விமலின் மன்னர் வகையறா-வை வாங்கிய சினிமா சிட்டி

விமலின் மன்னர் வகையறா-வை வாங்கிய சினிமா சிட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vemal‘சதுரங்க வேட்டை-2’ படத்தை தொடர்ந்து ‘மன்னர் வகையறா’வை வெளியிடும் சினிமா சிட்டி ..!

நல்ல விலைக்கு கைமாறிய விமலின் ‘மன்னர் வகையறா’..!

விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் இந்தப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை நல்ல விலை கொடுத்து சினிமா சிட்டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அரவிந்த்சாமி – த்ரிஷா நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘சதுரங்க வேட்டை-2’ படத்தையும் இந்த நிறுவனம் தான், தமிழகம் முழுக்க வெளியிட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது. காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி), சாந்தினி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

பி.ஜி.முத்தையா மற்றும் சூரஜ் நல்லுசாமி ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.

வரும் 2018 ஜனவரியில் பொங்கல் திருநாளன்று இப்படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள்.

அதர்வா-ஹன்சிகா ஜோடியை இயக்கும் டார்லிங் இயக்குனர்

அதர்வா-ஹன்சிகா ஜோடியை இயக்கும் டார்லிங் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atharva and hansika‘டார்லிங்’ படப் புகழ் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை நேற்று முன் தினம் வெளியிட்டிருந்தோம்.

இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை பல படங்களை விநியோகம் செய்த ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

விக்ரம் வேதா, புரியாத புதிர் போன்ற படங்களுக்கு இசையமைத்த சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தில் அதர்வா, ஹன்சிகாவுடன் ‘யோகி’ பாபு காமெடியனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 10-ஆம் தேதி முதல் துவங்கவிருக்கிறது.

அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்: என்ன நடக்குது நாட்டுல..?

அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்: என்ன நடக்குது நாட்டுல..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madura veeran posterமதுரவீரன் திரைப்படத்திலிருந்து “ என்ன நடக்குது நாட்டுல “ எனும் சிங்கள் பாடல் சில வாரங்களுக்கு முன் வெளிவந்து அனைவரிடமும் நல்ல வரவேற்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

சமகாலத்தில் நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் அமைந்திருந்த இப்பாடலை தற்போது பல்வேறு அரசியல் கட்சிகள் பிரச்சார பொதுகூட்டத்தில் தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்ல பயன்படுத்திவருகிறார்கள்.

இன்றையளவில் பரபரப்பாக இருக்கும் RK நகர் பிரச்சார களத்தில் தவறாமல் “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல் ஒலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரவீரன் திரைப்படத்தின் முதல் சிங்கள் பாடலே பெரிய அளவில் மக்களிடம் சென்று அடைந்திருப்பது படகுழுவுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

இதை பற்றி படத்தின் இயக்குநர் P.G. முத்தையா கூறியது , எனக்கு படத்தில் பட்டுக்கோட்டையார் பாடலை போல ஒரு பொதுவுடைமை பாடல் தேவைப்பட்டது.

இதை நான் கவிஞர் யுகபாரதியிடம் கூறியதும் அவர் “ என்ன நடக்குது நாட்டுல “ என்று தொடங்கும் பாடல் வரிகளை எனக்கு எழுதி தந்தார். நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக மக்களிடம் இந்த பாடல் சென்றடைந்துள்ளது.

அரசியல் கட்சி பொதுகூட்டங்களிலும் இப்பாடல் தற்போது முக்கிய பங்குவகிக்கிறது. இப்பாடலின் இசை எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி டோலக் மற்றும் ஹார்மோனியம் என்ற இரண்டே கருவிகளை கொண்டு இதை உருவாக்கியுள்ளார்.

பாடல் வரிகளின் முக்கியத்துவம் மற்றும் நிஜமான மேடை பாடலை போல் இப்பாடல் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து சந்தோஷ் தயாநிதி இரண்டே கருவிகளை கொண்டு இப்பாடலை உருவாக்கியதால் இப்பாடல் தற்போது மேடையில் இசையமைத்து பாடுபவர்களுக்கு எளிமையாக உள்ளது.

நண்பர்கள் பலர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “ என்ன நடக்குது நாட்டுல “ பட்டுக்கோட்டையார் பாடலை போல் உள்ளது என்று கூறியது, நான் நினைத்தது போல் இப்பாடல் வந்துள்ளது என்ற நம்பிக்கையை தந்தது என்றார் இயக்குநர் P.G.முத்தையா.

தன்னடக்கமான தனுஷ் அதை செய்துவருகிறார்.. சிம்பு பெருமிதம்

தன்னடக்கமான தனுஷ் அதை செய்துவருகிறார்.. சிம்பு பெருமிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush at sakka podu podu rajaஇதில் இப்பட இசையமைப்பாளர் சிம்பு மற்றும் சிறப்பு விருந்தினர் தனுஷ் கலந்துக் கொண்டார்.

அப்போது தனுஷ் பேசியதாவது…

நான் நடிக்க பிடிக்காமல்தான் சினிமாவுக்கு வந்தேன். அது ஒரு விபத்து. ஆனால் சினிமாவில் பிறந்து அதில் வளர்ந்தவர் சிம்பு.

அவர் சினிமாவில் ஊறிப்போனவர். இவர் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் அவர் நாயகனாக நடித்தபோது நானும் நடிக்க வந்தேன். இப்போது இருவரும் 15 வருடங்களை கடந்துவிட்டோம் என்றார்.

அதன்பின்னர் சிம்பு பேசும்போது…

நான் நிறைய படங்களை கொடுக்க முடியவில்லை. ஆனால் தனுஷ் இன்று தன்னை நிலை நிறுத்தி ஹாலிவுட் வரை நடிக்க சென்றுவிட்டார்.

எல்லாம் துறைகளிலும் சாதித்து வருகிறார். நான் அன்பானவன் என்றால் அவர் தன்னடக்கமானவன்.

நான் கொடுக்க முடியாத படங்களை அவர் வரிசையாக கொடுத்து வருகிறார். எனக்கு அது மகிழ்ச்சிதான்.” என்று பாராட்டினார் சிம்பு.

நான் கெட்டவன்தான்; தனுஷ் முன்னிலையில் AAA தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டார் சிம்பு

நான் கெட்டவன்தான்; தனுஷ் முன்னிலையில் AAA தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டார் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and dhanush at sakk apodu podu rajaசிம்பு இசையமைக்க, சந்தானம் நடிப்பில் விடிவி கணேஷ் தயாரித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு இசையை வெளியிட்டார்.

அப்போது சிம்புவும் பேசினார். அவர் பேசும்போது….

என்னைப் பற்றி நிறைய பேர் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். என்னை கெட்டவன், திமிரு பிடித்தவர் என்று கூட சொல்வார்கள்.

சிம்பு செட் ஆக மாட்டார். அவர் சரியாக சூட்டிங்க்கு வருவதில்லை என்பார்கள்.

சில நேரம் அப்படியிருக்கலாம். AAA படத்தின் போதே தயாரிப்பாளர் அந்த பிரச்சினைகளை சொல்லியிருக்கலாம்.

படம் முடிந்த பிறகு கூட சொல்லியிருக்கலாம். ஆனால் படம் வந்தபின் இப்போது 6 மாதம் கழித்து அதை சொல்கிறார்.

ஒருவேளை நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த வருடம் 2018ல் மணிரத்னம் படத்தில் நடிக்கவிருக்கிறேன். அந்த சூட்டிங் ஜனவரி 20ல் தொடங்கவுள்ளது.

அந்த படத்திற்கு உடம்பை குறைத்து வருகிறேன். கொஞ்சம் தொப்பை உள்ளது. அதையும் குறைத்துவிடுவேன்.

மணிரத்னம் அவர்களுக்கு என் மீது என்ன நம்பிக்கையோ நான் நடிக்கனும் என்று சொல்லியிருக்கிறார். ஒருவேளை உங்களைப்போல் அவரும் என் ரசிகரா இருப்பாரோ? எனத் தெரியவில்லை.” என பேசினார்.

தனுஷின் படம் பார்த்தபோது இவரெல்லாம் நடிகரா என நினைத்தேன்…: சிம்பு

தனுஷின் படம் பார்த்தபோது இவரெல்லாம் நடிகரா என நினைத்தேன்…: சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor dhanushசந்தானம் நடிப்பில் விடிவி கணேஷ் தயாரித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு, தனுஷ், ஹரிஷ்கல்யாண் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துக் கொண்டனர்.

அப்போது சிம்பு பேசியதாவது…

எனக்கும் தனுஷ்க்கும் ஏதாவது ஒரு பிரச்சினை என அடிக்கடி செய்திகள் வரும்.

எங்களுக்குள் இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை. இனியும் வரப்போவதில்லை.

ஆனால் அவர் பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும். அவர் முதலில் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் பார்த்தேன்.

இதெல்லாம் ஒரு முகமா? என்றுதான் தனுஷை நினைத்தேன். அந்த படத்தில் குட்டை பாவடை பெண்களை காண்பித்தார்கள். படம் நன்றாக ஓடியது.

அதன்பின் அவரின் காதல் கொண்டேன் படம் பார்த்தேன்.

என் அருகில் அப்பட இயக்குனர் செல்வராகவன் இருந்தார். தனுஷின் நடிப்பு மற்றும் படம் எனக்கு பிடித்திருந்தது.

அப்போதே குறட்டைவிட்டு உறங்கிய செல்வராகவனை எழுப்பி, படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட் என்று சொன்னேன்.

அதன்பின்னர்தான் தனுஷ் உடன் போனில் பேசி பாராட்டினேன். அன்றுமுதல் எங்கள் நட்பு தொடர்கிறது. என்றும் தொடரும்.” என்று பேசினார் சிம்பு.

More Articles
Follows