தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மைக்காலமாக வழக்கமான நாயகி வேடம் ஏற்காமல் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் நடித்து வருகிறார் திரிஷா.
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது ‘லியோ’ படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்.
இது விஜய்க்கும் திரிஷாவுக்கும் 67வது படமாகும். இந்த நிலையில் திரிஷா நடிக்க உள்ள அவரின் 68வது படம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த படத்தை தூங்காநகரம், சிகரம் தொடு, இப்படை வெல்லும் உள்ளிட்ட படங்களை இயக்கிய கௌரவ் நாராயணன் இயக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு ‘கொலை வழக்கு’ என தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
Trisha 68 Title : Producer – Director Hot Updates Here..