ஒரு நாள் கூத்து விமர்சனம்

ஒரு நாள் கூத்து விமர்சனம்

நடிகர்கள் : தினேஷ், மியா ஜார்ஜ், ரித்விகா, நிவேதா பெத்துராஜ், பால சரவணன், சார்லி, கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் பலர்.
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு : கோகுல்
படத்தொகுப்பு : விஜே சாபு ஜோசப்
இயக்கம் : நெல்சன் வெங்கடேசன்
பிஆர்ஓ : ஜான்சன்
தயாரிப்பாளர் : கெனன்யா பிலிம்ஸ் ஜெ செல்வகுமார்

 

கதைக்களம்…

தினேஷ் மற்றும் நிவேதா பெத்துராஜ் இருவரும் ஒரே ஐடி கம்பெனியில் பணிபுரிந்து கொண்டே காதலிக்கின்றனர். தன் குடும்பம் செட்டில் ஆனவுடன் திருமணம் என்பதில் உறுதியாக இருக்கிறார் தினேஷ். இவரது நண்பர் பால சரவணன்.

மியா ஜார்ஜ்க்கு நல்ல அந்தஸ்து உள்ள மாப்பிள்ளை வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அவரது வாத்தியார் தந்தை.

28 வயது ஆகியும் ரேடியோ ஜாக்கி என்பதால் ரித்விகாவுக்கு வரன் அமையவில்லை. இந்த தங்கை திருமணத்திற்காக காத்திருக்கிறார் அண்ணன் கருணாகரன். ரித்விகாவுடன் பணிபுரிகிறார் ரமேஷ் திலக்.

இவர்களின் வாழ்க்கையில் நடைபெறவுள்ள அந்த ஒரு நாள் கூத்து கல்யாணம் எப்படி இவர்களை இணைய வைக்கிறது என்பதே இப்படத்தின் கதை.

oru naal koothu movie stills 1

கதாபாத்திரங்கள்…

இதுநாள் வரை தாடி, கைதி, சீவாத தலை முடி என அழுக்காக வந்த, தினேஷ் இதில் படு ப்ரெஷ்ஷாக வந்திருக்கிறார். அதுவே ஒரு பெரிய சேஞ்ச்.

ஆக்ஷன் வரும் அளவுக்கு இவருக்கு காதல் வரவில்லை. படத்தில் உள்ள குடும்ப பாரம் காரணமோ?

மியா ஜார்ஜ்… லட்சுமிகரமான முகம். ஒவ்வொரு மாப்பிள்ளை முன் நிற்பதும் திருமணம் தள்ளிப்போவதும் என ஒரு பெண்ணின் நிஜமான உணர்வை பிரதிபலிக்கிறார்.

oru naal koothu mia

அப்பா என்ன சொன்னாரு? என மாப்பிள்ளை இவரிடம் கேட்கும்போது.. அப்பா எதுவும் சொல்ல மாட்டாரு… என்பதும் நான் வேனுமின்னா வந்து கூட்டிட்டு போ உள்ளிட்ட காட்சிகள் இவரது வலியை உணர்த்துவதாய் உள்ளது.

ரித்விகா.. இந்த ஆர்ஜே கேரக்டரிலும் அசத்தல். கோயிலை சுற்றும்போது மத்தவங்க என்ன நினைப்பாங்க? என்பதை விட நாம எப்படி பார்க்கிறோம் என்பது முக்கியம் என்று கூறும்போது கைதட்டலை அள்ளுகிறார்.

28 வயது ஆனதால் ப்ராக்டிக்கலாய் தப்பு செய்யும் காட்சியில் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

oru naal koothu nivetha

நிவேதா பெத்துராஜ்…. இவருக்கு காதல் கல்யாணம் என இரண்டிலும் ஸ்பேஸ் கிடைத்திருப்பதால் ஸ்கோர் செய்துள்ளார்.

காதலனை விட்டு கொடுக்காமல் பேசுவதும், அப்பாவிடம் காதலனை விட சொல்லி பேசுவதும் இன்றைய பெண்களின் ஒட்டு மொத்த உருவமாய் தெரிகிறார்.

ரமேஷ் திலக்கின் கேரக்டர் நிஜ ஆர்ஜேவை காட்டுகிறது. இவரது முன் அனுபவமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் போல.

இவர்களுடன் கருணாகரன், பால சரவணன், சார்லி உள்ளிட்டோரின் டைமிங் சென்ஸ் காமெடிக்கு படத்திற்கு நிறையவே கைகொடுக்கிறது.

Oru-Naal-Koothu-Movie-Latest-Stills-18

தொழில்நுட்ப கலைஞர்கள்….

அழகே அடியே… பாடல் அருமை என்றால், எப்போ வருவாரோ… என்ற பாடல் அசத்தல். இரண்டும் மனதில் நிற்கிறது.

கோகுலின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. விஜே சாபு ஜோசப் இன்னும் கொஞ்சம் எடிட் செய்திருக்கலாம்.

படத்தின் ப்ளஸ்….

  • பாடல்கள் மிகப்பெரிய பலம். இதுபோன்ற மெலோடி பாடல்கள் கேட்டு ரொம்ப நாளாச்சு. மேள தாள பின்னணி இசையும் சில இடங்களில் ஓகே.
  • கண்களுக்கு விருந்தாகும் கலர்புல்லான ஒளிப்பதிவு.
  • மூன்று அழகான நாயகிகளின் அமைதியான நடிப்பு.

oru naal koothu dinesh bala saravanan

படத்தின் மைனஸ்…

  • ஒவ்வொரு கேரக்டரையும் அடிக்கடி காட்ட வேண்டுமென்பதால், டக் டக் என்று காட்சிகளை மாற்றும்போது கேரக்டர்கள் மனதில் ஒட்ட மறுக்கிறது.
  • சொல்லவேண்டிய விஷயத்தை கொஞ்சம் எளிதாக சொல்லியிருக்கலாம்.
  • ரித்விகாவின் கேரக்டர் மூலம் என்ன சொல்ல வருகிறார்? இயக்குனர் என்பது அவருக்கே வெளிச்சம். மாப்பிள்ளையிடம் கெஞ்சுவதும் பின்பு மறுப்பதும் ஏனோ?

Oru-Naal-Koothu-Movie-Stills-3

எந்த ஒரு கேரக்டரையும் மையப்படுத்தாமல், திருமண பந்தத்தையும் இன்றைய காதலையும் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் நெல்சன்.

எவரிடமும் இவர் உதவி இயக்குனராக பணிபுரியவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

லவ் மேரேஜ் என்றாலும் அரேஞ்ச் மேரேஜ் என்றாலும் எத்தனை விதமான பிரச்சினைகள் என்பதையும் அதை சொன்ன விதத்திலும் தேர்ச்சி பெறுகிறார் இயக்குனர்.

இன்றைய திருமண வரன் தேடலை யதார்த்தமாக காட்டியதற்கு பூங்கொத்து கொடுக்கலாம்.

திருமணம் என்ற இந்த ஒரு நாள் கூத்து… சிலருக்கு ஹாப்பி… சிலருக்கு ஆப்பு..!

Comments are closed.

Related News

மெர்சல் மற்றும் ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில்…
...Read More
இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில், 'அட்டக்கத்தி'…
...Read More