‘லில்லி’ உருவாக காரணம் மணிரத்னம்.; பான் இந்தியா படத்தில் டைனோசர் – சிவம்

‘லில்லி’ உருவாக காரணம் மணிரத்னம்.; பான் இந்தியா படத்தில் டைனோசர் – சிவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோபுரம் ஸ்டூடியோஸ் K. பாபு ரெட்டி, G.சதீஷ் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லில்லி’ என்ற படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என்ன ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் பேபி நேஹா, வேதாந்த் வர்மா, பிரநதி ரெட்டி, ராஜீவ் பிள்ளை, சிவ கிருஷ்ண காரு, செந்தில் பொன்னுசாமி, ராஜ் வீர், மிட்சிலி ஷா, ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ராஜ்குமார்

இசை – ஆண்டோ பிரான்சிஸ்
பாடல்கள் – P. A. ராசா
எடிட்டிங் –
கலை – P.S.வர்மா
தமிழ் வசனம் – இயக்குனர் முத்து

மக்கள் தொடர்பு – மதுரை செல்வம்,- மணவை புவன்.
தயாரிப்பு – K.பாபு
ரெட்டி, G.சதீஷ் குமார்

கதை,திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் – சிவம்.

படம் பற்றி இயக்குனர் சிவம் பேசியதாவது…..

இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம். எத்தனையோ பெரிய நடிகர்கள் படம், இயக்குனர்கள் படம் பான் இந்தியா படமாக வெளியாகியிருக்கிறது. ஆனால் குழந்தைகளை மையமாக வைத்து நேரடியாக உருவாகியுள்ள படம் இதுவாகத் தான் இருக்கும்.

இது குழந்தைகளுக்கான படமாக இருந்தாலும் அவர்களிடமிருந்து பெரியவர்கள் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதோடு நட்புனா என்ன, விட்டுக் கொடுத்தல்னா என்ன என்பதை உணர்வுபூர்வமாக எடுத்திருக்கிறோம்.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் நிச்சயம் கண்கலங்க வைக்கும்.

இத்தனை ஆண்டுகாலம் எனது சினிமா அனுபவத்தில் எத்தனையோ கதைகளை எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் என் முதல் படமாக இந்த குழந்தைகள் கதையைத்தான் எடுக்க வேண்டும், அவர்களது உணர்வுகளை அனைவருக்கும் சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதை எடுத்தேன்.

இந்த கதையையை நான் உருவாக்க முக்கியப் காரணமே இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தான். ஏன்னா அஞ்சலி படம் பார்த்து இன்றுவரை என்னால் அந்த படத்திலிருந்து வெளியே வரமுடியல.

அந்த பாதிப்பில்தான் இந்த கதையை உருவாக்கினேன். நிச்சயம் இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் இது வெறும் குழந்தைகளுக்கான படம் மட்டுமல்ல பெரியவர்களுக்குமான படம்.

இதுவரை ஹாலிவுட் சினிமாவில் மட்டும் தான் டைனோசரை பார்த்து வந்தோம். முதல் முறையாக இந்த படத்தில் டைனோசரை பயன்படுத்தி இருக்கிறோம், அதுவும் ஒரு கதாபாத்திரமாகவே வரும் அதை நீங்கள் திரையில் பார்க்கும் போது கதையோடு ஒன்றியிருக்கும்.

படம் இம்மாதம் 30 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது” என்றார் இயக்குனர் சிவம்.

Director Sivam speaks about Lilly movie

கல்வி விருது விழாவில் விஜய் பேச்சு.; ‘அசுரன்’ இயக்குநர் வெற்றிமாறன் கருத்து

கல்வி விருது விழாவில் விஜய் பேச்சு.; ‘அசுரன்’ இயக்குநர் வெற்றிமாறன் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் விஜய் பேசியது பலரின் கவனத்தை ஈர்த்தது.

அதில், விஜய் சமீபத்தில் ஒரு படத்தில் ஒரு அழகான வசனம் நான் கேட்டேன்.

கார்டு இருந்தால் எடுத்துகிடுவானுங்க, ரூபா இருந்தா பிடுங்கிடுவானுங்க, ஆனா படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுத்துக்கொள்ளவே முடியாது என்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசூரன்’ பட வசனத்தை விஜய் பேசியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறனிடம், ‘அசூரன்’ படத்தில் இடம்பெற்ற வசனத்தை ‘விஜய் கல்வி விருதுகள் வழங்கும் விழா’ நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் பேசியிருந்தார், இதனை எவ்வளவு முக்கியமானதாக நீங்கள் பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு வெற்றிமாறன் அளித்த பதில், ஒரு சினிமாவில் நாம் சொல்கின்ற ஒரு விஷயம், சமூகத்துல மிக முக்கியமான ஒரு நபரிடம் போய் சென்றடையும் பொழுது அதனுடைய தாக்கம் என்னவாக இருக்கும் என்பதற்கான “ஒரு மிக பெரிய உதாரணம் தான் இது” என்றார்.

மேலும், காமராஜர், அண்ணா, அம்பேத்கர், பெரியாரை பற்றி படிக்க வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார் என்ற கேள்விக்கு, அந்த மேடையில் அவர் சொன்னது, அனைவரும் அவர்களை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே.

அம்பேத்கர், பெரியார், காமராஜர் மற்றும் அண்ணாவையும் பற்றி படிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.

vijay said asuran movie dialogue vetrimaran response

ஸ்மிருதி வெங்கட்டுக்கு லிப் கிஸ் கொடுத்த கிஷன் தாஸ்

ஸ்மிருதி வெங்கட்டுக்கு லிப் கிஸ் கொடுத்த கிஷன் தாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருள்நிதியின் ‘தேஜாவு’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தருணம்’.

கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார்.

ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் மற்றும் ARKA என்டர்டெயின்மெண்ட்ஸ் இணைந்து
தயாரிக்கிறது.

இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார்.

கிஷன் தாஸ்

ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். அருள் இ சித்தார்த் படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.

இந்நிலையில், ‘தருணம்’ படத்தின் கிளிம்ப்ஸ் (Glimpse) வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ, பயத்தில் இருக்கும் ஸ்மிருதி வெங்கட்டுக்கு கிஷன் தாஸ் லிப் கிஸ் கொடுப்பது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tharunam – Glimpse

Kishan Das gave a lip kiss to Smruthi Venkat

உலக அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்த விஜய்; எலோன் மஸ்கை பின்னுக்கு தள்ளினார்..!

உலக அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்த விஜய்; எலோன் மஸ்கை பின்னுக்கு தள்ளினார்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது.

விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி முன்னிட்டு இன்று காலை முதலே ட்விட்டர் சமூக வலைதளத்தில் விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் குறித்த ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வந்தன.

இந்த நிலையில், காலை நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களில் #VIJAYHonorsStudents என்ற ஒரு ஹேஷ்டேக் மட்டும் பல லட்சத்துக்கும் அதிகமான ட்வீட்களுடன் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.

அத்துடன் #ActorVijay, #VijayMakkalIyakkam, #ThalapathyVijay உள்ளிட்ட ஹேஷ்டேகுகளும் உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

நடிகர் விஜய் ட்விட்டர் ட்ரெண்ட் ஹேஷ்டேக் மூலம் இன்று ‘உலக அளவில் ட்விட்டரில் முதலிடம் வகித்து வருகிறார் விஜய்’.

இதன் மூலம், நடிகர் விஜய் இன்று ட்விட்டர் நாயகன் எலோன் மஸ்கை பின்னுக்கு தள்ளினார்.

நெட்டிசன்கள் பலரும் இந்த நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், விஜய்க்கு பலரும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

vijay’s vijayhonorsstudents twitter trending number one place in a world

ரஜினியின் பழைய ரூட்டூக்கே சென்று அவரையே மிஞ்சிய கமல்.; ஆகஸ்டில் ஆரம்பிக்கலாங்களா.?

ரஜினியின் பழைய ரூட்டூக்கே சென்று அவரையே மிஞ்சிய கமல்.; ஆகஸ்டில் ஆரம்பிக்கலாங்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘புராஜெக்ட் கே’.

சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது.

சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை ‘மகாநடி’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

அடுத்த ஆண்டு 2024 ஜனவரியில் இப்படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் வில்லனாக கமல்ஹாசன் நடிக்க அவருக்கு ரூ. 150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் வந்த தகவல்களை FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

3 வாரங்கள் மட்டுமே கமல் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் கமல். அவருக்கான காட்சிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

1970களில் கமல்ஹாசன் நாயகனாக நடித்துக் கொண்டிருந்தபோது ரஜினி வில்லனாக அறிமுகமானார். 45+ ஆண்டுகளில் தற்போது ரஜினி மிகப்பெரிய நாயகனாகி ரூ 150 கோடியை சம்பளமாக பெற்று வருகிறார்.

இந்த நிலையில் ரஜினியின் பழைய வில்லன் ரூட்டுக்கு சென்று ரஜினியின் சம்பளத்தை கமல் தொட்டுவிட்டார் என்கின்றனர் திரைப்பட வல்லுனர்கள்.

Kamal plays as baddie and his salary in Project K updates

ஜெயலலிதாவின் பாடிகாட் ‘நாக் அவுட் கிங்’ சார்பாட்டா நடிகர் ஆறுமுகம் காலமானார்

ஜெயலலிதாவின் பாடிகாட் ‘நாக் அவுட் கிங்’ சார்பாட்டா நடிகர் ஆறுமுகம் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்ஸர் ஆறுமுகம். இவர் குத்துச்சண்டை வீரர். 1980 களில் குத்துச்சண்டை போட்டிகளில் ‘சார்பட்டா பரம்பரை’க்காக ஆடிவந்தார்.

அப்போதே ‘நாக் அவுட் கிங்’ என பலராலும் பாராட்டப்பட்டவர்.

மேலும் 1985-ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாடிகாட் ஆக இருந்துள்ளார் பாக்ஸர் ஆறுமுகம்.

இவருக்கு தற்போது வயது 68 வயதாகிறது.

இவர் ‘தண்ணில கண்டம்’, ‘வா குவாட்டர் கட்டிங்’ & ‘ஆரண்ய காண்டம்’, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக சில தினங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார் ஆறுமுகம்.

இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை சிகிச்சை பலனின்றி இன்று ஜூன் 17ஆம் தேதி காலமானார்.

பாக்ஸர் ஆறுமுகம்

Boxer Actor Bodyguard Arumugam passes away

More Articles
Follows