ஜாதி பெயர் கொண்ட நடிகைகளை கலாய்க்கும் மன்னர் வகையறா

Mannar Vagaiyara movie release more than 300 theatres in TNவிமல் தயாரித்து நடித்துள்ள படம் மன்னர் வகையறா.

பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இப்படத்தில் ஆனந்தி, சாந்தினி, ஜீலி, நீலிமாராணி, பிரபு, ரோபோ சங்கர், ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தை வெளியிடவுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் புரோமோ வீடியோக்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.

அதில் ஒரு காட்சியில்… விமல் மற்றும் ரோபோ சங்கர் இருவரும் ஒரு திருமண நிகழ்வில் மொய் வைக்க செல்கின்றனர்.

அப்போது தன் பெயருடன் தேவர் என்ற ஜாதி பெயரை சொல்கிறார் ரோபோ சங்கர்.

அதற்கு மொய் எழுதும் பெண்ணோ.. என்ன சார்? இந்த காலத்துல ஜாதி எல்லாம் பெயரோடு வச்சிருக்கீங்க என்று கேட்கிறார்.

ஏம்மா.. ஐஸ்வர்யா ராய், ஷில்பா செட்டி, லட்சுமிமேனன் இவங்க எல்லாம் ஜாதி பெயர வச்சிருக்கும்போது, தமிழ்நாட்டுக்காரன் நான் தமிழ்நாட்டுல என் பெயரை ஜாதியோட சேர்த்து சொல்லக்கூடாதா? என கேட்கும் விதமாக அந்த ஜாதி பெயர் கொண்ட நடிகைகளை கலாய்த்துள்ளார்.

Mannar Vagaiyara movie release more than 300 theatres in TN

Overall Rating : Not available

Related News

ஜல்லிக்கட்டு போராட்டம், பிக்பாஸ் நிகழ்ச்சி என…
...Read More
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பூபதி…
...Read More

Latest Post