தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டு போராட்டம், பிக்பாஸ் நிகழ்ச்சி என ஓவர் பாப்புலர் ஆனவர் ஜூலி.
இவர் மன்னர் வகையறா என்ற படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார்.
இதனையடுத்து தற்போது சினிமாவில் பல வாய்ப்புகள் வருகின்றன.
நீட் தேர்வுக்கு பலியான அனிதாவின் வாழ்க்கை படத்தில் அனிதாவாக நடித்து வருகிறார் என்பதை நம் தளத்தில் சில மாதங்களுக்கு முன் பார்த்தோம்.
இந்நிலையில் ’அம்மன் தாயி’ என்ற படத்தில் இவர் தற்போது அம்மனாக நடித்து வருகிறாராம்.
இப்படத்தை இரட்டை இயக்குனர்கள் மகேஸ்வரன் சந்திரஹாசன் ஆகியோர் இயக்கி தயாரித்து வருகிறார்கள்.
இதுபற்றி படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது….
அம்மனாக மற்றும் சாதாரண பெண்ணாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் ஜூலி.
அம்மனாக நடித்தபோது ஜூலி வழக்கமான ஜூலியாக இல்லை.
வழக்கத்துக்கு மாறாக அமைதியாக சாமி வந்ததுபோலவே இருந்தார்.
அம்மனாக நடித்தபோது விரதம் இருந்து அந்த அலங்காரத்திலேயே இருந்தார்.
மதுரை பக்கத்தில் வடக்கம்பட்டி என்ற ஊரில் உள்ள அம்மன் கோயிலில்தான் அவர் தங்கினார்.
அந்த ஊர் மக்கள் ஜூலியை அம்மனாகவே வழிபட்டனர். படத்தில் இடம்பெறும் முளைப்பாரி திருவிழாவும் உண்மையிலேயே நடத்தப்பட்டது’ என்று தெரிவித்தனர்.
இதில் நாயகனாக அன்பு என்பவர் நடிக்கிறார்.
சாமி அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் இப்படத்தை வெளியிட இருக்கிறார்களாம்.