தன் குழந்தைகளின் படத்தை வெளியிட்ட சர்ச்சை பாடகி சின்மயி

தன் குழந்தைகளின் படத்தை வெளியிட்ட சர்ச்சை பாடகி சின்மயி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை பாடியதன் மூலம் திரையுலகில் பாடகியாக அடியெடுத்து வைத்தார் சின்மயி.

முதல் பாடலிலேயே சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றார்.

தமிழில் ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், டி.இமான் என அனைத்து முன்னணி இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியிருக்கிறார்.

சின்மயி

திரிஷா, சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா என தமிழின் பெரும்பாலான முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசி உள்ளார்.

நடிகரும் இயக்குநருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்துகொண்டிருந்த பாடகி சின்மயிக்கு கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்ததனர்.

கர்ப்பமாக இருப்பதை சின்மயி அறிவிக்காததால் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக விமர்சனங்கள் பல எழுந்தது.

சின்மயி

அதனை பாடகி சின்மயி மறுத்து விட்டார்.

இந்த நிலையில், பாடகி சின்மயி முதன்முறையாக தனது மகன்களின் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சின்மயி-யின் குழந்தைகளின் புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

சின்மயி

chinmayi reveal her twin sons photo for the first time

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் ‘ஆதிபுருஷ்’..; அகிலம் முழுவதும் இத்தனை கோடி.?

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் ‘ஆதிபுருஷ்’..; அகிலம் முழுவதும் இத்தனை கோடி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் ‘ஆதிபுருஷ்’ .

இப்படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.

பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.

‘ஆதிபுருஷ்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த (16-06-2023)-ம் தேதிவெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது.

இது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் அதிகாலை காட்சிகளையும் திரையிடப்பட்டது.

இப்படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.

‘ஆதிபுருஷ்’ படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘ஆதிபுருஷ்’ படம் வெளியான முதல் நாளில் 140 கோடி ரூபாயும், அடுத்த நாளில் ரூ.100 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று 3 நாட்களில் ரூ.100 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் சுமார் 340 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் முதல் வார பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ 340 கோடியை கடந்துள்ளது.

மேலும் நடப்பு ஆண்டில் வெளியான 3 நாட்களில் 300 கோடி வசூலை குறித்த 2-வது திரைப்படம் என்ற பெருமை பெற்றுள்ளது ஆதிபுருஷ்.

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படம் முதல் வார இறுதியில் உலகம் முழுவதும் ரூ 313 கோடி வசூலித்தாலும், பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் ரூ 340 கோடி வசூலித்துள்ளது.

இதன் மூலம் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

prabhas’s adipurush film earns rs 340 crore worldwide in first week

சுமார் 800-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த; பிரபல நடிகர் பூஜாபுரா ரவி மரணம்

சுமார் 800-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த; பிரபல நடிகர் பூஜாபுரா ரவி மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் பூஜாபுரா ரவி.

‘கல்லன் கப்பலில் தானே’, ‘ரவுடி ராமு’, ‘ஒர்மாக்கல் மரிக்குமோ’, ‘அம்மினி மம்மவன்’, ‘முத்தாரம்குன்னு பி.ஓ.’, ‘மழ பெய்யுனு மத்தளம் கொட்டுனு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இவர் சுமார் 800-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘கப்பி’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பூஜாபுரா ரவி, சில மாதங்களுக்கு முன்பு இடுக்கி மறையூரில் உள்ள மகள் வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார்.

இந்தநிலையில் வயது முதிர்வு காரணமாக பூஜாபுரா ரவி உயிரிழந்தார். அவருக்கு வயது 83.

பூஜாபுரா ரவி மறைவுக்கு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், பழம்பெரும் மலையாள நடிகர் பூஜாபுரா ரவி மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

malayalam actor poojapura ravi passes away

‘பாயும் ஒளி நீ எனக்கு’ கதையை வியந்துகேட்டார் விக்ரம் பிரபு – கார்த்திக் அத்வைத்

‘பாயும் ஒளி நீ எனக்கு’ கதையை வியந்துகேட்டார் விக்ரம் பிரபு – கார்த்திக் அத்வைத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் விக்ரம் பிரபு, வாணி போஜன், தனஞ்ஜெயா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’.

இந்த படம் ஜூன் 23ல் வெளியாக உள்ள நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தினர் படக்குழுவினர்.

*பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது:*

அன்பு, சுடர் போல் எரிய வேண்டும் அதுதான் பாயும் ஒளி நீ எனக்கு. இது பாரதியார் வரி. சுடர் போல் இந்த படம் மேல் நோக்கி போகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. படம் பார்க்கும்போது அன்பு நமக்குள் ஊறி பெருகும். அந்த அன்பை மற்றவர்களுக்கு
கடத்துவோம்.

இந்த விழாவில் இயக்குனர் கார்த்திக் அத்வைத் பேசியதாவது…

நான் ஹைதராபாத்திலிருந்து வருகிறேன். முதன்முறையாக விக்ரம் பிரபுவை சந்தித்து கதை சொன்னபோது அவர் வியந்து கேட்டார். அதுதான் எனக்கும் பெரிய ஊக்கமாக இருந்தது.

ஒரு முதல் பட இயக்குனருக்கு விக்ரம்பிரபு போலவும் இந்த டீம் போலவும் யாரும் சப்போர்ட் செய்வார்களா என்று தெரியவில்லை. அதற்காக விக்ரம் பிரபுக்கும் குழுவினருக்கும் நன்றி. நாயகி வாணி போஜனுக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளருக்கு எனது நன்றி. என்னுடைய எண்ணத்தை
புரிந்துக்கொண்டு காட்சிகளை அழகாக படமாக்கினார். ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசிக்கும் நன்றி
கேரக்டரை புரிந்துக் கொண்டு ஸ்டண்ட் அமைத்துக் கொடுத்தார்.

படத்தில் ஒன்பது சண்டைக்காட்சிகள் இருக்கிறது. சூழ்நிலைக்கு ஏற்ப இந்த சண்டைக்காட்சி மாறுபடும். படத்தில் பணியாற்றிய எடிட்டர் சி. எஸ். பிரேம்குமார் நடன இயக்குனர் தாஸ்தா, படத்தை ரிலீஸ் செய்யும் கிஷோர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

எழுத்து & இயக்குனர் – கார்த்திக் அத்வைத்
ஒளிப்பதிவாளர் – ஶ்ரீதர்
எடிட்டர் – சி.எஸ்.பிரேம்குமார்
இசை – சாகர்
கலை இயக்குனர் – பி.எல். சுபேந்தர்
சண்டை – தினேஷ் காசி
பாடல் – கார்த்திக் நேத்தா
நடனம் – தஸ்தா
சிகை அலங்காரம் – சேகர்
பிஆர்ஓ – டைமண்ட் பாபு, சதிஷ் (AIM)
புகைப்படம் – முருகதாஸ்
விளம்பர வடிவமைப்பு – REDDOT பவன்
D I வண்ணமயமானவர் – ரங்கா
ஆடை வடிவமைப்பாளர் – டீனா
தயாரிப்பு பதாகை – கார்த்திக் மூவி ஹவுஸ்
உலகமெங்கும் வெளியீடு – எஸ் பி சினிமாஸ்

பாயும் ஒளி நீ எனக்கு

Karthik Adwaith speaks about Paayum Oli Nee Enaku team

கண்ணுக்கு தெரியறது உண்மையாக இருக்காது. கண்ணுக்கு தெரியாதது தப்பாக இருக்காது – விக்ரம் பிரபு

கண்ணுக்கு தெரியறது உண்மையாக இருக்காது. கண்ணுக்கு தெரியாதது தப்பாக இருக்காது – விக்ரம் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் விக்ரம் பிரபு, வாணி போஜன், தனஞ்ஜெயா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’.

இந்த படம் ஜூன் 23ல் வெளியாக உள்ள நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தினர் படக்குழுவினர்.

ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசி பேசிய தாவது:*

விக்ரம் பிரபு சாருடன் நிறைய படங்கள் பைட்டராக நடித்திருக்கி றேன் இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி உள்ளேன். முதல் படத்திலேயே 40 நாட்கள் சண்டை காட்சி. கண் தெரியாதவர்கள் போடும் சண்டை காட்சி போல் விக்ரம் பிரபு நடிக்க வேண்டும் .

இதற்காக கவனமாக சண்டை காட்சிகள் படமாக்க வேண்டியி ருந்தது. எல்லாமே நன்றாக வந்திருக்கிறது. கடுமையாக விக்ரம்பிரபு சார் நடித்திருக்கிறார் . படம் நன்றாக வந்திருக்கிறது படத்துக்கு எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க நன்றி.

இந்த விழாவில் விக்ரம் பிரபு பேசியதாவது:*

இந்தவொரு நல்ல டீமோடு நிறைய ஹார்டு ஒர்க் செய்தது ரொம்ப சந்தோசம். இயக்குநர் கார்த்திக் ரொம்பவும் சினிமாவில் ஆர்வம் உள்ளவர்.

அவருடன் பயணம் தொடங்கி நீண்டநாள் சென்றது. இந்த படத்தில் எவ்வளவோ பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை ஒளிப்பதிவாளர் ஶ்ரீதர் புரிந்து கொண்டு பணியாற்றினார். அவர் பேச்சிலேயே அது தெரிந்திருக்கும். இந்த பட அனுபவம் என்றைக்கும் மறக்காது அப்படிப்பட்ட படம் இது.

இன்று இயக்குனர் கார்த்திக் சொன்ன ஒரு விஷயம்தான் அதாவது கண்ணுக்கு தெரியற ஒரு விஷயம் உண்மையாகவும் இருக்காது. கண்ணுக்கு தெரியாத விஷயம் தப்பாகவும் இருக்காது என்ற ஒரு அழகான விஷயத்தை வைத்துதான் இந்த ஸ்கிரிப்ட் எழுதியிருந்தார்.

இதில் நிறைய அர்த்தங்கள் இருக்கிறது. இந்த படத்தில் வாணி போஜன் அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கன்னட ஹீரோ தனஞ்ஜெயாவும் ஸ்கிரிப்டை புரிந்து கொண்டு நடித்துக் கொடுத்திருக்கிறார்.

இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. தியேட்டரில் நல்ல அனுபவம் தரும் படமாக இருக்கும். ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசி இவன் வேற மாதிரி படத்திலிருந்து நன்றாக தெரியும் . இன்றைக்கு படத்தில் மாஸ்டராக இருக்கிறார்.

எல்லா சண்டை காட்சி களையும் நன்றாக எடுத்திருக்கிறார். என் மனத்துக்கு நெருக்க மான படம்.

இந்த படத்தை வெளியிடும் கிஷோருக்கு நன்றி. நாங்கள் நல்ல படம் தந்திருக்கிறோம் உங்கள் ஆதரவு தேவை.

பாயும் ஒளி நீ எனக்கு

Vikram Prabu speaks about Paayum Oli Nee Enakku storyline

விக்ரம் பிரபுவுடன் நடிக்க வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை.. – வாணி போஜன்

விக்ரம் பிரபுவுடன் நடிக்க வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை.. – வாணி போஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே எம் எச் புரடக் ஷன் சார்பில் கார்த்திக் சவுத்ரி தயாரிக்கும் படம் “பாயும் ஒளி நீ எனக்கு”.

இதில் விக்ரம்பிரபு, வாணி போஜன் ஜோடியாக நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் ஆர். கார்த்திக் அத்வைத் இயக்கி உள்ளார். சாகர் இசை அமைக்கிறார். எஸ் பி சினிமாஸ் சங்கர் கிஷோர் வெளியிடுகிறார்.

‘பாயும் ஒளி நீ எனக்கு” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது*

*இதில் கிஷோர் பேசியதாவது:*

பாயும் ஒளி நீ எனக்கு படம் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. அதற்கு பட இயக்குனர் கார்த்திக் அத்வைத், ஹீரோ விக்ரம் பிரபுவுக்கு முதலில் நன்றி சொல்கிறேன். இவர்கள் இப்படத்தை வெளியிட ஒரு வாய்ப்பு கொடுத் திருக்கிறார்கள். இந்த படம் பெரிய திரையில் விரைவில் திரைக்கு வருகிறது. உங்கள் அனைவரின் ஆதரவு தர வேண்டும் நன்றி.

நடிகை வாணி போஜன் பேசியதாவது:*

இந்த ஸ்கிரிப்ட் எனக்கு ரொம்ப பிடிச்சது. விக்ரம் பிரபுவுடன் நடிக்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. இந்த படத்தில் விக்ரம் ஆக்டிங், ஆக் ஷன் எல்லாமே பிடித்திருந்தது. என்னையும் ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. எல்லோரும் சப்போர்ட் பண்ண கேட்டுகொள்கிறேன்.

*ஒளிப்பதிவாளர் ஶ்ரீதர் பேசியதாவது:*

நல்ல படங்களுக்கு ஆதரவு தரும் பத்திரி கையாளர்களுக்கு வணக்கம். இந்த படத்தில் என்னுடன் 3 அசிஸ்டன்ட்ஸ்கள் மட்டுமே பணியாற்றினார்கள். அவர்களுக்கு முதலில் நன்றி. ஏனென்றால் இதுவொரு மிகப் பெரிய ஆக் ஷன் படம். இதன் 70 சதவீத படப்பிடிப்பு இரவில்தான் நடக்கும். பெரிய ஆக் ஷன் படம் என்பதால் நிறைய கேமரா, எக்கியூப் மென்ட்ஸ் பயன்படுத்தப்பட்டது அதற்கு ஒரு வலுவான டீம் தேவைப்பட்டது.

அப்படி எனக்கு வலுவான என் உதவியாளர்கள் இருந்தார்கள். அடுத்து இயக்குனர் கார்த்திக், கேமரா மேனுக்கென்றே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் தான் இந்த படம். பார்வை குறைபாடுள்ள ஒருவனின் உலகம் எப்படியிருக்கும் என்பதை காட்ட இப்படம் எனக்கொரு வாய்ப் பாகபும், சவாலாகவும் இருந்தது.

விக்ரம் பிரபு, வாணி போஜன் மற்ற எல்லா நடிகர்களுமே ரொம்பவும் சின்சியர். மேக்கப் அணிந்து சரியான நேரத்துக்கு வந்துவிடுவார்கள். கடைசி 10 நாள் 180 மணிநேரம் நடிப்பது என்பது பெரிய விஷயம். விக்ரம்பிரபு காட்டிய இந்த ஈடுபாடுதான் எங்களையும் தொடர்ச் சியாக பணியாற்ற வைத்தது.

இந்த படத்தில் சண்டை காட்சி 40 நாட்கள் படமாக்கப் பட்டது. விக்ரம் பிரபு நடித்த கிளைமாக்ஸ் சண்டை காட்சி கண்ணாடிகள் நடுவில் படமாக்கப்பட்டது. அது பெரிய ஹேலைட்டாக இருக்கும்.

பாயும் ஒளி நீ எனக்கு

I wish to act with Vikram Prabu says Vani Bhojan

More Articles
Follows