மருதநாயகம் + நாயகனை இணைத்து THUG LIFE உருவாக்கிய கமல் – மணிரத்னம்

மருதநாயகம் + நாயகனை இணைத்து THUG LIFE உருவாக்கிய கமல் – மணிரத்னம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தனது லட்சியப் படமாக உருவாக்க முன்வந்த திரைப்படம் ‘மருதநாயகம்’ கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் முன்னர் இந்த படத்தின் அறிவிப்பும் தொடக்க விழாவும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த தொடக்க விழாவிற்கு இங்கிலாந்து ராணி வந்திருந்து சிறப்பு செய்திருந்தார்.
மேலும் அப்போதைய முதல்வர் கருணாநிதி, சிவாஜிகணேசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் பட்ஜெட் மற்றும் சில காரணங்கள் இந்த படத்தை கைவிட்டார் கமல்ஹாசன். தற்போது மருதநாயகம் பாணியில் ஒரு புதிய படத்தை மணிரத்னம் இணைந்து உருவாக்கி வருகிறார் கமல்.

THUG LIFE

மேலும் இந்த படத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கேரக்டரில் நடிக்கிறார் கமல்ஹாசன். இந்த கேரக்டர் பெயரானது 36 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நாயகன் படத்தில் கமல் ஏற்றிருந்த வேடமாகும்.

கமலின் 234 வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு தக் லைப் THUG LIFE என்று பெயரிட்டு அதிரடியான ஒரு வீடியோவை மணிரத்னம் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில் கமலுடன் துல்கர் சல்மான், த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டோ நடிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

THUG LIFE

இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் & ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

தற்போது இந்த தக் லைஃப் அறிவிப்பு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நாளை கமல்ஹாசன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோ கமல் ரசிகர்களுக்கு மாபெரும் பிறந்த நாள் விருந்தாக அமைந்துள்ளது எனலாம்.

THUG LIFE

Kamal Maniratnam combo KH234 Titled Thug life

இந்திய சினிமாவில் இதான் முதன்முறை.; பாத்ரூம் ஃபைட்டில் 2 லேடீஸ்

இந்திய சினிமாவில் இதான் முதன்முறை.; பாத்ரூம் ஃபைட்டில் 2 லேடீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கத்ரீனா கைப் யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸின் முதல் பெண் உளவாளி. அந்தவிதமாக ‘டைகர் 3’ படத்தில் இடம்பெறும் உயிரை பணயம் வைக்கும் சண்டைக்காட்சிகளில் நடிப்பதற்காக தனது உடலை மீண்டும் ஒருமுறை கட்டுக்கோப்பாக’ மாற்றியுள்ளார்.

‘டைகர் 3’ படத்தில் துருக்கி குளியலறையில் அவருடைய டவல் சண்டைக்காட்சி இணையத்தில் வைரலாக ஆனது.

சினிமாவில் ஒரு ஹீரோவை போல ஒரு பெண்ணும் எப்படி சண்டையிட முடியும் என்பதை காட்டியதற்காகவே இந்தப் படத்தை தான் மிகவும் விரும்புவதாக கத்ரீனா கூறியுள்ளார்.

கத்ரீனா கூறும்போது…

“ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளில் நடிப்பதற்கு நான் மிகவும் விரும்புகிறேன். அந்தவகையில் டைகர் வரிசை படங்கள், எப்போதுமே ஒரு பெண் ஆக்சன் ஹீரோயின் என வரும்போது பல விஷயங்களில் மிகப்பெரிய உயரத்திற்கு எடுத்து செல்லும் விதமாக அந்த வாய்ப்பை எனக்கு அளித்திருக்கின்றன.

சோயாவின் வாயிலாக ஒரு சூப்பர் உளவாளியின் வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கிறேன் என்பதுடன் எதிரிக்கு அவள் ஒரு நரகம் என்கிற உண்மையையும் நான் ரசிக்கிறேன்.

டைகரைப் போலவே எதையும் அழகாக சமாளிக்க முடியும் என்பது மட்டுமல்ல, அவளால் கடைசி வரை நின்று போராடவும் முடியும். ஒரு ஆணைப்போலவே பெண்ணும் சரிசமமாக சண்டையிட முடியும் என்பதை பார்க்க முடியும்போது அது எனக்கும் பார்வையாளர்களுக்கும் புதிதாகவும் உற்சாகமாகவும் இருக்கும்” என்கிறார்.

அவர் மேலும் கூறும்போது,..

“டைகர் 3’யின் குளியலறை சண்டைக்காட்சி பெரிய அளவில் வைரலாகும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஒரு குளியலறைக்குள் அடிப்பது, தாவிக்குதிப்பது, குத்துக்களை விடுவது, உதைப்பது என ஒருவருக்கொருவர் மோதும் சண்டைக்காட்சியை படமாக்குவதற்கு மிகமிக கடினமாக இருந்தது.

இப்படி ஒரு புத்திசாலித்தனமான காட்சியை யோசித்ததற்காகவே ஆதிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். காரணம் இந்திய சினிமாவில் இப்படி இரண்டு பெண்கள் மோதும் சண்டைக்காட்சி இருக்கிறதா என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

இயக்குனர் மனீஷும் சண்டைப்பயிற்சி குழுவும் ஒவ்வொன்றையும் நம்பமுடியாத வகையில் விலாவாரியாக செயல்படுத்தி இருக்கிறார்கள். மக்களால் பார்த்து ரசிக்கப்படும் இவை அனைத்தும் ஒட்டுமொத்த குழுவினரின் உழைப்பு.

ஒரு திறமையான சண்டைக்காரி கதாபாத்திரத்தில் நடித்துல் மிஷ்ஷெல் லீயுடன் சோயா மோதும் காட்சியில் நிச்சயமாக அதன் தீவிரம், ஆக்கிரமிப்பு, மிருகத்தனம் எல்லாம் படம் பார்ப்பவர்களை மூச்சுத்திணற வைக்கும். சினிமாவில் ஒரு பெண் இந்த அளவுக்கு சண்டையிட்டு பார்த்திராததால் இது என்னுடைய மிகச்சிறந்த சண்டைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கும்.

இது ரொம்பவே எளிமையான ஆனால் தைரியமான ஒன்று என்பதால் மக்கள் இந்த முழு ஆக்சன் காட்சியை திரையரங்குகளில் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது” என்கிறார்.

‘டைகர் 3’யில் டைகராக நடித்துள்ள சல்மான் கானுக்கு ஜோடியாக சோயா என்கிற சூப்பர் உளவாளி கதாபாத்திரத்தில் மீண்டும் கத்ரீனா நடித்திருக்கிறார்.

ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் மனீஷ் சர்மா இயக்கியுள்ள இந்த ‘டைகர் 3’ ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தீபாவளி ரிலீஸாக வரும் நவ-12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

2 ladies fight at Bathroom for Tiger 3 movie

https://www.instagram.com/p/CzS3IRDNxn2/?igshid=MzRlODBiNWFlZA==

சூர்யா கேள்விக்கு சூடான அமீர் கார்த்தி கேள்விக்கு கடுப்பானார்.; என்ன நடந்தது.?

சூர்யா கேள்விக்கு சூடான அமீர் கார்த்தி கேள்விக்கு கடுப்பானார்.; என்ன நடந்தது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ‘மாயவலை’ படத்தை அமீர் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்து உள்ளனர்.

அதர்மம் & பகைவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரமேஷ் பாலகிருஷ்ணன். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அமீர் மற்றும் சஞ்சிதா செட்டி இணைந்துள்ள ‘மாயவலை’ படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் நேற்று நவம்பர் 5 பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது கார்த்தி மற்றும் சூர்யாவை மீண்டும் இயக்குவீர்களா என கேட்டபோது..

சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரையும் இயக்கிய இயக்குனர் நான்தான். இன்று அவர்கள் மிக உயரத்திற்கு சென்று விட்டார்கள். அவர்கள் உயரம் அடைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி தான்.

விதை விதைத்து விட்டோம் அவர்கள் வளர்ந்து விட்டார்கள். மேலும் என்னால் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியாது. எனவே கார்த்தி சூர்யாவிடம் இருந்து நான் விலகி விட்டேன்” என்று பேசினார்

கார்த்தியை ‘பருத்திவீரன்’ படத்தில் அறிமுகப்படுத்தியவர் நீங்கள். ஆனால் ஜப்பான் இசை வெளியீட்டு விழாவில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லையே ஏன்? என்று கேட்கப்பட்டது.. எனக்கு அழைப்பு வரவில்லை என்றார்.

Director Ameer attack on Suriya and Karthi

சினிமாவில் நடிப்பது எப்போ.? அமீருக்கு வெற்றிமாறன் அளித்த சூப்பர் பதில்

சினிமாவில் நடிப்பது எப்போ.? அமீருக்கு வெற்றிமாறன் அளித்த சூப்பர் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அமீர், சஞ்சிதா, சாய் தீனா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மாயவலை’.

விரைவில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது…

நடிப்பது, இயக்குவது இரண்டும் வேறு வேறு சவாரி, இரண்டையும் ஒரு சிலரால் தான் சமாளிக்க முடியும் அது என்னிடம் இல்லை அதனால் இப்போது நடிக்கும் ஆர்வம் இல்லை. ‘வட சென்னை’ ராஜன் ரோல் பலர் நடிப்பதாக இருந்து தள்ளிப்போனது. கடைசியாக அமீரைப் போய்ச் சந்தித்தேன், கேரக்டர் சொல்லாமலே எனக்காக நடிக்கிறேன் என்றார்.

ஆனால் கேரக்டர் சொன்ன பிறகு இந்தக் கேரக்டருக்கு சரியாக இருக்கமாட்டேன் என்று நினைத்தார், ஆனால் எனக்காக நடிக்க வந்தார். அப்போதிலிருந்து இப்போது வரை எங்கள் நட்பு தொடர்கிறது. எல்லாவற்றைப் பற்றியும் நிறையப் பேசுவோம்.

மனித உணர்வுகள் குறித்து ஒரு அருமையான விஷ‌யத்தை இந்தப்படம் பேசுகிறது, தீனா சிறந்த நடிகர், கேமராவிற்கு முன்னாலும் பின்னாலும் அவராகவே இருக்கிறார், அது அவரது பலம்.

இந்தப்படத்தில் எல்லோருமே நன்றாக செய்துள்ளார்கள். ரமேஷ், அமீர் எப்போதும் ஒன்றாகவே வருவார்கள், என் படங்கள் பற்றி ரமேஷின் கருத்து மிக உதவியாக இருக்கும். இந்தப்படத்தை நன்றாக செய்துள்ளார். எனக்கு திருப்தியான படமாக இப்படம் வந்துள்ளது. இந்தப்படம் எனக்குப் பிடித்திருக்கிறது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், நன்றி.

வெற்றிமாறன்

When will you act in movies Vettrimaran reply to Ameer

ரஜினி – விஜய்க்கே அடுத்த சூப்பர் ஸ்டார்ஸ் உதவி தேவைப்படுகிறது.. – அமீர்

ரஜினி – விஜய்க்கே அடுத்த சூப்பர் ஸ்டார்ஸ் உதவி தேவைப்படுகிறது.. – அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அமீர், சஞ்சிதா, சாய் தீனா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மாயவலை’.

விரைவில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற இயக்குநர் நடிகர் அமீர் பேசியதாவது…

‘மாயவலை’ தொடங்கியதன் நோக்கம் ஒன்று தான். இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் தான் இதன் மூல காரணம். மூத்த பத்திரிகையாளர்களுக்கு அவரைத் தெரியும். ‘அதர்மம்’ எனும் அற்புதமான படத்தை தந்தவர். பல முன்னணி நடிகர்களை இயக்கிய‌வர். எனக்கு அவருக்குமான நட்பு நீண்டது. அவர் படத்தின் ஷூட்டிங்கில் அவரை வேடிக்கைப் பார்த்திருக்கிறேன்.

நான் அவரிடம் உதவியாளனாக வேலைப் பார்க்க ஆசைப்பட்டேன், ஆனால் அவரது சினிமா பயணம் மாறிவிட்டது. அவர் டிவி பக்கம் ஒதுங்கி விட்டார். பல வேலைகள் பார்த்தாலும் அவருக்கு சினிமா செய்ய வேண்டும் என்பது தான் ஆசை. சரி வாருங்கள் பண்ணலாம் என்றேன், ஒரு கதை சொன்னார் அதைப் பண்ணலாம் என பல ஹீரோக்களிடம் கதை சொன்னோம், ஆனால் நடக்கவில்லை. கடைசியில் நீயே நடி என்றார், சரிண்ணே என்று சொல்லி ஆரம்பித்தது தான் இந்தப்படம்.

நாங்கள் ஆரம்பித்த போது ஒரு பட்ஜெட் இருந்தது, ஆனால் அது கை மீறிப்போய்விட்டது. எனக்கு பலர் உதவிக்கு வந்தார்கள். முதல் முறையாக ஒரு படத்தை ஷீட்டிங் எல்லாம் முடித்துவிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி முடித்துவிட்டு உங்களைச் சந்திக்கிறேன். எனக்கே இதுப் புதிது தான். இந்தப்படம் ஆரம்பித்த போது வெற்றிமாறனிடம் சொன்னேன், செய்யுங்கள் நன்றாக வருமென்றார். படம் முடிந்து அவருக்கு காட்டினேன், நானே ரிலீஸ் செய்கிறேன் என்றார். இன்றைய சினிமா வியாபாரம் தெரிந்த வெற்றிமாறன் போன்ற படைப்பாளி எங்கள் படத்தை ரிலீஸ் செய்வது, எங்களுக்குப் பெருமை.

என் அனைத்துப் படங்களுக்கும் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் யுவன் சங்கர் ராஜா தான் இப்படத்திறகும் இசை. முதலில் பாடலில்லாமல் இருந்தது, இறுதியில் மூன்று பாடல்கள் வந்துவிட்டன‌. அதை அட்டகாசமாக யுவன் செய்து தந்தார். சஞ்சிதா ஷெட்டி என்னைப்பற்றி எப்போதும் நல்லவிதமாக சொல்லமாட்டீர்களா என்பார். மிகத் திறமைசாலி அவர். இந்தப்படத்தில் இரவில் தான் ஷீட்டிங், ஆனால் முகம் சுளிக்காமல், அற்புதமாக உழைத்துத் தந்தார். நாயகனுக்கு இந்தப்படம் பெயர் சொல்லும் படமாக இருக்கும். வின்செண்ட் என் முதல் படத்தில் நடிக்க வேண்டியவர், ஆனால் அவரை தொடர்பு கொள்ளும் சிக்கல்களில் அவரை நடிக்க வைக்க முடியவில்லை, பின் ‘யோகி’ படத்தில் நடித்தார் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஒரு சிலருக்கு முகம் பார்க்க பயமாக இருக்கும் ஆனால் உண்மையில் அவர்கள் குழந்தையாக இருப்பார்கள், தீனா அப்படியானவர். எப்போதும் அண்ணா அண்ணா என்று அன்பைப் பொழிபவர், போலீஸாக அருமையாக‌ நடித்திருக்கிறார். ‘வட சென்னை’ படத்தில் தான் அவரை சந்தித்தேன், எனக்கு அவர் நடிப்பு பிடித்திருந்தது. இந்தப்படத்தில் எல்லா நடிகர்களையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார். உண்மையில் அட்டகாசமாக செய்துள்ளார். பிரதீப் அருமையாக சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார்.

‘விக்ரம்’ எடுத்த இடத்தில் தான் இப்படத்தை எடுத்தோம், அந்த இடம் என்று தெரியாத வண்ணம் கலை இயக்குநர் வீரமணி அருமையாக செய்து தந்தார். என் ஐந்து படங்களுக்கும் ராம்ஜி தான் கேமராமேன், ஒரு இரவில் நடக்கும் கதையை அருமையாக படம்பிடித்துக்காட்டியுள்ளார். எடிட்டர் அஹமது, மறைந்த நண்பர் ஜனநாதன் அறிமுகப்படுத்திய அருமையான கலைஞர், என்னுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். படம் அருமையாக வந்துள்ளது, பார்த்துவிட்டு சொல்லுங்கள். வெற்றியை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் அதுவும் அவரை ஹீரோவாக வைத்து எடுக்க வேண்டும் என்பது என் ஆசை.

இதன் பின்னர் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு அமீர் பதிலளிக்கும் போது.. பல வெற்றி படங்களை கொடுத்த அமீருக்கு வெற்றிமாறனின் உதவி தேவையா? என கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கும் போது சூப்பர் ஸ்டார் மற்றும் தளபதி (ரஜினி & விஜய்) ஆகியோருக்கே அடுத்த மாநில சூப்பர் ஸ்டார்கள் தேவைப்படும் போது இது ஒன்றும் தவறில்லை” என்றார்.

Even Rajini and Vijay need support of other state Superstars says Ameer

அமீர் நடிப்பிற்கு எப்போதும் எதிரி நான்… – ஒளிப்பதிவாளர் ராம்ஜி

அமீர் நடிப்பிற்கு எப்போதும் எதிரி நான்… – ஒளிப்பதிவாளர் ராம்ஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அமீர், சஞ்சிதா, சாய் தீனா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மாயவலை’.

விரைவில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற நடிகர் சத்யா பேசியதாவது…

இடையில் எனக்கு பெரிய பிரேக். நடுவில் ‘சந்தனதேவன்’ படத்தின் நடித்தேன், அதுவும் இடையில் நின்றுவிட்டது. என்ன செய்வது என்று தெரியாத போது தினமும் அமீர் சார் ஆபிஸ் போய்விடுவேன். பின் அவர் ரமேஷ் சாரிடம் எனக்கு இந்த வாய்ப்பை வாங்கித்தந்தார். இது என் ஆரம்பமாக இருக்குமென்று நம்புகிறேன். ஆதரவு தாருங்கள், அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி பேசியதாவது…

தாழ்வு மனப்பான்மை யாரிடமும் இருக்க கூடாது. உங்கள் திறமை பேசட்டும், பேசும். அமீர் நடிப்பிற்கு எப்போதும் எதிரி நான் தான். ஒரு நல்ல இயக்குநர் நடிக்கக்கூடாது என்றேன், ஆனால் வெற்றிமாறன் ‘வட சென்னை’ மூலம் மாற்றிவிட்டார். இந்தப்படத்திலும் அமீர் அருமையாக நடித்துள்ளார். வெற்றிமாறனுக்கு ஒரு வேண்டுகோள், நீங்கள் நடிக்க போய்விடாதீர்கள். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் பேசியதாவது…

மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு படம் செய்துள்ளேன், வாய்ப்பு தந்த அமீருக்கு நன்றி. வெற்றிமாறன் அமீரை ராஜனாக காட்டினார். இதில் இன்னொரு விதமான ராஜனை காட்டியுள்ளேன். நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள், அவரது நடிப்பு அருமையாக இருக்கும். வெற்றிமாறன் போன்ற தீவிரமான படைப்பாளி இந்தப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. எல்லோருக்கும் நன்றி.

Ameer should not act in movies says DOP Ramjee

More Articles
Follows