தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விமல் தயாரித்து நடித்துள்ள படம் மன்னர் வகையறா.
பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இப்படத்தில் ஆனந்தி, சாந்தினி, ஜீலி, நீலிமாராணி, கார்த்திக்குமார், பிரபு, ரோபோ சங்கர், ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி, சரண்யா, யோகிபாபு, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
நேற்று முன்தினம் குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படம் தமிழகத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது.
பெண்களின் அமோக ஆதரவு பெற்றுள்ள இப்படம் இரண்டு நாட்களில் 1.5 கோடி ரூபாயை வசூலை அள்ளியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Mannar Vagaiyara Telugu remake updates