிகளின் மீது சந்தேகம் கொண்டு அவர்களை தேடி செல்கிறார்.

மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் ஆண்டனி வெளியே வந்தாரா? எப்படி வந்தார்? அவரது தந்தை கண்டு பிடித்தாரா? அவரை மண்ணுக்குள் புதைத்தது யார்? உயிருடன் மீண்டு காதலியை கரம் பிடித்தாரா? என்ற கேள்விகளுக்கு இறுதியில் விடையை சொல்வான் இந்த ஆண்டனி

கேரக்டர்கள்…

பெரும்பாலும் ஹீரோக்களுக்கு முதல் படத்தில் அழுத்தமான கேரக்டர்கள் கிடைக்காது. ஆனால் ஹீரோ நிஷாந்துக்கு அசத்தலான அறிமுகத்தை கொடுத்துள்ளது இந்த ஆண்டனி.

ரொமான்ஸ் அவ்வளவாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் ஆக்சன் கை கொடுக்கும் எனத் தெரிகிறது.

ஹீரோயின் வைஷாலிக்கு சின்ன வேடம்தான். ஆனால் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்ய முயற்சித்துள்ளார்.

அம்மாவாக வரும் ரேகாவுக்கு கெஸ்ட் ரோல் போல. மகனை பிரிந்துள்ள தாய்க்கு நிறைய காட்சிகளை கொடுத்திருக்கலாம்.

மலையாளத்தில் அசத்தும் லால் நடிகருக்கு தமிழ் சினிமாவில் பெரும்பாலும் வில்லன் வேடம்தான் கொடுத்திருக்கிறார்கள். தான் ஒரு நல்ல குணசித்திர நடிகனும் என்பதை நிருபித்துள்ளார்.

வில்லனாக அறிமுகமாகியுள்ளார் இப்பட தயாரிப்பாளர் வெப்பம் ராஜா. இவருக்கு டெரர் பேஸ் இல்லையென்றாலும் நடிப்பில் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

எக்ஸ்ட்ரா லைட்டிங் எதுவும் இல்லாமல் காருக்குள் இருக்கும் லைட்டை வைத்தே மண்ணுக்குள் படமாக்கியிருக்கும் டைரக்டரையும் ஒளிப்பதிவாளரையும் பாராட்டியே ஆக வேண்டும்.

ஷிவாத்மிகாவின் பின்னணி இசை மிரட்டல். அடங்காமாமலை, மற்றும் காற்றின் மொழி பாடல்கள் ரிப்பீட் மோட். ஆனால் ஓயாமல் பாடல்கள் வந்துக் கொண்டே இருப்பது சலிப்பை தட்டுகிறது.

முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை என்பது வருத்தம்தான். ஆனால் க்ளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம்.

ஆண்டனி… வித்தியாச முயற்சி! வீரியம் குறைவு!

Comments are closed.

Related News

இயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி…
...Read More
மியூசிக் எமோஷன் திரில்லரான உருவாகியுள்ள ஆண்டனி…
...Read More