விமலுக்கு இனி வில்லங்கம் இருக்காது; கைகொடுக்கும் விநியோகஸ்தர் சிங்காரவேலன்

விமலுக்கு இனி வில்லங்கம் இருக்காது; கைகொடுக்கும் விநியோகஸ்தர் சிங்காரவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vemal and Singara Velanகடந்த ஜனவரியில் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியாகி 25 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

அதன்பிறகு வெளியான படங்கள் கூட தியேட்டரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையிலும், போட்டிக்கு புதிதாக பல படங்கள் வெளியான நிலையிலும் ‘மன்னர் வகையறா’வுக்கான வரவேற்பு இன்னும் குறையவே இல்லை என்கிறார்கள் வினியோகஸ்தர்கள்.

மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய விமலும், படத்தை இயக்கிய பூபதி பாண்டியனும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்றாலும் இதன் பின்னணியில் வெற்றிக்கான முக்கிய தூணாக இருந்துவருபவர் தான் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்கார வேலன். குறிப்பாக ‘மன்னர் வகையறா’ பட ரிலீசின்போது விமலின் ‘ஜன்னலோரம்’ பட இழப்பீடு விவகாரம் தலைதூக்க, தனது கையில் இருந்து 2 கோடி ரூபாய் கொடுத்து எந்தவித சிக்கலுமின்றி ‘மன்னர் வகையறா’ வெளிவர உதவினார் சிங்காரவேலன்.

அடுத்ததாக விமலின் நடிப்பில் தயாராகிவரும் ‘கன்னிராசி’ படத்தை வெளியிடும் உரிமையையும் சிங்காரவேலனே வாங்கியுள்ளார். படம் மார்ச் மாதம் வெளியாகிறது.

அதுமட்டுமல்ல, இனி விமல் நடிக்கும் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் கொடுத்து உதவிக்கரமும் நீட்ட முன்வந்துள்ளார் சிங்காரவேலன்.

மேலும் அப்படி தயாராகும் விமலின் படங்களை வெளியிடும் உரிமையையும் தானே வாங்கிக் கொள்ளவும் செய்கிறாராம் சிங்காரவேலன்.

தனுஷ்-சிம்புவை பின்னுக்கு தள்ளிய அனிருத்-சிவகார்த்திகேயன்

தனுஷ்-சிம்புவை பின்னுக்கு தள்ளிய அனிருத்-சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anirudh and SKசென்னை டைம்ஸ் பத்திரிகை 2017ம் ஆண்டில் மிகவும் விரும்பப்பட்ட ஆண்கள் யார் என்பது குறித்து வாசகர்கள் மத்தியில் கருத்துக்கணிப்பை நடத்தியது.

அந்த பட்டியலில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகியோருக்கு இடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தவிர 30 ஆண்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இசையமைப்பாளரான அனிருத் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

2வது இடத்தில் சிவகார்த்திகேயன் உள்ளார். 3வது இடத்தில் ஹரிஷ் கல்யாண்.

4வது இடம் பிடித்த நடிகர்தான் மிக வியப்பாக உள்ளது. ஏனென்றால் அவர் இன்னும் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இப்போதுதான் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

அவர்தான் நடிகர் விக்ரமின் மகன் துருவ்.

5வது இடத்தில் துல்கர் சல்மான், 6வது இடத்தில் ராணா உள்ளார்.

தனுஷுக்கு 7வது இடமும், பிக் பாஸ் புகழ் ஆரவுக்கு 8வது இடமும் கிடைத்துள்ளது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி 9வது இடத்திலும், அதர்வா 10வது இடத்திலும், கிரிக்கெட் வீரர் அஸ்வின் 11வது இடத்திலும், சிம்பு 12வது இடத்திலும் உள்ளார்கள்.

கமலின் அரசியல் (ஆரம்ப) பயணத்தில் ஆர்வமில்லாத ஸ்ருதி..?

கமலின் அரசியல் (ஆரம்ப) பயணத்தில் ஆர்வமில்லாத ஸ்ருதி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan and Shruti Haasanநாளை மறுநாள் பிப்ரவரி 21ஆம் தேதி தனிக்கட்சி தொடங்கி தன் கட்சி பெயர் மற்றும் கட்சி கொள்கைகளை அறிவிக்க உள்ளார் கமல்ஹாசன்.

இதனால் பட சூட்டிங்கை நிறுத்தி வைத்துவிட்டு பல அரசியல் பிரபலங்களை சந்தித்து வருகிறார்.

மேலும் தன் மன்ற நிர்வாகிகள், ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் அரசியல் பயணத்திற்கு அவரது மகள் ஸ்ருதிஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது…

“எனக்கு அரசியல் தெரியாது. அப்பாவின் அரசியலுக்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு.

ஆனால், அவருடன் பயணிக்கும் திட்டம் எதுவுமில்லை. பிப்ரவரி 21ஆம் தேதி எனக்கு சூட்டிங் இருப்பதால் அன்று நான் ராமேசுவரம் செல்லவில்லை” என்று தெரிவித்தார்.

காலா-வுக்கு முன் காத்திருக்கும் சவால்கள்

காலா-வுக்கு முன் காத்திருக்கும் சவால்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaalaa posterசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் ரஜினி படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். இந்த முறை ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டதால் காலாவிற்கு விண்ணை முட்டும் உச்சகட்ட எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படமும் அரசியல் சார்ந்தே இருக்கும் என கூறப்படுகிறது.

எனவே தமிழகத்தில் ‘காலா’வுக்கு போட்டியாக வேறெந்த படமும் வெளியாகப் போவது கிடையாது.

இதற்கு முன் அறிவிக்கப்பட்டு இருந்த ‘மிஸ்டர். சந்திரமௌலி’ படத்தின் வெளியீடு தேதியை மாற்றிக்கொள்வதாக அந்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்துவிட்டது.

தமிழ்நாட்டை தாண்டி ஆந்திராவிலும் ரஜினிக்கு மிகப்பெரிய மார்கெட் உள்ளது.

ஆனால் மகேஷ்பாபுவின் அரசியல் த்ரில்லர் படமான ‘பரத் அனே நேனு’ படமும் (ஏப்ரல் 26ம் தேதி) வெளியாகிறது.

இதில் மகேஷ்பாபு முதல்வராக நடித்து இருப்பதால் இந்த தேதியை மாற்ற முடியாது என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டிஸ்னி, ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிடி வார்’ என்ற தங்களின் பிரம்மாண்ட படைப்பை அமெரிக்காவில் வெளியிடும் முன்னரே ஏப்ரல் 27 அன்று இந்தியாவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ‘அவெஞ்சர்ஸ்’ படம் திரையிடப்படவுள்ளது.

மேலும் சில ஹிந்தி திரைப்படங்களும் காலாவுக்கு போட்டியாக வரும் என சொல்லப்படுகிறது.

தானா சேரனும் கூட்டம்; காசுக்காக வரக்கூடாது.. கமல் கட்டளை

தானா சேரனும் கூட்டம்; காசுக்காக வரக்கூடாது.. கமல் கட்டளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal art60 வருடங்களுக்கு மேலாக தன் நடிப்பால் இந்திய ரசிர்களை கவர்ந்த நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை பிப்ரவரி 21-ம் தேதி தொடங்குகிறார்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் வீட்டில் இருந்து தன் பயணத்தை தொடங்க உள்ளார்.

அன்றைய தினம் மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளார். பின்னர் பிப்ரவரி 23-ம் தேதி திண்டுக்கல்லுக்கு வருகிறார்.

இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.

இதில்… திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்துகொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பொதுக்கூட்டத்திற்கு வருமாறு கட்டாயப்படுத்த கூடாது.

யாருக்கும் உணவு, பணம் கொடுத்து அழைத்து வரக்கூடாது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாம்.

இது கமல்ஹாசனின் கட்டளையாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kamalhassan political tour news updates

விசுவாசம் சூட்டிங் தள்ளிப்போவதால் டென்ஷனாகும் அஜித் ரசிகர்கள்

விசுவாசம் சூட்டிங் தள்ளிப்போவதால் டென்ஷனாகும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith fans disappointed due to Viswasam shooting postponedவிவேகம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள படம் விசுவாசம்.

கடந்த சில வருடங்களாகவே அஜித் பட சூட்டிங் முடிவடையும் தருவாயில்தான் படத்தின் தலைப்பையே வெளியிடுவார்கள்.

ஆனால் தற்போது பட சூட்டிங் தொடங்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பே படத்தலைப்பை அறிவித்துவிட்டது சத்யஜோதி நிறுவனம்.

சிவா இயக்கும் இப்படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க இமான் இசையமைக்கிறார்.

இதன் சூட்டிங் ஜனவரியில் தொடங்கப்படும் என தெரிவித்தனர். பின்னர் பிப்ரவரி ஆனது.

தற்போது பிப்ரவரி மாதமே முடிவடையும் நிலையில் இருப்பதால் மார்ச் மாதத்திற்கு இதன் சூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இப்படம் இந்தாண்டு 2018 தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படி அடிக்கடி சூட்டிங்கை தள்ளி வைப்பதால் சொன்ன நேரத்தில் படம் வெளியாகுமா? என அஜித் ரசிகர்கள் டென்ஷனில் இருக்கிறார்களாம்.

Ajith fans disappointed due to Viswasam shooting postponed

More Articles
Follows