நந்தினி & குந்தவையை பார்க்கும் போது வந்தியத்தேவன் என்ன நினைத்தார்?; மனம் திறந்த மணிரத்னம்

நந்தினி & குந்தவையை பார்க்கும் போது வந்தியத்தேவன் என்ன நினைத்தார்?; மனம் திறந்த மணிரத்னம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்கி இரண்டு பாகமாக இயக்கியது பற்றி இயக்குநர் மணி ரத்னம் சொன்னவை….

“நான் முதன்முதலாக பெரிய நாவல் படித்தது கல்கியின் பொன்னியின் செல்வன் தான். சென்னையில் உள்ள லாயட்ஸ் சாலையில் ஈஸ்வரி லெண்டிங் நூலகம் உள்ளது. அங்கு தான் பொன்னியின் செல்வனின் 5 பாகங்களையும் மணியம் சாரின் ஓவியங்களுடன் படித்தேன்.

முழு கதையையும் ஒரே நீட்டிப்பில் படித்து முடித்தேன். படிக்கும்போது புன்னகையுடன் படித்தேன். சோழர்களுடைய நிலப்பரப்புகள், குதிரைகள், கதாபாத்திரங்கள், பழுவேட்டரையரின் இரட்டை மீசை, இவை யாவும் என் மனதைவிட்டு போகவே இல்லை.

அவர் எழுதிய விதம், படிப்பவர்களை தன்வசம் ஈர்த்துக் கொள்வார். எழுத்தால் நம்மிடம் தொடர்ந்து பேசுவார். நான் பாதியிலேயே விட்டு வந்த வந்திய தேவன் என்ன செய்கிறார் என்று ஆர்வமாக பார்ப்போம். அவர் கூடவே பயணித்த உணர்வு வரும்.

மணியம் சார் ஓவியம் இல்லாமல் கல்கியைப் படித்திருக்க முடியாது. மணியம் தான் அடித்தளமாக இருந்தார்.

ஆழ்வார்க்கடியான் நம்பி என்பவர் குடுமியோடு மதில் மேல் வெறும் தலை மட்டும் வைத்துக் கொண்டு இருப்பவர். நந்தினி என்றால் ஒரு ஆண்டாள் கொண்டை தேவைப்படுகிறது என்பதை அவரே சுலபமாக வரையறுத்துக் கொடுத்துவிட்டார்.

ஆனால், அவர் அதை சாதாரணமாக வரையவில்லை, அவரும் அந்த காலத்தில் எப்படி இருந்தார்கள் என்று ஆராய்ச்சி செய்து விளக்கத்துடன் தான் வரைந்து கொடுத்திருக்கிறார். ஆகையால், நான் அந்த அடித்தளத்தை மீறி போகவில்லை. ஆனால், அந்த கதையில் இருந்து வரும் இது இன்னொரு கிளை.

பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புனைகதை. ஆனால், கதாபாத்திரங்களையும், அவர்களுக்கு நடந்த சம்பவங்களையும் வரலாற்றை உண்மையாக எழுதியிருக்கிறார்.

இதைத் தாண்டி நந்தினி கதாபாத்திரம் மட்டுமே முழுக்க முழுக்க புனையப்பட்டது. மேலும், பல புனையபட்ட கதாபாத்திரங்களை கதைக்குள் கொண்டு வந்து இருக்கிறார்.

இந்த கதை 5 பாகங்களைக் கொண்டது. அதை 2 பாகங்களாக 2 படங்களிலேயே கொண்டு வருவதற்கு சில தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தது. சில காட்சிகளை நீக்கியது தெரியக்கூடாது, கதையின் ஓட்டம் ஒரே சீராக இருக்க வேண்டும், அதற்காக ஒரு பாலம் கட்ட வேண்டியிருந்தது.

கதையாக எழுதும்போது ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்படி என்று 3 அல்லது 4 பக்கங்களில் சொல்லி விடலாம்.

உதாரணத்திற்கு, வந்தியத்தேவன் நந்தினியை பார்க்கும்போது என்ன நினைத்தார்? குந்தவையை பார்க்கும் போது என்ன நினைத்தார்? என்பதை சுலபமாக சொல்லிவிடலாம். ஆனால், சினிமாவாக எடுக்கும் போது அந்த அனுகூலம் இருக்காது.

சுந்தர சோழரை முதல் முறை பார்க்கும் போதே, முதலில் அவர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார் என்று புரிய வேண்டும். இரண்டாவது பேரரசரின் எண்ணங்கள், இவை யாவும் முதல் காட்சியிலேயே வெளிவர வேண்டும்.

அதனால் அதற்குத் தேவைப்படுபவற்றைக் கொண்டுவருவது அவசியம். அதே மாதிரி, குந்தவை புத்திசாலி, சோழ சாம்ராஜ்யத்தின் தூண், அரசியல் தெரிந்தவர் மேலும், அருண்மொழி வர்மன் வருவதற்கு அவர்தான் முக்கிய காரணம். இப்படி அந்த புத்தகத்தில் நிறைய இடத்தில் நிறைய கதாபாத்திரங்கள் குந்தவையை பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். கேட்பதை விட பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல மாற்றங்களை கொண்டு வந்தோம்.

மேலும், கல்கியின் எழுத்து அலங்கார தமிழ் இல்லை. அதை மேடையில் நடிப்பதும் கஷ்டம். மேடையின் தரம் சுலபமாக வந்துவிடும்.

இதில் முதல் விஷயம், இந்த தலைமுறையினருக்கு சுலபமாக புரிய வேண்டும், இரண்டாவது சோழர் காலத்தை குறிக்க வேண்டும். இதை ஜெயமோகன் மிக எளிமையாக செய்தார். பாரம்பரிய தமிழ் தான் ஆனால், குறுகிய வாக்கியங்களாக எழுதினார். அது உணர்ச்சியுடன் நடிப்பதற்கும், படப்பிடிப்பு நடத்துவதற்கும் மிகப் பெரிய அனுகூலமாக இருந்தது.

தமிழ்நாட்டிலேயே பொன்னியின் செல்வன் மீது ஈர்ப்பும், மிகப்பெரிய கொண்டாட்டமும் இருக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இதை படமாக எடுக்க வேண்டும் என்ற கனவு இருந்திருக்கலாம்.

மேலும், முதல் பாகம் பார்க்காதவர்களுக்கும் இரண்டாவது பாகம் புரிய வேண்டும், இந்த இரண்டு பாகமும் தனியாகவும் இருக்க வேண்டும், சேர்ந்து இருந்தால் இன்னமும் நன்றாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் தான் எடுத்தோம்.

இந்த புத்தகத்தைப் படித்தவர்கள் நிறைய பேர் இதை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டார்கள், அதேபோல்தான் இந்த புத்தகத்தில் எனக்கும் நிறைய பிடித்து இருந்தது. அதை நான் படமாக்கி கொண்டேன்” என்றார்.

ஒருத்தர் கூட தியேட்டர்ல உட்கார மாட்டீங்க.; விஜய்யின் ‘வாரிசு’ அப்டேட் கொடுத்த ஜானி மாஸ்டர்

ஒருத்தர் கூட தியேட்டர்ல உட்கார மாட்டீங்க.; விஜய்யின் ‘வாரிசு’ அப்டேட் கொடுத்த ஜானி மாஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தை தில் ராஜூ தயாரிக்க தமன் இசையமைத்து வருகிறார்.

இதில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா குஷ்பூ யோகி பாபு சரத்குமார் ஷாம் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை அடுத்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் உள்ள ஒரு பாடலின் நடனம் குறித்து ஜானி மாஸ்டர் அப்டேட் கொடுத்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது… “எழுதி வச்சுக்கோங்க… தியேட்டர்ல ஒருத்தரை கூட உக்காந்து இந்த பாட்ட பாக்க மாட்டீங்க எல்லாருமே எழுந்திருச்சு ஆடுவீங்க..” எனத் தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ படங்களில் நடனம் அமைத்திருக்கிறார் ஜானி மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

பரனூர் மகாத்மாவுக்கு பாதபூஜை செய்து ஆசி பெற்ற ரஜினிகாந்த் குடும்பத்தினர்

பரனூர் மகாத்மாவுக்கு பாதபூஜை செய்து ஆசி பெற்ற ரஜினிகாந்த் குடும்பத்தினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்துக்கு நடிகர் என்ற அடையாளத்தை தாண்டி ஆன்மிகவாதி என்ற அடையாளமும் உண்டு.

இந்த நிலையில் இன்று அக்டோபர் 16ல் ரஜினிகாந்த்தின் வீட்டிற்கு பரனூர் மகாத்மா என்று சொல்லப்படும் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் வருகை தந்துள்ளார்.

அங்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் தலைவருக்கு ரஜினிகாந்த் மற்றும் மனைவி லதா ஆகியோர் பாத பூஜை செய்தனர்.

பிறகு ரஜினிக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் ஆசி வழங்கி சென்றார்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த்

Rajinikanth family got blessing from Swamy ji

பான் இந்திய படமான ‘பனாரஸ்’ படத்தை வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி

பான் இந்திய படமான ‘பனாரஸ்’ படத்தை வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னடத்திலிருந்து பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் ஜையீத் கான் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை முன்னணி திரைப்பட வெளியீட்டு நிறுவனமான சக்தி பிலிம் ஃபேக்டரி கைப்பற்றி இருக்கிறது.

முன்னணி இயக்குநரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்’.

இந்த திரைப்படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார்.

இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

இந்து மக்களின் புனித நகரான காசி நகரத்தின் பின்னணியில் காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை என். கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

‘பனாரஸ்’ படத்தின் டீசர், பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில் ‘பனாரஸ்’ திரைப்படம் நவம்பர் மாதம் 4ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இதன் தமிழக வெளியீட்டு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் கைப்பற்றி இருக்கிறார்.

தொடர்ந்து திரைப்பட வெளியீட்டில் வெற்றிகளை குவித்து வரும் இந்நிறுவனம், பான் இந்திய படமான ‘பனாரஸ்’ படத்தை தமிழகத்தில் வெளியிடுவதால், இந்த திரைப்படமும் வணிக ரீதியாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுமுக நாயகனாக இருந்தாலும், காதலையும், காசி நகரத்தையும் மாயாஜால புள்ளியில் இயக்குநர் இணைத்திருப்பதால், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Sakthi film factory bagged the theatrical rights of Banaras

விஜய் கனிஷ்கா-வின் ‘ஹிட் லிஸ்ட்’டை தொடங்கினார் கே.எஸ்.ரவிக்குமார்

விஜய் கனிஷ்கா-வின் ‘ஹிட் லிஸ்ட்’டை தொடங்கினார் கே.எஸ்.ரவிக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த தெனாலி மற்றும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற கூகுள் குட்டப்பா ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படம்.

குடும்பப்பங்கான, உணர்வு பூர்வமான படங்களை இயக்குவதற்கு பெயர்பெற்ற இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

இயக்குநர்கள் சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்கும் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சித்தாரா, முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎப் புகழ் கருடா ராமச்சந்திரா, மைம் கோபி மற்றும் அனுபமா குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

ராம்சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்தின் படத்தொகுப்பை ஜான் மேற்கொள்ள, கலை வடிவமைப்பை அருண் கவனிக்கிறார்.

நேற்று விஜய் கனிஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு விஜய் கனிஷ்கா சித்தாரா ஆகியோர் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்தப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமாக, காமெடி ஆக்சன் கமர்ஷியல் என அனைத்து அம்சங்களும் நிறைந்த திரைப்படமாக உருவாகிறது.

Vijay Kanishkas Hit List movie shoot starts

உதயநிதிக்கு நன்றி.; பிலிம்சேம்பர் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

உதயநிதிக்கு நன்றி.; பிலிம்சேம்பர் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்றழைக்கப்படும் பிலிம்சேம்பருக்கு தேர்தல் நடைபெற்றது.

தலைவராக ரவி கொட்டாரக்கரா, துணைத் தலைவர்களாக ஜி.பி. விஜயகுமார், டி.எஸ். ராம்பிரசாத், கே.எஸ். ராமகிருஷ்ணா, செயலாளர்களாக டி.ஏ.அருள்பதி, கிருஷ்ணாரெட்டி,
பொருளாளராக என்.இராமசாமி ( தேனாண்டாள் முரளி) செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.தாணு, கே.பிரபாகரன், எஸ். கதிரேசன், ஆர்.மாதேஷ், எம்.கபார், என்.விஜயமுரளி, மதுரை ஷாகுல் அமீது உட்பட 44 செயற்குழு உறுப்பினர்களாக பதவி ஏற்றனர்.தேர்தல் அதிகாரியான சி.கல்யாண் பணியாற்றினார்.

பிலிம்சேம்பர்

பில்டிங் கட்டுவதற்கு அரசிடம் அனுமதி பெற உறுதுணையாக இருந்த திரைப்பட தயாரிப்பாளரும், நடிகரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் சேம்பர் முன்னாள் தலைவர் காட்ரகட்ட பிரசாத், ஜாகுவார் தங்கம் உட்பட ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

SIFCC
16.10.2022

பிலிம்சேம்பர்

Southindian Film Chamber of Commerce new executives

More Articles
Follows