தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கார்த்தி நடிப்பில் அவரது 25 வது படமாக உருவாகியுள்ளது ‘ஜப்பான்’.
ராஜூமுருகன் இயக்கி உள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நாயகியாக அணு இமானுவேல் நடித்துள்ளார்.
வழக்கமான ராஜூமுருகன் படங்கள் போல் இல்லாமல் கமர்சியல் கலந்து கார்த்தி படத்தை உருவாக்கி இருக்கிறார். வழக்கமான கார்த்தி குரலில் இல்லாமல் இந்த படத்திற்காக தன் குரலை படம் முழுவதும் மாற்றிப் பேசி இருக்கிறார்.
இந்த படம் தீபாவளி வெளியிடாக நவம்பர் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்கில் வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் எதுவும் இல்லை என்பது கூடுதல் தகவல்.
இந்த நிலையில் இன்று நவம்பர் 8ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர் கார்த்தி.
அப்போது அவர் பேசும்போது..
பருத்திவீரனில் ஆரம்பித்து இன்று 25வது படம் வரை வளர்ந்து இருக்கிறேன். மீடியாக்களின் ஆதரவு எனக்கு எப்போதும் உண்டு.
ஒவ்வொரு படங்களையும் நீங்கள் நிறை குறைகளை சொல்லி வருகிறீர்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
மெட்ராஸ் பட பத்திரிகையாளர் காட்சியின் போது.. “இதுபோன்ற நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டீர்கள். நானும் அதை செய்து வருகிறேன்.
நான் உதவி இயக்குனராக இருந்தபோது ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஒன்லைன் கதை மட்டுமே தெரியும். அந்த அளவு தான் அறிவு அப்போது இருந்தது.
ஆனால் இன்று பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டேன்.
ஜப்பான் படம் நன்றாக வந்துள்ளது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது.. உங்களின் அன்பும் ஆதரவும் தேவை.. தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்றார் நடிகர் கார்த்தி.
Karthi diwali Japan special press meet