விமல் மீது கடும் நடவடிக்கை எடுக்கனும்.; கமிஷனர் அலுவலகத்தில் சிங்காரவேலன் புகார் மனு

விமல் மீது கடும் நடவடிக்கை எடுக்கனும்.; கமிஷனர் அலுவலகத்தில் சிங்காரவேலன் புகார் மனு

தன் மீது பொய் புகார் கொடுத்த நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், தனக்கு விமல் தரவேண்டிய பணத்தை பெற்று தரகோரியும் இன்று (22-04-22) காலை 11 மணிக்கு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் புகார் மனு அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து புகார் மனு நகலை அளித்தார்.

அதில்,

பொருள் : ரூபாய் 1.5 கோடியை திருப்பி தராமல் ஏமாற்றி வரும் நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
வணக்கம்.

” மெரினா பிக்சர்ஸ் ” என்ற பெயரில் திரைப்பட விநியோக நிறுவனம் துவங்கி, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ” லிங்கா “, விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ” புறம்போக்கு ” உள்ளிட்ட சில படங்களை விநியோகம் செய்துள்ளேன். இந்நிலையில் திரைப்பட விநியோகம் குறித்து சில விளக்கங்களை பெறுவதற்காக 2016 ஆம் ஆண்டு நடிகர் விமல் என்னை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் நெருக்கமான நட்பு உருவானது.

அந்த சமயத்தில் அவரது நடிப்பில் வெளியான படங்களான ” நேற்று இன்று “, “ இஷ்டம்” , “ புலிவால் ” , “ ஜன்னல் ஓரம் ” ஒரு ஊருல இரண்டு ராஜா ” ” காவல் ” அஞ்சல ” மாப்பிளை சிங்கம் ” ஆகிய படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணியதாலும், அவருக்கு மார்க்கெட் இல்லாததாலும் விமலை வைத்து படம் தயாரிக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் யாரும் முன்வராததாலும் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த அவர் திருப்பூரை சேர்ந்த கணேசன் என்ற தயாரிப்பாளரால் துவக்கி பாதியில் கைவிடப்பட்ட ” மன்னர் வகையறா ” என்ற படத்தை மேற்கொண்டு தயாரிக்க இருப்பதாகவும், அதற்கு பண உதவி தேவை என்றும் கேட்டு கொண்டார் . நானும் என் நண்பர் கோபியை அறிமுகம் செய்து வைத்து ரூ. 5 கோடி பணம் கடன் வாங்கி கொடுத்தேன்.

இந்நிலையில் 30.08.2017 ஆம் ஆண்டு சாலிகிராமத்திலுள்ள சிகரம் மினி ஹாலில் நடந்த நடிகர் விமலின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு என்னை விருந்தினராக அழைத்திருந்தார்.

விமலின் ‘குலசாமி’-க்கு வசனம் எழுதி கொடுத்த விஜய்சேதுபதி

அந்த நிகழ்ச்சியில் ” களவாணி – 2 ” என்ற படத்தை தான் தயாரிக்க இருப்பதாக மேடையில் அறிவித்தார். அப்போது களவாணி படத்தின் இயக்குநர் சற்குணமும் உடன் இருந்தார்.

அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி என்னை சந்தித்த நடிகர் விமல் ” களவாணி – 2 ” படத்தின் ஒட்டு மொத்த விநியோக உரிமையை வாங்கி கொள்ளுமாறும், குறுகிய காலத்தில் படத்தை முடித்து தந்து விடுவதாகவும் கூறியதையடுத்து அக்டோபர் 14 ஆம் தேதி அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ரூ. 1.5 கோடியை முன்பணமாக கொடுத்தேன்.

ஆனால் என்னிடம் வாங்கிய பணத்தை வைத்து ” களவாணி – 2 ” படத்தின் தயாரிப்பு பணிகளை துவங்க வில்லை.

ஒரு கட்டத்தில் ” களவாணி – 2 ” படத்தை இயக்குநர் சற்குணம் தயாரிக்க இருப்பதாகவும், என்னிடம் முன்பணமாக பெற்ற ரூ. 1.5 கோடியை பட வெளியீட்டிற்கு முன்பு, தனக்கு வழங்கப்பட இருக்கும் சம்பளத்தின் மூலம் கொடுத்து விடுவதாக உறுதி கூறியதை நம்பி நானும் அமைதி காத்தேன்.

‘ களவாணி – 2 ” படத்தின் வெளியீட்டு தேதி உறுதியான நிலையில் நடிகர் விமலிடமிருந்து எனக்கு வர வேண்டிய ரூ. 1.5 கோடி பணம் வராததால், என் அலுவலக ஊழியரும், தயாரிப்பு மேற்பார்வையாளருமான கமரன் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ” களவாணி -2 ” பட வெளியீட்டிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு (வழக்கு எண் : C.S.No. 250/ 2019) பெற்றேன்.

இதனால் படத்தின் தயாரிப்பாளர் சற்குணம் என் மீது சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்தார். அந்த புகாரை விசாரித்த அதிகாரிகளிடம் நான் வைத்திருந்த ஆவணங்களை காட்டி, களவாணி 2 படத்தின் காப்பி ரைட் உரிமை என்னிடம் உள்ளது என்பதை விளக்கிய போது, அதன் உண்மைத் தன்மையை புரிந்து கொண்ட காவல் அதிகாரிகள், நடிகர் விமலை உடனடியாக விசாரணைக்கு வரும்படி அழைத்தனர்.

உடனடியாக ஒரு அரசியல் பிரபலத்தை தொடர்பு கொண்ட நடிகர் விமல், எனக்கு தர வேண்டிய பணத்தை செட்டில் செய்து விடுவதாகவும், பட வெளியீட்டிற்கு உதவும் படியும் கேட்டதால் 13.05.2019 அன்று சமரசத்திற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்திலும் இருவரும் கையெழுத்திட்டோம்.

இந்த செய்தி அன்றைய நாளிதழ்களில் புகைப்படத்துடன் வெளியானது.

அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் எனக்கு தர வேண்டிய பணத்தை நடிகர் விமல் தராததால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்து, புகாரின் அடிப்படையில் நிர்வாகிகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் எனக்கு சேர வேண்டிய ரூ. 1.5 கோடியை உரிய வங்கிவட்டியுடன் திருப்பித் தந்து விட வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியதன் அடிப்படையில் ரூ.2.70 கோடிக்கான காசோலையை (காசோலை எண் :307204 ) நடிகர் விமல் என்னிடம் வழங்கினார்.

அதனை வங்கியில் செலுத்திய போது அந்த காசோலை உரிய பணமின்றி பவுன்ஸ் ஆகிவிட்டது. இதனால் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகவும், பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றுவதற்காகவும், என் நண்பர் கோபி என்பவர் நடிகர் விமல் மீது கொடுத்துள்ள ரூ. 5 கோடி மோசடி புகாரை திசை திருப்புவதற்காகவும் நடிகர் விமலை நான் ஏமாற்றிவிட்டதாக பொய்யான புகாரை தங்களிடம் கொடுத்ததோடு மட்டுமில்லாமல், தவறான, அவதூறான கருத்துக்களை ஊடகங்களில் பரப்பி வருகிறார்.

எனவே ஐயா அவர்கள் நடிகர் விமல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், எனக்கு சேர வேண்டிய தொகையை பெற்று தரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

நன்றி

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Producer Singaravelan Complaint against Actor Vimal at commissioner office

ஆதிராஜன் இயக்கத்தில் ஹரிப்பிரியா நடிக்கும் த்ரில்லர் படம் ‘மாஸ்க்’

ஆதிராஜன் இயக்கத்தில் ஹரிப்பிரியா நடிக்கும் த்ரில்லர் படம் ‘மாஸ்க்’

சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘அருவா சண்ட’ , இளையராஜா இசையில் ‘நினைவெல்லாம் நீயடா’, படங்களை இயக்கியிருக்கும் ஆதிராஜன் தன்னுடைய கோல்டன் மேஜிக் க்ரியேட்டர்ஸ் பட நிறுவனத்தின் மூலம் எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘மாஸ்க்’.

சமீபத்தில் மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மைத்துனரும் சிறுவயதிலேயே தேசிய விருது பெற்றவருமான விஜய ராகவேந்திரா இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.

தற்போது சசிகுமாருடன் “காமன் மேன்” படத்தில் நாயகியாக நடித்து வருபவரும், தெலுங்கு கன்னட திரையுலகின் முன்னணி நடிகையுமான ஹரிப்பிரியா கதாநாயகியாக நடிக்கிறார்.

மாஸ்க்கில் நடிப்பிலும், கவர்ச்சியிலும் வேறுவிதமான ஹரிப்ரியாவைப் பார்க்கலாம்.

தென்னிந்திய மொழிப் படங்களில் பிரபலமான மேக்னா நாயுடு ஒரு பாடலுக்கு அசத்தலாக நடனமாடியிருக்கிறார்.

மற்றும் ஐஸ்வர்யா, விஷால் ஹெக்டே, மது உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.

பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் ராஜேஷ் கே நாராயன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

‘சிலந்தி’ மற்றும் சில தெலுங்கு படங்களுக்கு இசையமைத்த எம் கார்த்திக் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

குறிப்பாக, பின்னணி இசையில் ஒரு மாயாஜாலத்தையே நிகழ்த்தியுள்ளார் எனலாம்.

இந்தியா முழுவதும் வசூலை வாரிக் குவித்த “கே ஜி எஃப்” படத்தின் எடிட்டர் ஸ்ரீகாந்த் கவுடா இப்படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

ஐ. ராதிகா, கலைக்குமார் நடனக் காட்சிகளை அமைக்க, மாஸ் மாதா சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

சசிகுமாருக்கு ஜோடியாக்க மீண்டும் ஹரிப்பிரியாவை தமிழுக்கு அழைக்கும் சத்யசிவா

மோகன்லாலின் “மரைக்காயர்” உட்பட ஏராளமான படங்களுக்கு ஒலிக்கலவை செய்த எம் ஆர் ராஜா கிருஷ்ணன் இப்படத்தின் மிக்சிங் பணிகளைக் கவனிக்கிறார்.

பாடல்களை சினேகன், ஆதிராஜன் எழுதியுள்ளனர்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

“மாஸ்க்” படத்தின் கதைக்களம் பற்றி இயக்குநர் ஆதிராஜனிடம் கேட்டபோது, “சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர், மதுரை போன்ற இடங்களில் ஒரே மாதிரியாக மர்மமான முறையில் இளம் பெண்கள் கொல்லப்படுகிறார்கள்.

அது கொலையா?!தற்கொலையா?! இல்லை அமானுஷ்ய சக்தியின் ஆட்டமா? என்று முடிவு செய்ய முடியாமல் காவல்துறை தடுமாறுகிறது.

தீவிரமாக விசாரிக்கும்போது அதன் பின்னணியில் இருக்கும் காரணம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

பெண்களுக்கு தரப்படும் அதீத சுதந்திரம் அவர்களை எப்படிப்பட்ட சிக்கலில் மாட்டி விடுகிறது என்ற கருத்தை மையமாக வைத்து விறுவிறுப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

கிளைமாக்ஸ் யூகிக்க முடியாத கோணத்தில் நிறைவுறும்..

இப்படத்தில் ஆறு டிஜிட்டல் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு சென்னை, பெங்களூர், மைசூர், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

த்ரில்லர் பட ரசிகர்களுக்கு தீனி போடும் படமாக உருவாகியிருக்கிறது “மாஸ்க்” என்றார் ஆதிராஜன்.

Director Adhi Rajan’s next thriller film is titled Mask

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்று உரையாற்றிய ராதிகா சரத்குமார்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்று உரையாற்றிய ராதிகா சரத்குமார்

திரைத்துறை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் பல்லாண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான ராதிகா சரத்குமார் தனது சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார்.

தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்.

அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு அப்புறம் கம்ப்ளைன்ட் பண்ண கூடாது; வரலட்சுமிக்கு ராதிகா ஆதரவு

இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, ராதிகா அங்கு உரையாற்றியும் இருக்கிறார்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளா ராதிகா சரத்குமார்…

“இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம்.

இவ்விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி,” என்று கூறியுள்ளார்.

Radikaa Sarathkumar receives award for her achievements in the UK Parliament

கைக்குழந்தையுடன் ‘டாடா’.; கவின் உடன் கைகோர்த்த ‘பீஸ்ட்’ பட நடிகை

கைக்குழந்தையுடன் ‘டாடா’.; கவின் உடன் கைகோர்த்த ‘பீஸ்ட்’ பட நடிகை

‘நட்புனா என்னானு தெரியுமா’ & ‘லிஃப்ட்’ படங்களின் மூலம் பெரிய திரை ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் கவின்.

இவரின் அடுத்த படத்திற்கு ‘டாடா’ என டைட்டில் வைத்துள்ளனர்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்க, ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார்.

எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.

‘ஆகாஷ்வாணி’… செய்திகள் வாசிப்பது FILMISTREET..: கவின் ரசிகர்களுக்கு ‘ஆஹா’ செய்தி

இதில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார்.

‘முதல் நீ முடிவும் நீ’ புகழ் ஹரிஷ் மற்றும் ‘வாழ்’ புகழ் பிரதீப் ஆண்டனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

நடிகர் கவின் ட்விட்டரில் பகிர்ந்து, ”தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கைக் குழந்தையுடன் கவின் இருக்கிறார்.

Kavin and Aparna Das joins for Dada

‘புஷ்பா’ புகழ் அல்லு அர்ஜுன் செயலை பாராட்டிய பாமக அன்புமணி

‘புஷ்பா’ புகழ் அல்லு அர்ஜுன் செயலை பாராட்டிய பாமக அன்புமணி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் சமீபத்தில் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று பெரும் வசூலை ஈட்டியது.

அல்லு அர்ஜுனிடம், முன்னணி புகையிலை நிறுவனம் அவர்களது விளம்பர படத்தில் நடிக்க அழைத்துள்ளனர்.

அந்த விளம்பர படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு பல கோடி சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால் புகையிலை விளம்பரப் படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் அல்லு அர்ஜுனின் இந்த செயலை பாராட்டி பாமக இளைஞரணி தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, புகையிலை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க பெருந்தொகையை ஊதியமாகத் தருவதாக ஆசை காட்டப்பட்ட போதிலும், சமூகக் கேடுகளை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜுன் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

புகையிலை நிறுவன விளம்பரங்களில் தாம் நடித்தால், அதன் மூலம் உந்தப்பட்டு தமது ரசிகர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது சமூக அக்கறை பாராட்டத்தக்கது.

நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்தால், அதைப் பார்த்து ரசிகர்கள் புகையிலைக்கு அடிமையாவார்கள் என்பதால் தான் அத்தகைய காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கும்படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது முன்னணி நடிகர்களுக்கு கடிதம் எழுதினேன்.

புகையிலை நிறுவன விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படங்களிலும் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து நடிகர்களும் அவர்களின் ரசிகர்கள் உள்ளிட்ட மக்கள் நலன் கருதி புகைக்கும் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான அல்லு அர்ஜுனின் செய்தி இதோ…

கோடிகளில் கொட்டி கொடுத்தாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்.; ‘புஷ்பா’ நடிகர் பிடிவாதம்.

கோடிகளில் கொட்டி கொடுத்தாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்.; ‘புஷ்பா’ நடிகர் பிடிவாதம்

PMK leader Anbumani Ramadoss praises Allu Arjun

ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும் படத்தின் ஒன்லைன் இதுதானா.?

ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும் படத்தின் ஒன்லைன் இதுதானா.?

பாகுபலி & பாகுபலி 2 படங்களைத் தொடர்ந்து ராஜமவுலி இயக்கிய படம் ‘ஆர் ஆர் ஆர்’.

இப்படம் மார்ச் 25ல் ரிலீசாகி உலகளவில் ரூ 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருகிறது.

இப்படம் ரிலீசாவதற்கு முன்பே மகேஷ்பாபு படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருந்தார் ராஜமௌலி.

ராஜமௌலி & மகேஷ் பாபு இணையும் படத்தின் பட்ஜெட் ரூ 400-450 கோடி எனவும் கூறப்படுகிறது.

இந்த படம் ஆப்பிரிக்க காடுகளில் படமாக்கப்பட உள்ளதாம்.

ரஜினி-கமலை இணைக்க ராஜமௌலி திட்டம்..; இந்த ட்விஸ்ட் செம மாஸ்..

ஒரு புதையலை தேடி நாயகன் ஆப்பிரிக்க காடுகளுக்கு செல்வதாக கதைக்களம்
அமைக்கப்பட்டு உள்ளதாம்.

வழக்கம்போல இப்பட கதையை ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.

தற்போது இதன் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

All you need to know about Mahesh Babu and SS Rajamouli’s new film

More Articles
Follows