தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வேலுதாஸ் இயக்கத்தில் விமல் நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ படம் செப்டம்பர் 1 தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் டிரைலர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது..
“கடந்த ஆறு மாத காலத்திற்குள் நான் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்புவதற்குள் ஒரு குறிப்பிட்ட சில யூடிபர்கள் என்னை பலமுறை கொன்று விட்டார்கள். என் வீட்டில் எவ்வளவு வேதனையை அனுபவித்திருப்பார்கள்.
மற்றவர்களை மகிழ்விக்கும் ஒரு கலைஞனை இப்படி காயப்படுத்தலாமா ?” என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
Youtubers spreading rumours says Robo Shankar