விமலுடன் இணைந்தார் பிக்பாஸ் ஜூலி; பொங்கலுக்கு படம் ரிலீஸ்

விமலுடன் இணைந்தார் பிக்பாஸ் ஜூலி; பொங்கலுக்கு படம் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

BiggBoss fame Julie joins with Vimal in Mannar Vageraபூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல், ஆனந்தி நடித்துள்ள படம் மன்னர் வகையறா.

பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

A3V சினிமாஸ் நிறுவனம் சார்பில் என். விமல் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் புகழ் ஜூலி நடித்துள்ளராம். அந்த படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படத்தை அடுத்த வருடம் 2018 பொங்கல் தினத்தில் வெளியிட உள்ளனர்.

BiggBoss fame Julie joins with Vimal in Mannar Vagera

மீண்டும் இணைந்தது வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் கூட்டணி

மீண்டும் இணைந்தது வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nivetha Pethuraj romance with Vishnu Vishal in Ezhil directorialஎழில் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் தயாரித்து நடித்த படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்.

காமெடியை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.

இந்நிலையில் இதே கூட்டணி மீண்டும் இன்று இணைந்துள்ளது.

எழில் இயக்கவுள்ள புதிய படத்திலும் விஷ்ணுவிஷால் நாயகனாக நடிக்க, நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை சிவாஜிகணேசன் குடும்பத்தை சேர்ந்த ஈஷான் நிறுவனம் சார்பாக துஷ்யந்த் மற்றும் அபிராமி தயாரிக்கின்றனர்.

முருகன் என்பவர் கதையமைக்க, டி. இமான் இசையமைக்க, ஜோதி அருணாச்சலம் வசனம் எழுதுகிறார்.

இப்படம் இன்று பூஜையுடன் ஆரம்பம் ஆனது.

Nivetha Pethuraj romance with Vishnu Vishal in Ezhil directorial

Eshan Productions Production No 2 Pooja stills (4)

ஞானவேல்ராஜா தயாரிப்பில் கஜினிகாந்த் ஆக மாறும் ஆர்யா

ஞானவேல்ராஜா தயாரிப்பில் கஜினிகாந்த் ஆக மாறும் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sayyesha-saigal-hot-cleavage-stillsசிக்ஸ்பேக் உடல், அசத்தல் உருவம் என அதிரடியாக வலம் வந்தாலும் ஆர்யாவுக்கு அண்மைக்கால படங்கள் சரியாக அமையவில்லை.

இறுதியாக வெளியான ‘கடம்பன்’ படமும் அவரை கவிழ்த்து விட்டது.

அதன்பின்னர் அமீர் இயக்கத்தில் ஆர்யாவும், அவர் தம்பி சத்யாவும் இணைந்து நடித்து வந்த ‘சந்தனத்தேவன்’ படமும் பாதியில் நின்றது.

இதனையடுத்து மிகப்பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்ட சுந்தர்.சியின் ‘சங்கமித்ரா’படத்திலும் கமிட்டானார் ஆர்யா.
ஆனால் அது அறிவிப்போடு நின்றுவிட்டது.

இந்நிலையில், இன்று ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தை ‘ஹர ஹர மஹாதேவஹி’ புகழ் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கவுள்ளார்.

‘வனமகன்’ படப்புகழ் சாயிஷா நாயகியாக இப்படத்திற்கு ‘கஜினிகாந்த்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா நடிக்க, ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தை இயக்கி வருகிறார் சந்தோஷ் பி ஜெயக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

Arya Sayyesha starring in Ghajinikanth in Studio Green production

கார்த்தி இயக்கத்தில் சூர்யா; அறிவிப்புக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

கார்த்தி இயக்கத்தில் சூர்யா; அறிவிப்புக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and karthiகார்த்தி நடிப்பில் அண்மையில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

எனவே நேற்று இரவு, கார்த்தி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது, ஒரு ரசிகர் சூர்யாவை வைத்து படம் டைரக்ட் செய்வீர்களா? எனக் கேட்டுள்ளார்.

“நான் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்தபோதே அண்ணாவுக்காக (சூர்யா) ஸ்கிரிப்ட் எழுதினேன்.

இப்போது நடிகனாகிவிட்டேன்.. ஒரு நாள் எனது கதை அவருக்குப் பிடித்துப் போனால் நான் அவரை இயக்க வாய்ப்புள்ளது” என கார்த்தி பதிலளித்துள்ளார்.

கார்த்தி நடிகராக ஆவதற்கு முன் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது உறுதியாகும் பட்சத்தில் அப்படி ஒரு அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Karthi said one day he may direct his brother Suriya

தல-தளபதி பற்றி ஒரே வரியில் சொன்ன கார்த்தி

தல-தளபதி பற்றி ஒரே வரியில் சொன்ன கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi talks about Ajith and Vijayஒரு சில நடிகர்களுக்கு மட்டும்தான் அறிமுக படமே வெற்றிப்படமாக அமையும்.

சிவாஜி கணேசனுக்கு பராசக்தி போல கார்த்திக்கு பருத்தி வீரன் அமைந்தது.

அதன்பின்னர் ஒரு சில படங்கள் கார்த்திக்கு சரியாக அமையவில்லை என்ற போதிலும், அண்மையில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று அவரது சினிமா கேரியரில் மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தன் ரசிகர்களுடன் ட்விட்டரில் இவர் கலந்துரையாடியுள்ளார்.

அப்போது வழக்கம்போல ரசிகர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய் பற்றி கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது…

‘அஜித் சார் ஒரு ஜெண்டில் மேன், அவரை சந்தித்த பிறகு மேலும் அவரை பிடிக்க ஆரம்பித்துவிட்டது’ எனவும் ‘விஜய் சாரை அண்ணனுடன் கல்லூரியில் சந்தித்துள்ளேன், மிகவும் எளிமையானவர். அதே சமயம் தன்னம்பிக்கை உடையவர்’ என பதிலளித்துள்ளார்.

Karthi talks about Ajith and Vijay

Ajith sir is very warm and a thorough gentleman. You will like him more after you meet him
— Actor Karthi (@Karthi_Offl) November 27, 2017

I’ve known vijay sir since he was in Loyola college with anna. Extremely simple man but very confident.
— Actor Karthi (@Karthi_Offl) November 27, 2017

சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்

சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aishwarya Rajesh honoured as Best Actress in multi languagesதமிழ் தெரிந்த பெண், அழகு மற்றும் திறமை நிறைந்த நடிகைகள் ஒரு சிலரே தமிழ் சினிமாவில் உள்ளனர்.

அதில் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் தற்போது தனுஷ் உடன் வட சென்னை, விக்ரம் உடன் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து இயக்குனர் விஜய் இயக்கத்தில் லட்சுமி என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் தவிர மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழில் கட்டப்பாவ காணோம், மலையாளத்தில் ஜோமெண்டே சுவிசேஷங்கள், சகாவு, ஹிந்தியில் டாடி ஆகிய படங்களில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான Asia Vision Movie Awards 2017 விருதை இவர் பெற்றுள்ளார்.

Aishwarya Rajesh honoured as Best Actress in multi languages

More Articles
Follows