சிங்கப்பூர் சலூன் விமர்சனம்… தலை கிரீடம்

சிங்கப்பூர் சலூன் விமர்சனம்… தலை கிரீடம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி…

சிறு வயது முதலே தன் வீட்டருகே உள்ள முடி திருத்தத்தில் முடி வெட்டுகிறார் ஆர் ஜே பாலாஜி. அங்கு முடி திருத்தம் செய்பவர் சாச்சா (லால்).

அவரைப் போல தானும் உழைத்து உயர்ந்த இடத்துக்கு செல்ல வேண்டும். பெரிய ஹேர் ஸ்டைலிஸ்டாக மாற வேண்டும் என் நினைக்கிறார். ஆனால் இவருக்கு பல எதிர்ப்புகள் உருவாகுகிறது.

அது நம் குலத்தொழில் அல்ல என எதிர்ப்பு வருகிறது.. அப்படி என்றால் இன்ஜினியரிங் மட்டும் நமது குலத்தொழிலா? என்ற கேள்வியும் எழுகிறது.

அதன் பின்னர் தடைகளை தாண்டி எப்படி ஹேர் ஸ்டைலிஷ் ஆக மாறினார் பாலாஜி.. அதன் பிறகு அவர் சந்தித்த சவால்கள் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

RJ BALAJI
MEENAKSHI CHOUDHRY
SATHYARAJ
LAL
Y.G MAHENDIRAN
THALAIVASAL VIJAY
CHINNI JEYANTH
JHON VIJAY
ROBO SANKAR

கேலிப்பேச்சுகள்.. அரசியல் கிண்டல் என நாம் பார்த்த பாலாஜி இதில் முற்றிலும் தன் கேரக்டரை வேறுபடுத்தி பாடி லாங்குவேஜ்ல மாற்றம் காட்டி அசத்தியிருக்கிறார்.. சொல்லப் போனால் கண்ணாடியை கழட்டி விட்டு இன்னும் ஸ்மார்ட்டாக காணப்படுகிறார்.

நாயகி மீனாக்ஷி சௌத்ரிக்கு அழுவதை தவிர பெரிய வேலை இல்லை.

சாஸ்திரம் சம்பிரதாயம் என கஞ்சத்தனம் செய்யும் மாமனாராக வெளுத்துக் கட்டி இருக்கிறார் சத்யராஜ்.. அதிலும் அவரது விக் அலங்காரம் செம..

ஜான் விஜய் & ரோபோ சங்கர் ஆகிய கேரக்டர்கள் படத்திற்கு கூடுதல் பலம். இருவரும் தங்களின் பெஸ்ட்டை கொடுத்துள்ளனர்.

மலையாள நடிகர் லால் தன் நடிப்பால் சாசா கேரக்டரை சவாலா எடுத்து செய்து இருக்கிறார்.

இவர்களுடன் கிஷன் தாஸ், தலைவாசல் விஜய் உள்ளிட்டோரும் உண்டு.

டெக்னீசியன்ஸ்…

DIRECTOR : GOKUL

PRODUCER : Dr. Ishari K Ganesh

DOP : M.SUKUMAR

MUSIC : VIVEK-MERVIN

EDITOR : SELVA RK

BGM : JAVED RIYAZ

ART DIRECTOR : JAYACHANDRAN

CHOREOGRAPHER : BOOPATHY

COSTUME DESIGNER : DIVYA

COSTUMER : DHANAPAUL

VFX SUPERVISOR : STALIN SARAVANAN

STUNT : PRABHU

PRODUCTION EXECUTIVE : N. VICKY, MAHA KALI SHIVA, V. BALAMURUGAN

LYRICS : UMA DEVI, ARIVU

DI & VFX : WHITE Lotus

கேமராமேன் சுகுமார்.. எடிட்டர் செல்வா.. இருவரில் சுகுமார் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.. ஆனால் செல்வா இரண்டாம் பாதியில் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

முதல் பாதையில் இருந்த ஜாலி கலகலப்பு இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங்..

விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் சுமார்.. ஜாவேத் ரியாஸின் பின்னணி இசை உயிரோட்டத்தை கொடுத்துள்ளது..

சலூன் கடையை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் கலை இயக்குநர் ஜெயச்சந்திரன்.

ஒரே படத்தில் தன் மொத்த கருத்துகளையும் சொல்ல வேண்டுமென இயக்குனர் கோகுல் நினைத்து மழை வெள்ளம் சமூகம் என அனைத்தையும் அலசி இருக்கிறார்.. நல்ல வேலை விவசாயத்தை மட்டும் விட்டு வைத்து விட்டார்

அதேசமயம் தொழில் செய்ய வேண்டும் பிசினஸ் செய்து பெரிய ஆளாக வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் இந்த படம் ஒரு உத்வேகத்தை கொடுக்கும் எனலாம்.

முக்கியமாக அடுத்தவரை நம்பி கைகட்டி ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் இந்த படத்தை பார்த்தால் தங்களை நம்பி தங்கள் வாழ்க்கை முன்னேற்றிக் கொள்வார்கள் என நம்பலாம்.. தன்னை நம்புபவன் தனக்கே கிரீடம் சூட்டிக் கொள்ளலாம்..

ஆக சிங்கப்பூர் சலூன் விமர்சனம்… தலை கிரீடம்

சிங்கப்பூர் சலூன்

Singapore Saloon movie review and rating in tamil

ப்ளூ ஸ்டார் விமர்சனம்.. அரக்கோணம் அலப்பறை

ப்ளூ ஸ்டார் விமர்சனம்.. அரக்கோணம் அலப்பறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரக்கோணத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி இந்த ப்ளூ ஸ்டார் உருவாகியுள்ளது. பா ரஞ்சித் இந்த படத்தை தயாரிக்க அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஜெயக்குமார் என்பவர் இயக்கியிருக்கிறார்.

ஸ்டோரி…

அரக்கோணத்தில் உள்ள கிரிக்கெட் அணி.. ப்ளூ ஸ்டார் என்ற அணிக்கு தலைவர் அசோக் செல்வன் மற்றொரு அணியான ஆல்பா பாய்ஸ் என்று அணிக்கு தலைவர் சாந்தனு… அசோக் செல்வனின் தம்பி பிரத்வி இவரும் ஒரு கிரிக்கெட் வீரர்.. அசோக்கின் காதலி கீர்த்தி பாண்டியன் பிருத்திவியின் காதலி திவ்யா துரைசாமி.

சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் ப்ளூ ஸ்டார் மற்றும் ஆல்பா பாய்ஸ் அணிகள் மோதக்கூடாது என்ற உத்தரவு போடப்படுகிறது.. இதனால் எப்போதுமே எதிரும் புதிருமாக இருந்து வருகிறார்கள்.

ஆனால் ஒரு சூழ்நிலையில் இரு அணிகளும் மோத வாய்ப்பு கிடைக்கிறது.. இப்படியாக சென்று கொண்டிருக்கையில் ஒரு கட்டத்தில் இந்த இரு அணிகளும் ஒரே அணியாக மாற முடிவு எடுக்கின்றனர்.

அப்படி என்றால் இவர்களை எதிர்க்கும் மூன்றாக அணி யார்? இவர்கள் இணைய என்ன காரணம்? இணைந்து ஜெயித்தார்களா? என்பது தான் படத்தின் மீதி கதை.

கேரக்டர்ஸ்…

அசோக் செல்வன்
ஷாந்தனு பாக்யராஜ்
பிரித்வி
கீர்த்தி பாண்டியன்
பக்ஸ்
குமரவேல்
லிஸ்ஸி ஆண்டனி
T.N அருண்பாலாஜி
திவ்யா துரைசாமி..

புழுதி படிந்த மண் அரக்கோணம் இளைஞராகவே மாறியிருக்கிறார் அசோக் செல்வன்.. தனது சாக்லேட் பாய் தோற்றத்தை மாற்றி கொஞ்சம் கரடு முரடாகவே காட்சி அளிக்கிறார்.. அவரது தோற்றம் இந்த படத்திற்கு கூடுதல் பலம்..

பல படங்களில் சாந்தமாக வந்த சாந்தனு இதில் கொஞ்சம் முரட்டுத்தனம் காட்டி அவரது ராஜேஷ் கேரக்டரை ரணகளமாக செய்திருக்கிறார்.

ப்ரித்வி இந்த படத்திற்கு கூடுதல் பலம்.. அவரது கேரக்டர் ரசிக்கவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது..

அரக்கோணத்து அடாவடி பெண்ணாக வாயாடி பெண்ணாக வெளுத்து கட்டி இருக்கிறார் கீர்த்தி பாண்டியன்.. பெண்களுக்கும் விளையாட்டு ஆர்வம் இருக்கும் என உணர்த்துவதாக உள்ளது அவரது கேரக்டர்.

கொஞ்ச நேரம் தான் வருகிறார் திவ்யா.. அவரும் தன் பங்கு நிறைவாக செய்து ரசிக்க வைக்கிறார்.. முக்கியமாக அவர் கவிதை பேசும் ஒரு காட்சி அழகு. “எத்தனை பேருக்கு தெரியும்.. உனக்காக நவம்பரில் பூத்தது டிசம்பர் பூ..” என்ற வசனம் ரசிக்க வைக்கிறது

முன்னாள் கிரிக்கெட் வீரராக பக்ஸ்.. கொடுத்த இம்மானுவேல் என்ற கேரக்டரை எமோஷனலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த விதத்திலும் கொடுத்து இருக்கிறார்.

அசோக்கின் பெற்றோர்களாக குமரவேல் மற்றும் லிஸி.. இரு ஒரு பாசத்துல ஆன நடிப்பு அதிலும் முக்கியமாக லிசியின் ஜெபக்கூட்டம் மற்றும் கிறிஸ்துவ மத போதனைகள் சிரிக்க வைக்கிறது..

டெக்னீசியன்ஸ்…

வெறும் கிரிக்கெட்டை மையப்படுத்தி இருந்தாலும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல வசனங்கள் இடம் பெற்றுள்ளது.

யாருக்கிட்ட தோத்தோம்னு பாக்கக் கூடாது; ஏன் தோத்தும்னு பாருங்க”…

வெறுப்பு அழிவுக்கு வழிவகுக்கும்.. நிதானம் தான் நிறைய சொல்லித் தரும்..ம்” போன்ற வசனங்கள் ஈர்க்கின்றன..

பாடலாசிரியர்கள்
உமாதேவி
அறிவு.

நடனம்
ஸ்ரீக்ரிஷ்,

சண்டைப்பயிற்சி
STUNNER’ சாம்,

ஆடை வடிவமைப்பு
ஏகன் ஏகாம்பரம்

SOUND MIXING
சுரேன் G

கலை இயக்குனர்
ஜெயரகு .L

படத்தொகுப்பு
செல்வா RK

இசை
கோவிந்த் வசந்தா

ஒளிப்பதிவு இயக்குனர்
தமிழ் அ அழகன்

*தயாரிப்பு*
R. கணேஷ் மூர்த்தி
G. சௌந்தர்யா

*திரைக்கதை & வசனம்*

தமிழ்ப்பிரபா

எழுத்து – இயக்கம்
S.ஜெயக்குமார்

96 படத்தில் மெலோடியான இசையை கொடுத்த கோவிந்த வசந்தா இதில் அரக்கோணம் அலப்பறையை கிளப்பி இருக்கிறார் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு பின்னணி செயல் மிரட்டி எடுத்திருக்கிறார்.. ஒவ்வொரு பந்துக்கும் நாயகர்கள் அடிக்கும் சிக்ஸருக்கு இவரின் இசை ஈடு கொடுத்திருக்கிறது.

உந்தன் கை வீசிடும் என்ற பாடல்.. இனி அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கேட்டு ரசிக்கலாம்..

படம் பார்ப்பது போன்ற உணர்வை விட கிரிக்கெட் மேட்சை கண்டு வந்தது போல தான் படத்தை இயக்கியிருக்கிறார் ஜெயக்குமார்… ஆனால் அதற்காக பட்டினத்திற்காக அம்பேத்கர் சிலையை அடிக்கடி காட்டிக் கொண்டிருப்பது ஏனோ இதை ஒளிப்பதிவாளர் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.. அதுபோல ரஜினியின் தளபதி பட வால் போஸ்டர் அடிக்கடி காட்சிகளில் வருகிறது..

ரஞ்சித் படம் என்றால் ஒரு அக்மார்க் முத்திரை இருக்கும் அவரது உதவி இயக்குனரிடமும் அந்த முத்திரை இருப்பது இதிலும் காண முடிகிறது..

ஒளிப்பதிவாளர் தமிழ் அ. அழகன்.. 1990களில் நடப்பெற்ற கதைகளை அப்படியே நாம் ரசிக்கும் வகையில் கொடுத்து அழகு பெற செய்து இருக்கிறார்.

அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் காதல் காட்சிகள் அழகு.. நட்பும் பாராட்டும் படி வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக புல்லட் பாபு கேரக்டர் ரசிக்க வைக்கிறது.. சூப்பர் கிரிக்கெட் பிளேயர் நீங்கள்.. ஏன் இந்தியாவுக்கு ஆடல? ஏன்னா அது இந்தியா டீம்.. இந்தியா டீம் என்னை எடுத்துக்க..ல எனவே வேறு நாட்டிற்கு ஆட போகிறேன் என்ற வசனங்கள் அரசியல் சாட்டையடி..

ஆக இந்த ப்ளூ ஸ்டார்.. அரக்கோணம் அலப்பறை..

ப்ளூ ஸ்டார்

Blue Star movie review and rating in tamil

ஹனு மான் திரைப்பட விமர்சனம்

ஹனு மான் திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Casting : Teja Sajja, Amritha Aiyer, Vinay Rai, Raj Deepak Shetty, Vennela Kishore, Samuthirakani, Varalakshmi Sarathkumar

Directed By : Prasanth Varma

Music By : Anudeep Dev, GowraHari, Krishna Saurabh

Produced By : Primeshow Entertainment – Niranjan Reddy.

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ஹனுமான். பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இதில் நடிகர் தேஜா சஜ்ஜா நடித்துள்ளார்.

ஸ்டோரி…

தேஜா சஜ்ஜா நாயகன்.. ஒரு கட்டத்தில் இவருக்கு கடவுள் ஹனுமானின் ரத்த துளியால் உருவான மிகசக்தி வாய்ந்த கல் ஒன்று கிடைக்கிறது.

இதன்பின் பெரும் பலசாலியாக உருவெடுக்கிறார். சக்தியால் கிடைக்கப் பெற்ற பலத்தை வைத்து ஊர் மக்களுக்கும் சேவை செய்கிறார்.

நாயகனின் சக்தியை தெரிந்துக்கொள்ளும் வில்லன் வினய் சக்தியை பறிக்க தேடி வருகிறார்.

அதன் பின்னர் என்ன நடந்தது? தேஜா சஜ்ஜா என்ன செய்தார்? ஹனுமானின் சக்தி கல் பவர் என்ன.? போன்ற கேள்விகளுக்கான பதிலை ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி ஜானரில் சொல்வது தான் ‘ஹனு-மான்’.

கேரக்டர்ஸ்…

தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நாயகியாக நடித்துள்ளார். வினய் ராய் வில்லனாக நடித்துள்ளார்.

வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார்.

தேஜா சஜ்ஜா, வரலட்சுமி மற்றும் கெடப் ஸ்ரீனு காமெடி ஹைலைட்..

தேஜா சஜ்ஜா சீன்கள் வேற லெவல். தனக்கு கிடைத்த சக்தி மூலம் அவர் செய்யும் சாகசங்கள் அனைத்தும் சூப்பர். காமெடி காட்சிகளை வசிக்க வைக்கிறது முக்கியமாக தெலுங்கு படங்களை கிண்டல் அடிக்கும் காட்சியில் ரசிகர்கள் சிரிப்பலையில் தியேட்டர் அதிர்கிறது.

தெலுங்கு ஹீரோ பாலையா போல் ரயிலை விரலால் நிறுத்துவதற்காக கிளம்பும் காட்சி வேற லெவல்.

நாயகியாக அமிர்தா ஐயர், ஹீரோ செய்ய வேண்டிய சாகசங்களை இவர் செய்வது அசத்தல்.

நாயகனின் அக்காவாக வரலட்சுமி சரத்குமார். தம்பியை காப்பாற்ற அதிரடியில் இறங்கி மாஸ் காட்டிவிட்டார் வரலட்சுமி.

வில்லனாக வினய் ராய்.. சூப்பர் மேன் ஆகப்போகிறேன் என்று ஆசைப்படும் கேரக்டர்.. ஸ்டைலிஷாக அசத்தி இருக்கார்.

வெண்ணிலா கிஷோரின் காமெடி குலுங்கி சிரிக்க வைக்கிறது. சமுத்திரக்கனியின் வேடம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

ஹீரோவுக்கு போட்டியாக குரங்கு ஒன்று வரும் காட்சியில் நிச்சயம் குழந்தைகள் கைதட்டி ரசிப்பார்கள்.

டெக்னீசியன்ஸ் ….

அனுதீப் தேவ், ஹரி கௌர, ஜெய் கிரிஷ், கிருஷ்ணா சௌரப்லு ஆகியோர் இசை அமைத்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் தாசரதி சிவேந்திரன்

பிரம்மாண்டமான பொருட் செலவில் 12 கோடி ரூபாய் செலவில் ஹனுமான் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் பான் இந்திய படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகி உள்ளது.

மேலும் ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானீஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும் வெளியாகி உள்ளது.

VFX, விஷூவல் மற்றும் சூப்பர் ஹீரோ கதை சொல்லிய விதம் அருமை. ஓர் அழகிய கிராமத்தை கிராபிக்ஸ் மூலம் வடிவமைத்து இருக்கிறார் vfx டிசைனர்.

கிராபிக்ஸ் காட்சிகளும் நாயகனுக்கு சக்தி கிடைத்த பிறகு நிகழும் சாகசங்களும் கண்கொள்ளாக் காட்சி. சில காட்சிகளில் தியேட்டரில் ஜெய் ராம் கோஷம் ஒலிப்பதை கேட்க முடிகிறது.

ஹனுமான் என்ற பெயரில் ஹிந்து மத ஆன்மீக பேசும் படம் என்றாலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்த படமாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் வர்மா.

Teja Sajja starrer Hanuman movie review

‘மிஷன் சாப்டர் 1’ பட விமர்சனம்

‘மிஷன் சாப்டர் 1’ பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி…

நாயகன் அருண் விஜய் தன் மகள் சிகிச்சைக்காக தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு லண்டன் செல்கிறார்.

பெரிய தொகை தேவைப்படுவதால் ஹவாலா மூலம் பணம் பெற்றுக் கொண்டு லண்டன் செல்கிறார். அப்போது இவரது பணத்தை திருட ஒரு கும்பல் முயற்சிக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஏற்பட்ட தகராறால் தவறுதலாக லண்டன் போலீசையும் அடித்து விடுகிறார். இதனால் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படுகிறது.

அதை சிறைச்சாலையில் உள்ள மூன்று கைதிகள் தப்பிக்க வைக்க வில்லன் முயற்சி மேற்கொள்கிறார்.

இதனையறிந்த அருண் விஜய் என்ன செய்கிறார்.? படத்தில் எமி ஜாக்சன் யார்? லண்டன் சிறைச்சாலையில் சிக்கிய அருண் விஜய் என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

பாசம் கடமை நேர்மை என அனைத்தையும் தன் நடிப்பில் உணர்ச்சிகரமாக காட்டியிருக்கிறார் அருண் விஜய். ஆக்ஷனில் அதக்களம் செய்து இருக்கிறார். லண்டன் தீவிரவாதிகளை எதிர்த்து மோதும் காட்சிகளில் அனல் பறக்கிறது. படத்திற்காக பாடி லாங்குவேஜிலும் மாற்றம் செய்திருப்பது பாராட்டுக்குரியது.

வெறுமனே நாயகி வேடம் மட்டுமல்லாமல் ஆக்ஷனிலும் அடித்து தூள் கிளப்பி இருக்கிறார் எமி ஜாக்சன்.

இவர்களுடன் ‘சித்தா’ நிமிஷா சஜயன், பரத் போப்ன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

ஆனால் எத்தனை காலம்தான் முஸ்லிம் தீவிரவாதிகளை காட்டிக் கொண்டிருப்பார்களோ இந்த தமிழ் சினிமாவில் என்று தெரியவில்லை? உமர் பாய்.. உமர் பாய்..

நிறைய பேசிக் கொண்டே இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் ஆக்ஷன் செய்திருக்கிறார் வில்லன்.

சேச்சி நிமிஷா சஜயனின் நடிப்பும் காட்சிகளும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது.

டெக்னீசியன்ஸ்…

பொதுவாகவே இயக்குனர் விஜய் படங்கள் எல்லாம் குடும்பப்பாங்கான படங்களாக இருக்கும். இதில் கொஞ்சம் ஆக்ஷனில் இறங்கி இருக்கிறார். அதிலும் பெரிதாக குறை ஒன்றும் இல்லை.

ஆனால் கிளைமாக்ஸ் காட்சியை முன்பே யூகிக்க முடிவதால் படத்தில் சுவாரசியம் இல்லை. படத்தில் ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

பின்னணி இசை மிரட்டல் ஆக இருக்கிறது. படத்திற்கு கூடுதல் பலத்தை தன் இசை மூலம் நிவர்த்தி செய்திருக்கிறார் ஜிவி பிரகாஷ்.

ஆக்ஷனில் கூடுதல் கவனம் செலுத்திய இயக்குனர் விஜய் திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி திருப்புமுனை காட்சிகள் வைத்திருந்தால் இந்த மிஷன் சாப்டர் ஒன் இன்னும் கூடுதல் கவனம் பெற்று இருக்கும்.

மிஷன் சாப்டர் 1

Mission Chapter 1 movie review and rating in tamil

கேப்டன் மில்லர் விமர்சனம் 4/5

கேப்டன் மில்லர் விமர்சனம் 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக போராடும் ஒரு கேப்டனின் கதை இந்த படம்.

அருண் மாதேஸ்வரன் – தனுஷ் கூட்டணியில் உருவான படம் ‘கேப்டன் மில்லர்’.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தியாகராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், அதிதி பாலன், சந்தீப் கிஷன், ஜெயபிரகாஷ், ஜான் கொக்கன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஸ்டோரி…

1947 இந்திய சுதந்திர பெறுவதற்கு முன்பு நடைபெற்ற கதை களத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர்.

வெள்ளைக்காரனை எதிர்த்து போராடுகிறார் சிவராஜ்குமார். இவரின் தம்பி தனுஷ். இதில் ஆங்கிலேய பட்டாளத்தில் சேர ஆசைப்படுகிறார் தனுஷ் (ஈசன்).

சுதந்திரத்தை வாங்கி ஜெயபிரகாஷ்க்கு தானே கொடுக்கப் போற.. அவிங்க நம்மள கோயில் உள்ளே விட மறுக்கின்றனர். எனவே நான் பட்டாளத்துல சேர்றேன் என ஆங்கிலேயர்களின் பட்டாளத்தில் தனுஷ் சேர்கிறார். பட்டாளத்தில் சேர்ந்து சிறந்த சிப்பாயாக தேர்ச்சியும் பெற்று விடுகிறார்.

ஒரு கட்டத்தில் இந்திய மக்களை சுட்டுக்கொன்று குவிக்க வேண்டும் என கட்டளை இடுகிறது ஆங்கிலேய ராணுவம். தனுஷ் முதலில் செய்ய தயங்கினாலும் பின்னர் கட்டளைக்கு கட்டுப்பட்டு சுற்று கொன்று குவிக்கிறார்.

பின்னர் தான் செய்த தவறுக்காக வருந்தும் தனுஷ் தனக்கு கட்டளையிட்ட தலைமை வீரனை கொன்று விடுகிறார். இதனால் ஆங்கிலேயர்களுக்கு எதிரியாகி விடுகிறார். இதனையடுத்து மில்லர் கேப்டன் மில்லராக மாறுகிறார்.

தலைமறைவான தனுஷை ஆங்கிலேயர்கள் தேடுகின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது? தனுஷ் பிடிபட்டாரா?ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

இளம் வயதிலேயே இரண்டு முறை தேசிய விருது வென்றவர் தனுஷ். ஒவ்வொரு படத்திற்கும் அவரது மெனக்கடலும் அர்ப்பணிப்பும்தான் இந்த உயரத்தை அவரால் எட்ட முடிந்தது. அந்த வகையில் இந்த படத்திலும் தன்னுடைய கடின உழைப்பை கொட்டி கேப்டன் மில்லருக்கு மகுடம் சூட்டி இருக்கிறார்.

பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், இளங்கோ குமரவேல், வில்லனாக Edward Sonnenblick & அதிதி பாலன், சந்தீப் கிஷன், ஜெயபிரகாஷ், ஜான் கொக்கேன், ஸ்வாதி ஆகியோர் கதை ஓட்டத்திற்கு சரியான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர்.

‘ஜெயிலர்’ படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் மோகன்லால் – சிவராஜ்குமார் மாஸாக இருப்பது போல ‘கேப்டன் மில்லர்’ படத்தில் சிவராஜ்குமார் சந்தீப் கிஷன் இருவரும் பட்டையை கிளப்பி உள்ளனர்.

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி.. பிரம்மாண்டத்தை எங்களாலும் கொடுக்க முடியும் என சவால் விட்டுள்ளார்.

கலை இயக்குனர் ராமலிங்கத்திற்கு தனி பாராட்டுக்கள்.. சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை தனது கலை வண்ணத்தில் அழகாக வடிவமைத்து இருக்கிறார். சுதந்திரத்திற்கு முன்பு இருந்த காலகட்டங்களை நாம் பல படங்களில் பார்த்திருந்தாலும் இந்தப் படத்தில் வித்தியாசம் காட்டி கூடுதல் கலையை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம்.

பாடல்களிலும் பின்னணி இசையிலும் அதீத அர்ப்பணிப்பை கொடுத்து இருக்கிறார் ஜிவி பிரகாஷ்.

ராக்கி & சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன். முந்திய இரண்டு படங்களில் தெறிக்க தெறிக்க ரத்த காட்சிகள் இருக்கும். எனவே தன்னுடைய மூன்றாவது படத்தில் அதைவிட அதிகமாகவே ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இந்த அருண் மாதேஸ்வரன்.

அவரது முந்தைய இரண்டு படங்களை உங்களுக்கு பிடித்திருந்தால் நிச்சயம் இந்த படமும் பிடிக்கும். இன்றைய மாடன் மங்கைகள் ஆக்சனை அதிகம் விரும்புவதால் அவர்கள் மத்தியிலும் இந்த படம் நிச்சயம் பாப்புலராகும். முக்கியமாக தனுஷின் ரசிகைகள் இந்த படத்தை கொண்டாடுவார்கள்.

இனி வரும் காலங்களிலாவது அருண் மாதேஸ்வரன் இந்த ரத்த வெறியை கொஞ்சம் கண்ட்ரோல் செய்து படங்களை கொடுத்தால் குடும்ப ரசிகர்களும் அவரது படத்தை நிச்சயம் கொண்டாடுவார்கள்.

இடைவேளை காட்சியும் கிளைமாக்ஸ் காட்சியும் நிச்சயம் தனுஷுக்கும் அருண் மாதேஸ்வரனுக்கும் அவர்களது சினிமா கேரியரில் முக்கியமானதாக இருக்கும்.

கதையை 5 அத்தியாயமாக பிரித்து திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர். கிட்டத்தட்ட மூன்று தோற்றங்களில் தனுஷை காட்டிய விதம் ரசிகர்களுக்கு கூடுதல் சர்ப்ரைஸ்.

ஆக இந்த கேப்டன் மில்லர் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தை திகட்ட திகட்ட கொடுத்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

கேப்டன் மில்லர்

Captain Miller movie review and rating in tamil

மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்..

மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி…

ஒரு கிறிஸ்துமஸ் இரவில் நடக்கும் கதை தான் இந்த மெரி கிறிஸ்மஸ். மும்பை மாநகரம் `பம்பாய்’ என அழைக்கப்பட்ட காலத்தில் இந்த கதை நகர்வதாக காட்டப்படுகிறது.

ஏழு வருட சிறை தண்டனைக்கு பிறகு தனது நன்னடத்தை காரணமாக ஜெயிலில் இருந்து விடுதலை ஆகிறார் விஜய் சேதுபதி. அவரை வரவேற்கிறார் ராஜேஷ். அன்று கிறிஸ்மஸ் திருநாள்.

அன்று எதிர்பாராத விதமாக ஒரு ஹோட்டலில் கத்ரீனாவை அவளின் மகளுடன் சந்திக்கிறார் விஜய்சேதுபதி. பின்னர் தியேட்டருக்கு செல்கின்றனர். அங்கும் அவர்கள் சந்திக்கின்றனர். அதனைத் தொடர்ந்து மெல்ல மெல்ல இருவருக்கும் இடையே நட்பு தொடர்கிறது.

தனது வீட்டில் கணவர் இல்லை என்று சொல்லி வரவழைத்து உபசரிக்கிறார் கத்ரீனா. சில மணி நேரங்களில் மற்றொரு அறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடக்கிறார். இதனால் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

எனவே விஜய் சேதுபதி உதவியை கேட்கிறார் கத்ரீனா. ஆனால் நான் இப்போதுதான் ஜெயில்யிருந்து விடுதலை ஆகி வந்தேன். மீண்டும் போலீஸிடம் சிக்கினால் பிரச்சனையாகும் என்கிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது? கத்ரினாவுக்கு உதவி செய்தாரா விஜய் சேதுபதி.? கணவரை கொன்றவர்கள் யார்.? அவர்களின் நோக்கம் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

விஜய் சேதுபதி, காத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன்
கவின் பாபு மற்றும் பலர்.

கதையின் நாயகன் விஜய்சேதுபதி என்றாலும் கத்ரீனா பெயர் தான் டைட்டில் கார்டில் முதலில் இடம் பெறுகிறது. அதற்குப் பாராட்டு தெரிவிக்கலாம். இதற்கு முன்பு ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் தீபிகா படுகோனவின் பெயர் இடம் பெற்றது. அதை ஷாருக்கான் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படபட பேசாமல் நிறுத்தி நிதானமாக பேசி தன் கேரக்டருக்கு வலு சேர்த்து இருக்கிறார் விஜய்சேதுபதி.. ஆனால் கத்ரீனாவிடம் இருக்கும் பயம் இவர்கள் முகத்தில் கொஞ்சம் கூட இல்லை என்பது ஏன்? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது

தமிழ் வசனங்களுக்கு ஏற்ற உதட்டு அசைவு சிறப்பு. கத்ரீனாவுக்கு டப்பிங் குரல் கொடுத்து இருக்கிறார் தீபா வெங்கட்.. பயம் பதட்டம் ஏக்கம் தவிப்பு தயக்கம் என ஒவ்வொன்றையும் அழகாக உணர்ச்சிப்பூர்வமாக காட்டி நடித்திருக்கிறார் கத்ரீனா.

மகளாக வரும் சிறுமி பரி ஷர்மா. இவருக்கு படத்தின் ஒரு வசனம் கூட கிடையாது. ஆனால் ஒரே ஒரு வசனத்தில் ஒட்டுமொத்த படத்தையும் முடித்துவிட்டு அப்ளாசை அள்ளிச் செல்கிறார் பரி ஷர்மா.

கவின் ஜே.பாபு, ராதிகா, சண்முகராஜன், ராஜேஷ் ஆகியோர் காட்சிக்கும் படத்திற்கும் கூடுதல் பலத்தை கொடுத்துள்ளனர்.

முக்கியமாக போலீஸ் சண்முகராஜன், ராதிகா ஆகியோரின் விசாரணை கண்ணோட்டம் ரசிக்கவும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறது.

ஏழு வருடத்திற்கு முந்தைய பிளாஷ்பேக்கில் கௌரவத் தோற்றத்தில் ராதிகா ஆப்தே வருகிறார்.

டெக்னீசியன்ஸ்…

இயக்குநர் – ஸ்ரீராம் ராகவன்

தயாரிப்பு
டிப்ஸ் ஃபிலிம்ஸ் & மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ்

பெரும்பாலும் வசனங்கள் லைவ் முறையில் படம் ஆக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. ஓரிரு வசனங்கள் சிந்திக்க வைக்கிறது

கத்ரினா தன்னுடைய ஃப்ளாஷ்பேக் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போது.. போட்டோக்களில் நீங்கள் சந்தோஷமாக இருப்பதாகவே தெரிகிறது என்கிறார் விஜய் சேதுபதி.. யாராவது அழுவது போல போட்டோ எடுத்து வைப்பார்களா என்று கேட்கிறார் கேத்ரினா.

இது ஒரு ஹிந்தி படமாக உருவாக்கப்பட்டாலும் தமிழிலும் ரசிக்க முடிகிறது.

விஜய் சேதுபதி, ராதிகா, ராஜேஷ், சண்முகராஜன் ஆகியோரது தமிழ் உச்சரிப்புகள் போல கத்ரீனாவுக்கும் தமிழ் உச்சரிப்புகள் பொருந்துகிறது.

ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன். பூஜா லதா ஸ்ருதி படத்தொகுப்பு. ப்ரீத்தமின் இசையில் யுகபாரதியின் வரிகளில் ‘காணாத காதல்’ பாடல் இதம். டானியல்.பி.ஜார்ஜ் பின்னணி இசையில் ரசிக்க வைக்கிறார்.

பிரதீப் குமார்.எஸ், அப்துல் ஜப்பார், பிரசன்னா பாலா நடராஜன், லதா கார்த்திகேயன் ஆகியோர் வசனம் & திரைக்கதையில் தங்கள் எழுத்து ஆர்வத்தை காட்டி இருக்கிறது.

இது காதல் படமா? திரில்லர் படமா? என்ற குழப்பம் நீடிக்கிறது. ஒரு கிறிஸ்மஸ் இரவில் நடக்கும் கதையை விடிவதற்கு சொல்லி முடித்திருக்கிறார் அந்தாதுன்’ இயக்குநர் ஸ்ரீராம் ராகவன்.

இந்தி மட்டுமல்லாது, தமிழிலும் அனைத்துக் காட்சிகளையும் படமாக்கியிருப்பதால் அதையும் பாராட்டலாம். ஆனால் முன் பாதி நாடகம் பார்ப்பது போன்ற உணர்வை பல காட்சிகள் தருகிறது.

இரண்டாம் பாதியில் வரும் டார்க் ஹுயூமோர் காமெடிகள் ரசிக்க வைக்கிறது.

Merry Christmas movie review and rating in tamil

More Articles
Follows