விமல் மீது போலீஸில் புகார் அளித்தார் ‘மன்னர் வகையறா’ பட தயாரிப்பாளர் மகள்

விமல் மீது போலீஸில் புகார் அளித்தார் ‘மன்னர் வகையறா’ பட தயாரிப்பாளர் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விமல் மீது ஏற்கெனவே தயாரிப்பாளர்கள் கோபி, சிங்காரவேலன் மற்றும் திரைப்பட விநியோகிஸ்தர் கங்காதரன் ஆகியோர் பணமோசடி புகார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது விமல் நடிப்பில் ’மன்னர் வகையறா’ என்ற படத்தின் ஆரம்ப தயாரிப்பாளர் மறைந்த திருப்பூர் கணேசன் அவர்களின் மகள் ஹேமா இன்று (25-04-2022) காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விமல் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறியதாவது,

பொருள் : ரூபாய் 1,73,78,000/- திருப்பி தராமல் ஏமாற்றி வரும் நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

திருப்பூரில் எளிய குடும்பத்தில் பிறந்து, இறைச்சி கடைகள் நடத்தி, அதன் பின்னர் சிறிய சிறிய தொழில்கள் செய்து தன்னை ஒரு தொழில் அதிபராக நிலை நிறுத்தி கொண்டவர் மறைந்த என் தந்தை கணேசன். சினிமா மீது தீராத ஆவல் கொண்டிருந்த அவரை மூளைச்சலவை செய்து ” மன்னர் வகையறா ” என்ற திரைப்படத்தை துவக்க வைத்தவர் நடிகர் விமல்.

படத்தின் பட்ஜெட்டை ரூ. 5 கோடி என்றும், ரூ. 1.5 கோடி மட்டும் முதலீடு செய்தால் மீதி தொகையை சினிமா உலகத்திற்குள் கடனாக பெற்று கொள்ளலாம் என்றும் நடிகர் விமல் அளித்த உத்தரவாதத்தை நம்பிய எனது தந்தை சென்னைக்கு வந்து ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து வைத்து கொண்டு பட தயாரிப்பு பணிகளை ஆரம்பித்தார். அப்போதே எங்கள் குடும்பத்திற்குள் கலகம் ஆரம்பமாகிவிட்டது. நானும் எனது தாயாரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் எங்கள் பேச்சை கேட்காமல் விமல் போன்ற மண் குதிரைகளை நம்பி முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டார்.

இனி அவர் விஷயத்தில் நானும் என் விஷயத்தில் அவரும் தலையிட மாட்டோம்.. – விமல்

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டுக்கோட்டையில் படப்பிடிப்பு துவங்கியது. 60 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு, ஆறு மாத காலத்திற்குள் படத்தை வெளியிட்டு விட்டு, பின்னர் சினிமாவிற்குள் கால் வைக்க மாட்டேன் என எனது தந்தையும் எங்களுக்கு உறுதி அளித்ததால் அவர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அங்கேயே தங்கியிருந்து பணிகளை பார்வையிட எனது அம்மாவும் சம்மதித்தார்.

17 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்திருந்த வேளையில், விமலுக்கும் கதாநாயகிக்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக சண்டை வர, இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்ததால் மனம் வெறுத்து போன என் தந்தை அதற்கு மேல் படப்பிடிப்பை தொடர மனமில்லாமல் படப்பிடிப்பை ரத்து செய்ய சொல்லிவிட்டு திருப்பூருக்கு வந்துவிட்டார்.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து என் தந்தையை சந்தித்த விமலிடம் ” உன்னை நம்பி தான் இந்த துறைக்கு வந்து முதலீடு செய்தேன். தனி மனித ஒழுக்கம் இல்லாத உன்ன நம்பி மேற்கொண்டு ரிஸ்க் எடுக்க நான் விரும்பவில்லை. இந்த படம் அப்படியே கிடக்கட்டும். என் நஷ்டத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுகட்டி விடுவேன் ” என்று கூறி மேற்கொண்டு படத்தை தயாரிக்க விருப்பமில்லை என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டார்.

சில நாட்கள் கழித்து அப்பாவை சென்னைக்கு அழைத்த விமல், இந்த படத்தை நம்பி தான் எனது எதிர்காலம் உள்ளது. எனவே படத்தை நானே மேற்கொண்டு தயாரித்து, படத்தை வெளியிட்டு விட்டு, நான் செலவு செய்த தொகை போக மீதமிருக்கும் தொகையில் தங்கள் தொகையை தங்களிடம் கொடுத்து விடுகிறேன் என கூறியதாலும், விமலின் எதிர்காலம் இந்த படத்தில் இருக்கிறது என்பதாலும் விமலின் யோசனைக்கு என் தந்தை ஒப்புகொண்டு 10.03.2016 அன்று ஒப்பந்தம் செய்து கொடுத்தார்.

மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஒப்பந்தத்தை பெற்று கொண்ட பின்பு ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை விமல் படத்தை ஆரம்பிக்காமல், படத்தின் மீது கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்து வந்ததால், ஜூன் மாதம் 15 ஆம் தேதி விமலை சந்தித்து ஒப்பந்தத்தை ரத்து செய்து தரும்படி கேட்டார் அப்பா. அதற்கு மறுத்து விட்டார் நடிகர் விமல்.

இதனால் ஜூன் மாதம் 17 ஆம் தேதி முறைப்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார் எனது தந்தை. திரையுலகுக்கு எனது தந்தை புதியவர் என்பதாலும், விமல் ஒரு முக்கிய பிரமுகர் என்பதாலும் எனது தந்தைக்கு சாதகமான பதில் சங்கத்திலிருந்து வரவில்லை. இதனால் மனம் உடைந்து போன என் தந்தை அமைதியாகிவிட்டார்.

அதன் பிறகு படத்தை தயாரித்து, வெளியீட்டிற்கு விமல் தயாரான போது, விமலை சந்தித்து தான் முதலீடு செய்த தொகையை திருப்பி கேட்டார் அப்பா. விமலிடமிருந்து சாதகமான பதில் வராததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எனது தந்தை (வழக்கு எண் : C.S.No.58/2018)

இந்த வழக்கின் காரணமாக படத்தின் தொலைக்காட்சி உரிமைக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் 10.04.2018 ஆம் ஆண்டு எனது தந்தையுடன் சமரசம் செய்து கொண்ட நடிகர் விமல் பணத்தை திருப்பி தந்துவிடுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் Memorandum of Settlement (ஆவண எண் : 7782/2018) தாக்கல் செய்தார். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி எந்த தொகையையும் இதுவரை விமல் திருப்பித்தரவில்லை. பணத்திற்கு ஈடாக தருவதாக சொன்ன கால்ஷீட்டையும் தரவில்லை.

இந்நிலையில் 10.04.2018 ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தப்படி படத்தின் மற்ற மொழி டப்பிங் உரிமைகள் என் தந்தை வசம் வந்துவிட்டது. ஆனால் என் தந்தைக்கு தெரியாமல் 21.06.2019 அன்று படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வேறொருவருக்கு விற்று எங்களை மோசடி செய்துவிட்டார் நடிகர் விமல்.

எனவே ஐயா அவர்கள் மோசடி செய்த நடிகர் விமல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு எங்களுக்கு சேர வேண்டிய ரூபாய்.1,73,78,000/- தொகையை பெற்றுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

Mannar Vagaiyara producer’s daughter complaint againt actor Vimal

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் மகனிடம் மன்னிப்பு கேட்டது ‘பயணிகள் கவனிக்கவும்’ படக்குழு

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் மகனிடம் மன்னிப்பு கேட்டது ‘பயணிகள் கவனிக்கவும்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷக்திவேல் இயக்கத்தில் விதார்த், லட்சுமி ப்ரியா சந்திரமவுலி, கருணாகரன், மசூம் சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பயணிகள் கவனிக்கவும்’.

இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் அடுத்த வாரம் ஏப்ரல் 29ம் தேதி வெளியாகிறது.

இதனிடையே, ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற தலைப்பு குறித்து மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் குற்றம் சாட்டியிருந்தார்.

தன்னுடைய அப்பாவின் புகழ் பெற்ற நாவலின் தலைப்பு தான் , ‘பயணிகள் கவனிக்கவும்’.

அதை படத்திற்காக வைக்க தங்களிடம் எந்தவித அனுமதியையும் பெறவில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

நெட்டிசன்களின் பொறுப்புணர்வு.; மலையாளத்தில் ‘விக்ருதி’ தமிழில் ‘பயணிகள் கவனிக்கவும்’ என்றானது

இதைத் தொடர்ந்து ஆஹா ஓ.டி.டி க்கும், ஆல் இன் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்திற்கும் விளக்கம் கேட்டு பாலகுமாரன் குடும்பத்தின் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து இன்று(ஏப்., 25) காலை இயக்குனர் எஸ்பி சக்திவேல் மற்றும் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா இருவரும் பாலகுமாரனின் வீடு தேடி சென்று அவர்களது விளக்கத்தை கொடுத்து, மன்னிப்பும் கேட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த பிரச்னையை சுமூகமாக பேசி முடித்துக் கொண்டதாக பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.

Payanigal Gavanikkavum title issue is over

ஆண்கள் என்னை மன்னிச்சிடுங்க.; ஆண்கள் ஜாக்கிரதையாக இருக்கனும்.. – நடிகர் நாசர்

ஆண்கள் என்னை மன்னிச்சிடுங்க.; ஆண்கள் ஜாக்கிரதையாக இருக்கனும்.. – நடிகர் நாசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லயோலா கல்லூரி கலை நிகழ்ச்சி விழாவில் நடிகர் சங்க தலைவர் நடிகர் நாசர் பேச்சு

இந்த விழாவிற்கு காரணமாக இருக்கின்ற அனைவருக்கும் நன்றி. ஏனென்றால், 2 வருடங்களாக வீட்டிற்குள்ளேயே இருந்தோம்.

இன்று இவ்வளவு பெரிய விழா குதூகலத்துடனும், உற்சாகத்துடனும் நடக்கிறது.

லயோலா கல்லூரிக்கும் எனக்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது. பள்ளி படிப்பு முடிஞ்சதும் எல்லோருக்கும் லயோலா கல்லூரியில் சேர வேண்டும் என்று தான் தோன்றும்.

ஆனால், அதற்கு அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமே. ஆகையால், அந்த கொடுப்பினை எனக்கில்லை.

மேலும், விஸ்காம் என்கிற பட்டபடிப்பு தமிழ் நாட்டில் மூளை முடுக்கிலும் இன்று இருக்கிறது.
ஆனால், அது முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது லயோலா கல்லூரியில் தான்.

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு இங்கு தான் நடைபெற்றது. எனக்கு பேச வராது. ஆனால், பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே இருப்பேன். ஆகையால், ஒரு பத்து கேள்விகள் கேளுங்கள். அதற்கு பதில் சொல்லிவிட்டு போய் விடுகிறேன்.

நான் பேசுவதைக் கேட்பது உங்களுக்கு பிடிக்கும். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக இந்த விழாவிற்காக ஆடி பாடி களைத்திருப்பீர்கள். ஆகையால், கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி விட்டு செல்கிறேன்.

கேள்வி : 37 வருடமாக திரைத்துறையில் உள்ளீர்கள் அது எப்படி சாத்தியமாக உள்ளது?

எந்தத் துறையாக இருந்தாலும் சரி நாம் நினைத்தால் தான் ஓய்வு என்பது. இங்கிருக்கும் ஆசிரியர்களும் கிட்டதட்ட 40 ஆண்டுகள் கழித்து தான் ஓய்வு பெறுவார்கள்.

நான் இந்த துறையை ஒரு வேலையாக நினைத்து தான் வந்தேன். இன்றும் நடிப்பை ஒரு வேலையாக செய்து கொண்டிருக்கிறேன். மற்ற வேலைகளை விட எனக்கு சம்பளம் அதிகம் என்பதால் எனது முழு முயற்சியையும் வெளிப்படுத்துகிறேன்.

நிறைய குழந்தைகள் இந்த சினிமாத் துறைக்கு வருவதற்கு ஆசைப்படுகிறார்கள். இன்றைய காலத்தில் சினிமாத் துறை என்பது மற்ற துறைகளை விட மிகவும் ஈர்ப்பு மிக்க ஒரு துறையாக உள்ளது.

நான் சினிமாவிற்கு வரும் பொழுது 1984ல் சினிமாவில் ஆவணப்படம், குறும்படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கு கிடையவே கிடையாது.

ஏனென்றால், அது ஒரு பெரிய செயல் முறை. பொருட்செலவு மிகவும் கடினம். ஒரு புகைப்படம் எடுத்தால் கூட அதை நெகடிவில் இருந்து ப்ரிண்ட் எடுத்து மாற்ற வேண்டும் என்பது போல் பல சவால்கள் இருந்தது.

ஆனால், இப்போது அப்படி இல்லை. எந்த ஒரு குறைந்த விலை கேமராவில் கூட ஒரு படத்தை எடுக்க முடியும்.

இதில் இரண்டு விஷயங்கள் உள்ளது, ஒன்று நீங்கள் இதை வேலையாக நினைத்து சினிமாத் துறையில் பயணிக்கலாம். அல்லது, இதை ஆசையாக நினைத்தால் நீங்கள் இப்போது படிக்கும் படிப்பிற்கு ஏற்றவாறு ஒரு பணியில் அமர்ந்துவிட்டு நீங்கள் உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ளலாம். குறும்படம் எடுக்கலாம், ஆவணப்படம் எடுக்கலாம், அப்போதும் சாதிக்கலாம்.

இல்லையெனில், நீங்கள் எல்லாத்தையும் விட்டு விட்டு சினிமாவிற்கு வந்தீர்களேயானால் நான் பரந்த கைகளுடனும் பெரிய இதயத்துடனும் வரவேற்கிறேன். ஏனென்றால், இந்த துறைக்கு நிறைய திறமையாளர்கள் தேவை, புதிய யோசனைகள் தேவை.

சினிமாத் துறைக்கு வர ஆசைப்பட்டால் அதற்குண்டான படிப்பை படித்து விட்டு வாருங்கள். படித்தவர்கள் சினிமாவிற்கு வருவது வேறு.

எனக்கு தலைவலி வந்துவிட்டது என்றால் நான் ஒரு வக்கீலிடம் சென்று மாத்திரை கொடுங்கள் என்று கேட்க முடியாது. மருத்துவரிடம் தான் சென்று பார்க்க வேண்டும். அதனால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறைக்கு ஏற்றவாறு படியுங்கள்.

கேள்வி : இதுவரை நீங்கள் எங்கும் குறிப்பிடாத கேள்வி!
தங்களின் பின்புலமாக உங்கள் மனைவி இருப்பதை பற்றி !!?

என் மனைவி தான் என் அலுவலகத்தை பார்த்துக் கொள்கிறார். அவர் சைக்காலஜி படித்தவர். இருப்பினும், எல்லாத்தையும் எனக்காக விட்டுவிட்டு என் அலுவலகத்தை பார்த்துக் கொள்கிறார்.

என் குழந்தைகளையும் பார்த்துக் கொள்கிறார். நான் சம்பாதித்ததை கொண்டு வருவதை விட, சம்பாதித்தாலும் அந்த பணத்தை தயாரிப்பதில் போட்டுவிட்டு பிரச்சனையைத் தான் கொண்டு வருவேன். அது அனைத்தையும் என் மனைவி கமிலா தான் தீர்த்து வைப்பார்.

ஆண்கள் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். ஏனென்றால், ஒரு பொறுப்பை ஒரு பெண்ணிடம் கொடுத்தால் ஆணை விட மிக சிறப்பாக செய்வார்கள் என்று நான் கண்கூடாக பார்த்த அனுபவம்.

இங்கு இவ்வளவு பெண் குழந்தைகளை பார்க்கும் போது நம் நாடு முன்னேறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கு எவ்வித கவனச்சிதறலும் இருக்காது. அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை முடிப்பதற்காக தங்களின் உயிரையும் கொடுப்பார்கள்.

நான் ஏன் பெண்களை பற்றி பேசுகிறேன் என்றால், நான் சென்ற வாரம் தான் சண்டிகர் மாநிலத்திலிருந்து சென்னை வந்தேன். நான் வந்த விமானத்தை ஓட்டியது ஒரு பெண். அதே போல், வடபழனியை தாண்டும் வேளையில் ஆட்டோ ஓட்டும் ஒரு பெண்மணி ” என்னா சார் நல்லாருக்கீங்களா?” என்று கேட்டார்..

மிகவும் சந்தோஷமாக இருந்தது. இது பெண்களின் காலமாக மாறி விட்டது. ஆண்கள் சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அனைத்து நிகழ்ச்சிகளும் மிகவும் நன்றாக இருந்தது. அதிலும் கடைசி மூன்று நிகழ்ச்சியும் ஆகச்சிறப்பாக இருந்தது. அதற்கு பின்னால் எவ்வளவு உழைப்பை இருந்தது. எவ்வளவு நேரம் செலவழிக்கப்பட்டது என்பதை என்னால் கணிக்க முடிந்தது.

முதல், இரண்டு , மூன்று என பரிசு பெறுவது முக்கியம் இல்லை. இதில் பங்களிப்பது தான் வழ்க்கையில் சிறந்த தருணம். நீங்கள் பயிற்சிக்காக செலவழித்த நேரம் தான் முக்கியம். போட்டி என்பது வேறு. நாம் செயல்முறையை ரசிப்போம்.

உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. மீண்டும் மீண்டும் நாம் இது போன்ற நிகழ்ச்சிகளில் சந்திப்போம். பொது இடங்களில் முகக் கவசம் அணியவில்லை என்றால் ரூ.500/- அபராதம் என்றார்கள். இங்கு இருக்கும் கூட்டத்திடம் ரூ.500/- வசூல் செய்தால் அது பெரிய தொகையாக இருக்கும். நம் அனைவரும் எப்போதும் பாதுகாப்பாக இருப்போம். அரசு சொல்லும் அறிவுறுத்தலை நாம் அனைவரும் கடைப்பிடிப்போம்.

நடிகர் ஜீவாவுடன் இந்த மேடையை பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி. ஒரு அப்பாவும் மகனும் ஒரு மேடையில் அமர்ந்திருப்பது போன்று தான் இது. ஜீவாவின் முதல் படத்தின் படப்பிடிப்பின் போது என்னை பார்க்க வந்தார். அவரை நான் வாழ்த்துவேன் என்று எதிர்பார்த்தார். ஆனால், நான் “தயாரிப்பாளரின் மகன் என்றால் நடிக்க வந்துவிடுவீர்களா?” என்று கேட்டேன் அவர் அதிர்ச்சி அடைந்து என்னைப் பார்த்தார்.

அதன் பின் நான் அவருக்கு சில அறிவுறுத்தலை சொன்னேன். சில புத்தகங்களை படிக்க சொன்னேன் அவர் அது எதையும் மதிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர் அது அனைத்தையும் செய்தார். லயோலா கல்லூரி மாணவர்கள் படிப்பதை போல் அவர் படித்தார். இன்று அவர் ஒரு பெரிய நடிகனாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

Actor Nassar speech at loyola college event

தயாரிப்பாளர் மகன்னா நடிக்க வந்துடுவீயா..? ஜீவாவிடம் நாசர் ‘நச்’ கேள்வி

தயாரிப்பாளர் மகன்னா நடிக்க வந்துடுவீயா..? ஜீவாவிடம் நாசர் ‘நச்’ கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லயோலா கல்லூரியில் நடந்த கலை விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜீவா கலந்து கொண்டு பேசும்போது…

“நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வளவு கூட்டத்தை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த சில வருடங்களாக திரையரங்குகளில் கூட இவ்வளவு கூட்டம் இல்லை.
மேடையில் இருந்த அனைத்து பிரமுகர்களுக்கும் நன்றி.

லயோலா கல்லூரியில் இருப்பது எப்போதுமே ஒரு மகிழ்ச்சியான தருணமே. பல ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்துள்ளேன்.

எனது முதல் பட நேரத்தில் இங்கு வந்தேன். அப்போது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. காக்க காக்க படம் வெளியான சமயம் அது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆகிவிட்டன.

உங்களிடம் இவ்வளவு அழகான கட்டமைப்பு உள்ளது. நான் இங்கு உள்ள கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடியுள்ளேன்.

பல ஜாம்பவான்களையும் சாதனையாளர்களையும் உருவாக்கிய கல்லூரி இது. சூர்யா சார், விஜய் சார், விஷால், உதயநிதி போன்று பலரை உருவாக்கிய இந்த கல்லூரியில் என்னை ஒரு விருந்தினராக அழைத்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

நாசர் சாரை பார்த்தவுடன் நான் பேச வந்ததை மறந்துவிட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றியதற்கு பெருமைப் படுகிறேன். அவர் தான் எனக்கு வழிகாட்டி. என்னுடைய முதல் படத்திலேயே எனக்கு மாமனாராக நடித்திருந்தார். அப்போது நான் ஒரு தயாரிப்பாளரின் மகனாக தான் அறிமுகமானேன்.

அவர் என்னைப் பார்த்து “தயாரிப்பாளர் மகன் என்றால் நடிக்க வந்து விடுவீயா? என்றும், ஏன் நடிக்க வந்தீர்கள்” என்றும் கேட்டார். அந்த எளிமையான கேள்விக்கு என்னிடம் இதுநாள் வரை பதில் இல்லை.

நீங்கள் எந்தத் துறைக்குச் சென்றாலும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டி மற்றும் ஒரு குரு தேவை. அந்த வகையில் எனக்கு நிறைய குரு கிடைத்தார்கள். அந்த வகையில் என் முதல் குரு என்று சொன்னால் அது நாசர் சார் தான். இன்று இந்த மேடையை அவருடனும் பகிர்ந்து கொண்டிருப்பதற்கு நான் பெருமைப் படுகிறேன்.

நீங்கள் எனக்கு கற்பித்த அனைத்து சிறந்த பாடங்களுக்கும் நன்றி சார். இந்த இடத்தில் உங்களுக்கு நன்றி சொல்வது ஒரு சிறந்த வாய்ப்பாக எண்ணுகிறேன்.

நான் பொறியியல் கல்லூரி மாணவனாக பல படங்கள் நடித்திருக்கிறேன். நீதானே என் பொன் வசந்தம், நண்பன், போன்ற படங்கள். ” ஹொவ் டஸ் எ இண்டக்க்ஷன் மோட்டர் ஸ்டார்ட்ஸ்” காட்சி எல்லாம் இங்கு தான் நடித்தேன்.

நான் என்ஜினியர், டாக்டராக நடிப்பது அதிர்ஷ்டம் என்று சொல்வேன். ஆனால், நான்கு வருட அனுபவத்தைப் பெற்ற நீங்கள் என்னை விட அதிர்ஷ்டசாலிகள். நீங்கள் செய்ய வேண்டிய பணிகள், தேர்வுகள் இன்னும் பல இருக்கின்றது.

அதனைத் தவிர நீங்கள் உருவாக்கும் நட்பு மற்றும் நினைவுகள் எப்போதும் மங்காது.

உத்வேகத்துடன் இருங்கள். பலரை ஊக்குவியுங்கள், நன்றாக இருங்கள், என்னிடம் பல மேற்கோள்கள் உள்ளன. அவற்றில் எனக்கு பிடித்த இரண்டினை படிக்கிறேன்.

” THERE IS NO COMPETITION, THAT IS VIEW AS A VIEW” இது தான் நான் பின்பற்றும் மந்திரம்.

மற்றொன்று ” USE YOUR ENERGY TO CREATE NOT TO DESTROY” . இறுதியாக ” STOP TRYING TO BE LIKED BY EVERYBODY, EVEN YOU DONT LIKE EVERYBODY “.

உங்களிடம் பணம் இருக்கிறது, உங்களிடம் நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால், நான் நினைக்கக் கூடிய மிகவும் மதிப்புமிக்க விஷயம் ஆற்றல். சிறந்த ஆற்றல் உள்ளவர் எதையும் சாதிக்க முடியும். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. கிரிக்கட்டர் சச்சின் சார் சொல்வது போல், என்னுடைய சிறந்த படங்கள் இன்னும் வரவிருக்கிறது. முந்தைய படங்களை விட வரவிருக்கும் படங்களில் உங்களை மேலும் மகிழ்விக்கவுள்ளேன். அதற்கும் உங்களின் ஆதரவு தேவை. நன்றி” என்றார்.

Actor Jiiva shared working experience with Naasar

நெட்டிசன்களின் பொறுப்புணர்வு.; மலையாளத்தில் ‘விக்ருதி’ தமிழில் ‘பயணிகள் கவனிக்கவும்’ என்றானது

நெட்டிசன்களின் பொறுப்புணர்வு.; மலையாளத்தில் ‘விக்ருதி’ தமிழில் ‘பயணிகள் கவனிக்கவும்’ என்றானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விதார்த் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது.

இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது இணையப்பக்கத்தில் வெளியிட்டனர்.

இயக்குநர் எஸ். பி. சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’.

இந்த திரைப்படத்தில் நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எஸ். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷாம்நாத் நாக் இசை அமைத்திருக்கிறார்.

மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ் பதிப்பான ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரப்படும் செய்தி மற்றும் புகைப்படங்கள் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையாக வைத்து இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் பொறுப்புணர்வு குறித்தும் இதில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

இது போன்ற தரமான படைப்புகளைத் தொடர்ச்சியாக தேர்வு செய்து ‘ஆஹா ஒரிஜினல்ஸ்’ படைப்பாக தங்களின் பிரத்யேக பார்வையாளர்களுக்காக வெளியிடுகிறது.

ஆஹா ஒரிஜினல்ஸின் ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. சமூக வலைத்தளங்களைப் பற்றிய திரைக்கதை என்பதால் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு இணையவாசிகளிடத்திலும், பார்வையாளர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே திரையரங்குகளில் வெளியாகி வெற்றியைப் பெற்ற ‘செல்ஃபி’, ‘மன்மத லீலை’ போன்ற திரைப்படங்களும்,‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, பார்வையாளர்களின் பேராதரவைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Payanigal Gavanikkavum Departs Significantly from the Malayalam Original ‘Vikruthi’ says director

‘தளபதி 66’ படத்தில் விஜய்க்கு அண்ணனாகும் எக்ஸ் சாக்லேட் பாய்

‘தளபதி 66’ படத்தில் விஜய்க்கு அண்ணனாகும் எக்ஸ் சாக்லேட் பாய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்.

டைட்டில் இதுவரை வைக்கப்படாத காரணத்தினால் தற்காலிகமாக ‘தளபதி 66’ என அழைக்கப்பட்டு வருகிறது.

பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை ஆகிய குடும்ப படங்களைப் போல் இது உருவாகி வருகின்றது.

இப்படத்தை தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்கிறார்.

இதில் விஜய் ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார்.

நன்றி மறப்பது நன்றன்று.. விஜய்யால் வந்த லாபத்தை மறந்துட்டீங்களா.? பிரமுகர் குமுறல்

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கப்படவுள்ளது.

இந்த நிலையில் தளபதி 66 படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்க ஷ்யாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் 1980 களில் பிரபலமான நடிகர் மோகனை இந்த கேரக்டரில் நடிக்க அணுகியதாக சில ஊடகங்களில் பொய் தகவல் வெளியானது. அந்த செய்தியின் உண்மையை நாம் Filmistreet தளத்தில் பார்த்தோம்.

சில வருடங்களுக்கு முன் நடிகர் ஷ்யாம் ரசிகைகளின் சாக்லேட் பாயாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Shyam will be joining hands with Vijay

More Articles
Follows