தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் தொடர்பாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் – விமல் இடையே பிரச்சினை இருந்து வந்தது.
விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படத்தில் வரவு செலவு கணக்கை கையாண்டபோது மோசடியில் ஈடுபட்டதாக கூறி நடிகர் விமல் சென்னை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
சிங்காரவேலன் தன்னுடைய பெயரை பயன்படுத்தி போலியான ஆவணங்கள் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டதாக விமல் புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் விமல் அளித்த புகாரின் பேரில் தயாரிப்பாளர் சிங்காரவேலனை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு நடிகர் விமல் அளித்த புகாரின்பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ரூ.5 கோடி வரை பணமோசடி செய்துவிட்டதாக நடிகர் விமல் புகார் அளித்திருந்தார்.
தயாரிப்பாளர் சிங்காரவேலனின் நண்பர்கள் கோபி, திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு சிங்காரவேலன் மற்றும் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் சிங்காரவேலன் நீதிமன்றம் மூலம் முன்ஜாமீன் பெற்றார்.
ஆனால் இந்த விஷயம் தொடர்பாக நீதிமன்றம் சிங்காரவேலனுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது.
குறிப்பாக ஒரு மாதத்திற்கு விசாரணை அதிகாரி முன்பு சிங்காரவேலன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால் அந்த உத்தரவை சிங்காரவேலன் பின்பற்றாத காரணத்தால் முதல் வழக்கில் சிங்காரவேலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மற்றொரு புகாரும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் விமல் கொடுத்துள்ளார்.
அது தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் சிங்காரவேலன், கோபி, திருநாவுக்கரசு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படம் மிகப்பெரிய நஷ்டமடைந்தது என விநியோகஸ்தர்களை கூட்டி சென்னையில் பல நாட்கள் போராடி, ரஜினியிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு பெற்றவர் இந்த சிங்காரவேலன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Producer Singara Velan arrested by chennai police