தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2022-ல் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் வெளியானது. இந்த படம் ஜெயம் ரவிக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
இதனையடுத்து இந்த ஆண்டு 2023 மார்ச் மாதத்தில் ‘அகிலன்’ திரைப்படம் வெளியானது இந்தப் படம் ரவிக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
இதன் பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் ‘பொன்னியின் செல்வன் 2’ வெளியானது.
இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளார் ஜெயம் ரவி.
தற்போது இவரது கைவசம் கிட்டத்தட்ட 4-5 உள்ளன. அதில் ‘சைரன்’ மற்றும் ’இறைவன்’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.
அடுத்ததாக ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இவை இல்லாமல் தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் ‘தனி ஒருவன் 2’ படத்தில் நடிக்க உள்ளார்
இத்துடன் அறிமுக இயக்குனர் ஒருவரின் பேண்டஸி படத்திலும் ரவி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேற்கண்ட படங்கள் அனைத்தும் ஜெயம் ரவி நடிப்பில் உருவானது. இது இல்லாமல் ஒரு படத்தை இயக்க ரெடியாகி வருகிறார் ரவி.
அண்மையில் சில கதைகளை நடிகர் கார்த்தியிடம் சொன்னதாகவும் அவரும் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.
எனவே விரைவில் வந்திய தேவனை இயக்கும் அருள்மொழிவர்மன் என்ற அறிவிப்பு வெளியானாலும் ஆச்சரியம் இல்லை.
காத்திருப்போம் ரசிகர்களே…
Jayam Ravi to direct Actor Karthi for his next film