சீமராஜா விமர்சனம்

சீமராஜா விமர்சனம்

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சிம்ரன், லால், சூரி, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ்
இசை – இமான்
ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியம்
படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன்
சண்டைப் பயிற்சி – விக்கி நந்த கோபால்
இயக்கம் – பொன்ராம்
பி.ஆர்.ஓ. – சுரேஷ் சந்திரா & ரேகா
தயாரிப்பு – 24ஏஎம். ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜா

கதைக்களம்…

சிங்கப்பட்டி சமஸ்தானத்தை சேர்ந்த அரச குடும்பத்தின் வாரிசு தான் நம்ம ஹீரோ சிவகார்த்திகேயன். அவரது தந்தை நெப்போலியன்.

ஒரு சூழ்நிலையில் தங்கள் சொத்தை ஊர் மக்களுக்கு பிரித்து கொடுக்கிறார் நெப்போலியன்.

சொத்து போனாலும் ஊர் மக்கள் மத்தியில் கெத்தாக வாழ்கிறார் சிவகார்த்திகேயன். இவருக்கு கணக்கு பிள்ளைதான் சூரி.

பக்கத்து ஊரான புளியம்பட்டி டீச்சர் சமந்தா மீது காதல் கொண்டு அவர் பின்னாலேயே சுற்றுகிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் சிங்கப்பட்டிக்கும் புளியம்பட்டிக்கும் இடையே சந்தை போடுவதில் பிரச்சனை தொடர்கிறது.

புளியம்பட்டியில் பெரிய வீட்டுக்காரர் லால் மற்றும் சிம்ரன். ஒரு சூழ்நிலையில் சிம்ரனுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மோதல் வலுக்கிறது.

அப்போதுதான் தன் குடும்ப பின்னணியையும் சமந்தாவின் தந்தை விவரமும் சிவாவுக்கு தெரிய வருகிறது.

அப்படி என்ன பின்னணி? அதன்பின்னர் சிவகார்த்திகேயன் என்ன செய்தார்? காதல் கை கூடியதா? என்பதே இந்த சீமராஜாவின் கதை.

கேரக்டர்கள்…

வேலையில்லாத வழக்கமான வாலிபர் கேரக்டர்தான் சிவாவுக்கு. ஆனால் அதையும் ரசிக்கும்படி கெத்து காட்டியிருக்கிறார் சீமராஜா.

சமந்தாவின் காதலுக்காக பின்னால் சுற்றுவது முதல் சந்தைக்காக சவால் விடுவது முதல் சிவகார்த்திகேயன் ராஜ்யம்தான்.

அரச பரம்பரை வம்சாவழி என்பதால் அதற்குரிய கெத்துடன் ரகளை செய்துள்ளார். சிவாவும் சூரியும் செய்யும் அலப்பரைக்கு அளவே இல்லை. காமெடிக்கு புல் கியாரண்டி.

சத்யராஜ்-கவுண்டமணி காமெடி கூட்டணிக்கு நிகராக சிவகார்த்திகேயன்-சூரி காமெடி கால காலமாக நிற்கும்.
படம் முழுவதும் சூரியையும் இணைத்து கொண்டுள்ள சிவகார்த்திகேயனை நிச்சயம் பாராட்டலாம்.

இதில் சூரிக்கு சிக்ஸ் பேக். அவரும் அதற்கான உழைப்பை கொடுத்துள்ளார்.

பிடி டீச்சராக சமந்தா. பெண்கள் சிலம்பம் சுற்றினாலே அழகுதான். அதிலும் அழகு சிலை சமந்தா சிலம்பம் சுற்றினால் அது மிகச்சிறப்பு தான். ஆனால் பைட் ஆரம்பிக்கும்போது ஹீரோ வந்துவிடுகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் வில்லியாக சிம்ரன். இவருடன் வெற்றிக் கூட்டணி அமைத்துள்ளார் லால். இந்த ஜோடியும் கலக்கல்தான். ஆனால் அடிக்கடி சிம்ரன் கத்துவது ஏன் என்றே தெரியவில்லை.??

நெப்போலியன் கேரக்டரை நிமிர செய்திருக்கிறார்.

பீரியட் கால கதையில் அழகு ராணியாக கீர்த்தி சுரேஷ். சிறப்பு தோற்றம் என்றாலும் குறையில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில் பாடல்கள் கிராமத்து மெல்லிசை. வாரேன் வாரேன் சீமராஜா பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும்.

உன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாடல் காதலர்களை கவரும். மற்ற பாடல்கள் ஓகே ரகம்.

ஒளிப்பதிவு செம கலர்புல்லாக கொடுத்திருக்கிறார் பாலசுப்ரமணியம். இவரது பணியை பாராட்டியே ஆக வேண்டும்.

அரசர் கால கதை பின்னணி இசையில் இன்னும் வலு சேர்த்திருக்கலாம். விஜய், அஜித் ரெப்பரசன் தவிர்த்திருக்கலாம். கட்டாயமாக சேர்த்து விட்டதாக தோன்றுகிறது.

கடம்பவேல் ராஜா கேரக்டர் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து தான்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களில் நாம் பார்த்த அந்த கெமிஸ்ட்ரியை இதில் பார்க்க முடியவில்லை.

இது இளைஞர்களுக்கான படமா? காதல் படமா? விவசாயம் படமா? அரசர் காலத்து படமா? என்பதில் நமக்கே குழப்பம் வந்துவிடுகிறது.

முதல் பாதியில் இருந்த கலகலப்பு இரண்டாம் பாதியில் செம மிஸ்ஸிங். மற்றபடி கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் சீரியஸ் என கலந்துக் கொடுத்துள்ளார் பொன்ராம்.

பழைய ரஜினிகாந்தின் கமர்சியல் படங்களின் கலவையாக இப்படத்தை கொடுத்துள்ளார் பொன்ராம்.

ஒரு சில குறைகள் இருந்தாலும் சிரித்து விட்டு வரலாம்

படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா நிறையவே செலவு செய்துள்ளார் என்பது தெரிகிறது.

சீமராஜா.. செம ராஜா

Seemaraja review rating

Comments are closed.